அம்மாவாசை, பெளர்ணமி, ஆடி வெள்ளி, சித்திரை மாத திருவிழா, சங்கரஹடா சதுர்த்தி, அனுமன் ஜெயந்தி, ராகு–கேது பூஜை, கால பைரவர் சிறப்பு வழிபாடு.
தல சிறப்பு:
இந்த அம்மனின் பெயரிலேயே இந்த ஊர் காமாட்சிபுரி என அழைக்கப்பட்டது.
திறக்கும் நேரம்:
காலை: 6 மணி முதல் 10 மணி வரை மாலை: 5 மணி முதல் 8 மணி வரை.
முகவரி:
காமாட்சி அம்மன் கோயில்
திருச்சி மெயின் ரோடு,
காமாட்சிபுரம், ஒண்டிப்புதூர்,
கோவை. 641014
போன்:
+91 96883 25427
பொது தகவல்:
ஐந்து அடி உயர கால பைரவர் சிலை இருப்பது சிறப்பு. மேலும் ஆஞ்ச நேயருக்கு தனி சன்னதி, விநாயகர், காவல் தெய்வம், நந்த போன்றவைகள் உண்டு.
பிரார்த்தனை
குழந்தை பேறு, தொழில் வளர்ச்சி, உடல் நலன், திருமண தடை உள்பட சகல விதமான பிராத்தனைகளுக்கும் இங்கு பரிகாரம் உண்டு.
நேர்த்திக்கடன்:
அம்மனுக்கு புடவை சாத்துதல், பிரசாதம் வழங்குதல், திருவிழா காலங்களில் பூவோடு எடுத்தல், அழகு குத்துதல் என பக்தர்கள் நேர்த்தி கடன் செலுத்துகின்றனர்.
தலபெருமை:
சுமார் 300 வருடங்களுக்கு முன் காஞ்சிமா நதி எனும் நொய்யல் ஆற்றங்கரையில் வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் அம்மன். இந்த அம்மன் திருத்தலத்தில் உள்ள காமாட்சி அம்மனை அடிப்படையாக கொண்டே இவ்வூர் காமாட்சி புரி என அழைக்கப்பட்டது.
தல வரலாறு:
100 வருடங்களுக்கு முன்பு சூலுாருக்கு அடுத்து கோவை நகரை நோக்கி இருந்த இப்பகுதியில் கரும்பு ஆலைகளுக்கு வேண்டிய மரச் சாமான்கள் செய்து கொடுக்கும் தட்சர்கள் இப்பகுதியில் பட்டறைகள் அமைத்து தொழில் செய்து குடும்பத்துடன் வசித்து வந்தனர். பின் தங்களின் குல தெய்வத்தை வழிபட எண்ணிய இவர்கள் அப்போதைய காஞ்சிமா நதி (நொய்யல் ஆறு) கரையில் இவ்வம்மனை உருவாக்க எண்ணி, புகழ் பெற்ற பேரூர் கோயில் சபஸ்திகளில் ஒருவரை நாடி, இவ்வம்மனை வடிவமைத்து இங்கு வைத்து வழிபட துவங்கியுள்ளனர். சிறிய மேடை அமைத்து வழிபட துவங்கி இக்கோயிலில் பின் விநாயகர், அனுமன், கால பைரவர் போன்ற சன்னதிகள் அமைக்கப்பட்டு, இன்று இப்பகுதியில் சிறந்த கோயிலாக உருவெடுத்துள்ளது.
சிறப்பம்சம்:
அதிசயத்தின் அடிப்படையில்:இந்த அம்மனின் பெயரிலேயே இந்த ஊர் காமாட்சிபுரி என அழைக்கப்பட்டது.
இருப்பிடம் : கோவையிலிருந்து திருச்சி ரோடு மார்க்கமாக செல்லும் அனைத்து பேருந்துகளும் இங்கு நின்று செல்லும். ஒண்டிப்புதுார் அடுத்த காமாட்சிபுரி என்ற ஸ்டாப்பில் இறங்க வேண்டும். சிங்காநல்லுார் பஸ் ஸ்டாண்டிலிருந்து 10 நிமிடத்திற்கு ஒரு பஸ் உள்ளது.