பங்குனிமாத திருவிழா 15 நாட்கள் நடைபெறும். அன்று அம்மன் அழைத்தல், கரகம் எடுத்தல், கலை நிகழ்ச்சிகள் போன்றவை நடத்தப்படுகின்றன. இது தவிர அம்மாவாசை மற்றும் பெளர்ணமி தினங்களில் அம்மனுக்கு அபிேஷக பூஜையும், விளக்கு பூஜையும் நடத்தப்படுகிறது. மேலும் இங்கு மார்கழி பூஜை, திருப்பாவை, திருவெம்பாவை பாடுதல் உண்டு.
தல சிறப்பு:
வானில் கருக்கல் தோன்ற காரணமாக இருப்பது இந்த அம்மன் என்பதாலேயே கருவலுார் அம்மன் என அழைக்கப்படுகிறதாக கூறப்படுகிறது. இக்கோயிலில் நடந்த கும்பாபிசேகத்திற்கு பின் மழை தொடர்ந்து கோவையில் பெய்தது குறிப்பிடத்தக்கது.
திறக்கும் நேரம்:
காலை 6 மணி முதல் 8 மணி வரை, மாலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.
மூலவர் அம்மன் கிழக்கு நோக்கி அமைந்துள்ளார். முதலில் பால விநாயகர் விக்கிரகம் அமைக்கப்பட்ட பின் பாலமுருகன், கன்னிமூல கணபதி, ராகு கேது கணபதி, நர்த்தன விநாயகர், கெளமாரியம்மன், வைஷ்ணவி, பிரம்மி, விஷ்ணுதுர்க்கை ஆகிய பரிவார தெய்வங்கள் அமைத்துள்ளனர். கோயில் முகப்பில் ஆகாய முனிஸ்வரர் அம்மனை காத்து அருள்பாலிக்கிறார்.
பிரார்த்தனை
கண் நோய் தீர பிராத்தனை. குழந்தை பாக்கியம், தொழில் வளர்ச்சி, உடல் நலம் ஆகிய சிறந்து விளங்க இங்கு பக்தர்கள் பிராத்தனை செய்கின்றனர்.
நேர்த்திக்கடன்:
கண் அடக்கம் சாத்துதல், கோரிக்கை வேண்டுதல் நிறை வேற மடி பிச்சை எடுத்தல், அழகு குத்துதல் ஆகியவை உண்டு.
தலபெருமை:
அவிநாசி அருகே உள்ள கருவலுாரிலிருந்து இந்த அம்மன் வந்ததாக ஐதீகம். இவ்வூரை சேர்ந்த பெரியவர் ஒருவரின் கனவில் கருக்கலில் (இரவு) தோன்றி அம்மன் கூறியதை அடுத்து அவிநாசி கருவலுார் சென்று அங்குள்ள அம்மன் சன்னதியில் மண் எடுத்து வந்து இந்த அம்மனை வழிப்பட்டதாக தகவல் உண்டு. இங்கு உள்ள அரச மரத்தின் அருகே இருந்த ஆகாய முனிஸ்வரர் இரவில் இக் கருவலூர் அம்மனுடன் இரவில் வலம் வருவதாக இன்றும் இவ்வூர் பெரியோர்களால் நம்பப்படுகிறது.
தல வரலாறு:
சுமார் 50 ஆண்டுகளுக்கு முன் தென்னை ஓலை வேயப்பட்ட குடிசையில் வைத்து இம்மனை வழிபட்டுள்ளனர். பின்பு 1978 ம் ஆண்டு அம்மன் சன்னதி மட்டும் உருவாக்கப்பட்டு கும்பாபிேஷக விழா செய்யப்பட்டது. பின் 1996 ம் ஆண்டு முன் மண்டபம் விநாயகர் சன்னதி ஆகியவை கட்டப்பட்டு கும்பாபிேஷகம் செய்யப்பட்டது. பின் 2012ம் ஆண்டு இக்கோயில் முழுமையாக இடிக்கப்பட்டு, அம்மன் சிலையும் பெரிதாக வடிவமைக்கப்பட்டு மற்ற பரிவார தெய்வங்களுடன் 2017 ம் ஆண்டு கும்பாபிேஷகம் செய்யப்பட்டது.
சிறப்பம்சம்:
அதிசயத்தின் அடிப்படையில்:வானில் கருக்கல் தோன்ற காரணமாக இருப்பது இந்த அம்மன் என்பதாலேயே கருவலுார் அம்மன் என அழைக்கப்படுகிறதாக கூறப்படுகிறது. இக்கோயிலில் நடந்த கும்பாபிசேகத்திற்கு பின் மழை தொடர்ந்து கோவையில் பெய்தது குறிப்பிடத்தக்கது.
இருப்பிடம் : சிங்காநல்லுாரிலிருந்து உடையாம்பாளையத்திற்கு பஸ்கள் நேரடியாக அடிக்கடி உண்டு. காந்திபுரம் மற்றும் உக்கடம் பகுதியிலிருந்து குறிபிட்ட நேரத்திற்கு மட்டுமே பஸ்கள் உண்டு. சவுரிபாளையம் வந்தால் நடந்து செல்லும் தொலைவில் இக்கோயில் உள்ளது.