கிழக்கு பார்த்த கருப்பராயன் , மேற்கு பார்த்த மகாமுனிஅமைந்துள்ளன.
பிரார்த்தனை
உடல்நிலை சரியில்லாமல் வருபவர்களுக்கு குணமாகும், வெள்ளி கிழமை அருள் வாக்குகூறுகின்றனர்.
நேர்த்திக்கடன்:
பால்குடம், கெடாவெட்டி தங்களது நேர்த்திக் கடனை செலுத்துகின்றனர்.
தலபெருமை:
பொதுவாக மாசாணியம்மன் கோயிலில் காணப்படும் குவலை ஏந்திய நாட்ராயன் சிலை இந்த கோயிலில் அமைந்துள்ளது. மேலும் ஊஞ்சல் , அரச மரத்தடியிலுள்ள கன்னிமார் சுயம்பு உள்ளிட்டவை இந்த கோயிலின் சிறப்புமிக்கதாக அமைந்துள்ளது.
தல வரலாறு:
பல நூறு வருடங்களாக அமைந்துள்ள கருப்பாரயன் சுயம்பு 35 வருடங்கள் முன்பு ரங்கராஜ் என்பவர் அந்த வனப்பகுதியோரம் சுயம்பு அமைந்துள்ளதை கண்டுள்ளார். அதை அவர் கும்பிட்டு சென்றார். ஆனால் பராமரிப்பு ஏதும் செய்யவில்லை. இதனால் திடிரென அவருக்கு பித்து பிடித்தது போல ஆனது. பின் அவரது குடும்பத்தினர் மற்றும் அப்பகுதி மக்கள் அனைவரும் சேர்ந்து அந்த கோவிலை புனரமைத்தனர். அந்த இடத்தில் கோவிலையும் நிறுவினர் பின்னர் ரங்கராஜ்க்கு உடல்நிலை சீரானது. அன்று முதல் வனகருப்பராயரை ஊரே வழிபட துவங்கியது. பொதுவாக இந்த கோவிலில் வெள்ளிகிழமை கூறப்படும் அருள்வாக்கு மிக சிறப்பானது என்றும் கூறுவர்.
இருப்பிடம் : காந்திபுரத்திலிருந்து வட வள்ளி வழியாக தொண்டாமுத்துர் பஸ்ஸில் (பஸ் எண் 64) பொம்மனாம்பாளையம் பஸ் ஸ்டாப்பில் இறங்கி ஆட்டோவில் 2 கி.மீ. தூரம் செல்ல வேண்டும். வடவள்ளியிலிருந்து மினி பஸ்களும் பொம்மனாம்பாளையத்திற்கு வருவது உண்டு.