சூரியன், சித்திரை மாதத்தின் சில நாட்கள் மூலவர் மீது விழும் அற்புத காட்சியால், ஸ்ரீ உதயகிரி வேலாயுதசாமி என்ற திருநாமத்துடன் அழைக்கப்படுவது சிறப்பு.
திறக்கும் நேரம்:
காலை 7.30 மணி முதல் 12 மணி வரை, மாலை 5.30 மணி முதல் இரவு 7.30 மணி வரை திறந்திருக்கும்.
முகவரி:
அருள்மிகு முத்து வேலாயுத சுவாமி திருக்கோயில்,
உதயகிரி, மலைப்பாளையம்
உலக கோவில் கிராமம்,
கோபி வட்டம்,
ஈரோடு மாவட்டம் . 638452
போன்:
+91 9750467504
பொது தகவல்:
இங்கு வலது புறத்தில், ஸ்ரீ காசிவிஸ்வநாதர் ஆலயமும், இடது புறத்தில், ஸ்ரீ காசிவிசாலாட்சியும் எழுந்தருளி வருகின்றனர்.
பிரார்த்தனை
முருகப்பெருமானிடம் மனமுருகி எது வேண்டினாலும் அள்ளி கொடுப்பவர்.
நேர்த்திக்கடன்:
முருகனுக்கு அபிஷேகம் செய்து புது வஸ்திரம் சாற்றி நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.
தல வரலாறு:
இக்கோவில் பழமையான கல் கட்டட கலைக்கு எடுத்துக்காட்டாக, அற்புதமான வேலைப்பாடுகளுடன் , ஒரே நேர் கோட்டில் அமைந்த துõண்கள், மேற்கூரை என வடிவமைக்கப்பட்டுள்ளது. அக்னி, வாயு உள்ளிட்ட பஞ்சலிங்களும், ஒரே மண்டபத்தில் வரிசையாக அமைந்துள்ளன. மேலும், ஒரே லிங்கத்தில், 1008 லிங்கங்கள் அமைந்துள்ள, சகஸ்ர லிங்கம் அமைந்துள்ளது, இக்கோவிலின் சிறப்பாகும். மேலும், கருவறை, அர்த்தமண்டபம், மகா மண்டபம், திருக்கல்யாண மண்டபம், வாகன மண்டபம், அமுத மண்டபம் என, ஆகம விதிப்படி ஒரு ஏக்கர் பரப்பளவில் முழுவதும் கற்களால் அமையப்பெற்றுள்ள பழமையான கோவிலாகும். இங்கு, காலபைரவர் தனி சன்னதியிலும், சனீஸ்வரர், நவக்கிரகங்கள், தட்சினாமூர்த்தி, லிங்கோத்பவர் ஆகியோர் தனி சன்னதிகளில் எழுந்தருளி வருகின்றன.
இக்கோவிலின் மற்றொரு சிறப்பாக, தியான அறை உள்ளது. நில மட்டத்திற்கு கீழ், குகை போன்ற அமைப்பில் காணப்படுகிறது. காற்றோட்டம், அமைதி தவளும் இடமாக உள்ளது. மேலும், கோவிலுக்கு அருகில் தாமரைக்குளம் உள்ளது. வற்றாத ஊற்றுடன் மலை மேல் அமைந்துள்ள இக்குளத்தில், ஆண்டு முழுவதும் நீர் இருப்பது சிறப்பான ஒன்றாகும். இக்கோவிலில், குகை உள்ளதாகவும், அருகிலுள்ள நகரின் ஆட்சி மையமாக இருந்ததாகவும் பக்தர்கள் தெரிவித்தனர். கோவிலை சுற்றிலும் ஏராமான, பழங்கால கல் திட்டைகள் உள்ளதால், மிகப்பழமையான குடியிருப்பாக இருந்துள்ளது. இக்கோவிலில், திருக்குறள் மலைச்சங்கம் சார்பில், 1,330 குறள்கள், வெட்டப்பட்டு, குறள் மலையாக மாற்றும் பணிகளும் நடந்து வருகிறது.
சிறப்பம்சம்:
அதிசயத்தின் அடிப்படையில்:சூரியன், சித்திரை மாதத்தின் சில நாட்கள் மூலவர் மீது விழும் அற்புத காட்சியால், ஸ்ரீ உதயகிரி வேலாயுதசாமி என்ற திருநாமத்துடன் அழைக்கப்படுவது சிறப்பு.