மார்கழி மகா உற்சவம்,மாசி மகம் புரட்டாசி ஐந்து வாரம்,கூடார வெள்ளி,தை பொங்கல்,வைகுண்ட ஏகாதசி வார வெள்ளிக்கிழமை பஐனை வழிபாடு,பௌர்ணமி,அமாவசை,ஆடிபூரம் மகாவீர் ஜெயந்தி.
திறக்கும் நேரம்:
காலை: காலை 5 மணி முதல் 11 வரை மாலை: 5 மணி முதல் 8 வரை
முகவரி:
அருள்மிகு செங்கோண்ட அம்மன் கோவில்.
பொரிய மாரியம்மன் கோவில் வீதி, ஒண்டிப்புதூர், கோயம்புத்தூர் 641016
போன்:
+91 99525 29732
பொது தகவல்:
கிழக்கு முகம் பார்த்த ஸ்ரீ செங்கோண்டம்மன்,சப்த கன்னிகள் மற்றும் ஸ்ரீ கருட பெருமாள் ஜெயன் – விஜயன் அமைந்துள்ளனர். வடக்கு முகம் பார்த்து ஸ்ரீ பக்த ஆஞ்சநேயர். மேற்கு முகம் பார்த்து கருடாழ்வார்
பிரார்த்தனை
பால் அபிேஷகம் சிறப்பு பெற்றதாகும்,மலர் அபிஷேகம் சிறப்பானது. அனைத்து வேண்டுதலுக்கும் மலரால் அர்ச்சனை செய்யப்படுகிறது. குழந்தை பாக்கியம், தொழில் அபிவிருத்தி, திருமணத் தடை.
நேர்த்திக்கடன்:
பால் அபிஷேகம் – தாமரை மல்லிகை பூக்களால் மாலை அணிவித்து வழிபாடு.
தலபெருமை:
அனைத்து வேண்டுதலுக்கும் மலரால் அர்ச்சனை செய்யப்படுகிறது.தாசர்களால் பிரதி புரட்டாசி மாதமும் மாசி மகத்தின் போதும் பந்த சேர்வைகள் படி எடுத்து வருகின்றனர்,முத்திரைகள் வைக்கப்படுகிறது, முத்திரைதாளர்கள் என்பவர்கள் கூரத்தாள்வான் பரம்பரை பட்டர்சுவாமி வழி வந்த ஆழ்வார்கள், சங்கு சக்கரம் பஞ்சகாட்சரம் செய்து பெருமாள் அடிமலர் பாக்கியம் பெற்றவர்கள்.
தல வரலாறு:
கடந்த 100 ஆண்டு காலத்திற்கு முன்னரே ஸ்தல் விருட்சமாக முதலில் ஸ்ரீ கருட பெருமாள் சுயம்பு உருவானது. இரண்டாவதாக செங்கோண்டம்மனும் சப்த கன்னிகளும் சுயம்புவாக உருவானது,இத்தலம் ஜங்கல குல குலதெய்வமாக வணங்கப்பட்டது, பாலமலை கூத்தாழ்வோர் பரம்பரை தாசர்களால் வழிபாடு செய்யப்பட்டு சேவை வழிபாடுகள் நடத்தப்படுகிறது, செங்கோண்டம்மன் செங்கோதை நாச்சியார் மகாலட்சுமியின் அவதாரமாகும், கூவத்தாழ்வோர் விருட்சமாக செங்கோதை நாச்சியார் என்ற பெயரில் சுயம்புவாக உருவாகினாள், காலப் போக்கில் செங்கோதை நாச்சியார் என்பது வழக்கத்தில் செங்கோண்டம்மன் என அழைக்கப்பட்டு இத்தலம் பெயர் பெற்றது.
இருப்பிடம் : கோவை உக்கடம் மற்றும் ரயில்நிலையத்திலிருந்து ஒண்டிப்புதூர் செல்லும் சாலையில் பயணித்தால் 30 நிமிடத்தில் கோயிலை சென்றடையலாம். 1சி,30 8ஏ பஸ்கள் செல்லும் மற்றும் கோவை – திருச்சி ரோட்டில் கோயில் அமைந்துள்ளது.