Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

முதல் பக்கம் >> அருள்மிகு மலையாள தேவி துர்காபகவதி திருக்கோயில்
  • விபரம்
  • செல்லும் வழி
  • மேப்
  • படங்கள்
  • அருகில் உள்ள கோயில்
  English Version
அருள்மிகு மலையாள தேவி துர்காபகவதி திருக்கோயில்
 
[Image1]
 
 
 
மூலவர்: மலையாள தேவி துர்காபகவதி அம்மன்
  தல விருட்சம்: விருச்சிக மரம்
  ஊர்: நவகரை
  மாவட்டம்: கோயம்புத்தூர்
  மாநிலம்: தமிழ்நாடு
 
 திருவிழா:
     
  இங்கு சனிக்கிழமைதோறும் சனி யாகபூஜை நடைபெறுகிறது. இதில் கலந்து கொள்பவர்களுக்கு அனைத்து கிரக தோஷங்களும் விலகி, சகல ஐஸ்வரியங்களும் கிடைக்கிறது என பலனடைந்தவர்கள் கூறுகின்றனர்.  
     
 தல சிறப்பு:
     
  ஆதி சங்கரர் இமயமலையிலிருந்து கன்னியாகுமரி வரை பாதயாத்திரை வரும் வழியில் திருப்பத்தூரில் விருச்சிக மரத்தை பிரதிஷ்டை செய்தார். அதன் நினைவாக இத்தலத்திலும் விருச்சிக மரம் உள்ளது. இந்த மரத்தை வழிபட்டால் சிவனையே நேரில் தரிசித்த பலன் என்பது ஐதீகம்.  
     
திறக்கும் நேரம்:
    
 காலை 5.30 முதல் 12.30 மணிவரையிலும், மாலை 5 முதல் 7.30 மணி வரையிலும் செல்லலாம். 
   
முகவரி:
   
  அருள்மிகு மலையாள தேவி துர்காபகவதி அம்மன் திருக்கோயில், நவகரை-641105, கோயம்புத்தூர் மாவட்டம்.  
   
போன்:
   
  + 91 - 422 - 265 6844. 
    
 பொது தகவல்:
     
 

மகாகணபதி, ஐயப்பன், காவல்ராயன், கயிலைநாதர், புற்று லட்சுமிநாராயணன் என ஒவ்வொருவருக்கும் தனி தனி சன்னதி உள்ளது.






 
     
 
பிரார்த்தனை
    
  இங்கு கன்னிமாதிசையில் குருவும், கேதுவும், சிவனும் கூடிய கன்னி சர்ப்பம் உள்ளது. இதை வணங்குவோர்க்கு அனைத்து சுபகாரியங்களும் நடைபெறும்.

இங்குள்ள பகவதி அம்மனை செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் வழிபட்டால் தோஷம் நிவர்த்தியாவது ஓர் சிறப்பம்சமாகும்.
 
    
நேர்த்திக்கடன்:
    
  ஒவ்வொரு சித்ரா பவுர்ணமியன்றும் இங்குள்ள பகவதி அம்மனின் திருவுருவில் சாத்தப்பட்ட சந்தனத்தை பிரசாதமாக கொடுக்கின்றனர். பலவித மூலிகைகளால் செய்யப்பட்ட இந்த சந்தனத்தை உட்கொண்டால் பலவித நோய்கள் தீரும் என்பது நம்பிக்கை. 
    
 தலபெருமை:
     
  ஆதி சங்கரர் இமயமலையிலிருந்து கன்னியாகுமரி வரை பாதயாத்திரை வரும் வழியில் திருப்பத்தூரில் விருச்சிக மரத்தை பிரதிஷ்டை செய்தார். அந்த விருச்சிக மரம் இத்தலத்திலும் உள்ளது.

இந்த மரத்தை வழிபட்டால் சிவனையே நேரில் தரிசித்த பலன் என்பது ஐதீகம். இந்தக்கோயிலை உருவாக்கிய ராமானந்த மூர்த்தி சுவாமிகள் இங்கேயே தங்கி பக்தர்களுக்கு அருளாசி வழங்கி வருகிறார்.
 
     
  தல வரலாறு:
     
  முன்னொரு காலத்தில் அசுரர்களுக்கும் தேவர்களுக்கும் இடையே பாற்கடல் கடைந்து அமுதம் எடுப்பதில் போட்டி நடந்தது. அப்போது அந்த அமுதத்தை அருந்த வேண்டி தேவர்கள் இந்த உலகத்தை ஆளும் மலையாள தேவி துர்க்கா பகவதி பிராட்டி அம்மனை வேண்டி மலையாள தேசத்தில் யாகம் செய்தார்கள்.

யாகத்தின் போது பகவதி அம்மன் தோன்றி, தேவர்களையும் மனிதர்களையும் காப்பதற்கு சிவனுக்கும் மாவிஷ்ணுவுக்கும் கட்டளையிட்டாள். அந்த கட்டளையை நிறைவேற்றுவதற்காக சிவனும் விஷ்ணுவும் கிளம்பும் நேரத்தில் சிவனின் வாகனமான நந்தி, அவர்களிடம் பெருமானே! அன்னை பகவதியின் தரிசனம் உங்களுக்கு மட்டும் கிடைத்துள்ளது. ஆனால் சிவ வாகனமான எனக்கு கிடைக்க வில்லையே என மிகவும் வருந்தியது.

உடனே லட்சுமி நாராயணன் ""நந்தியே! நாங்கள் கண்ட காட்சியை நீயும் கண்டு மகிழ்வாய்,'' என்று கூறினார். அதைக்கேட்ட நந்தி மிகுந்த உற்சாகத்துடன் பூமியின் வெளிப்பகுதியில் கொம்பு தெரிய மாபெரும் வடிவெடுத்தது.

அதைக்கண்ட லட்சுமி நாராயணன் குறுக்கிட்டு, ""நந்தீஸ்வரா, நீ சாந்தமாகி மண்டியிட்டு பூமியை நோக்கி உற்றுப்பார்,'' என்றார். நந்தியும் இந்த இடத்தில் இருந்துகொண்டு மகா விஷ்ணு கூறியபடி செய்தது. அப்போது சிவனுக்கும் லட்சுமி நாராயணனுக்கும் பகவதி அம்மன் காட்சி கொடுத்தது. நந்திக்கும் தெரிந்தது.

நந்தி கண்ட காட்சியை பார்த்த சனிபகவான் மகிழ்ந்து தன்னை மறந்த நிலையில், ஒய்யாரமாக தனது வலது காலை தூக்கி காகத்தின் மீது வைத்து நின்றார். மேலும், "இந்த காட்சியை காணும் பக்தர்கள் நெய் விளக்கேற்றி வலது புறமாக என்னை சுற்றி வழிபட்டால், ஏழரை நாட்டு சனி, செவ்வாய் தோஷம் மற்றும் சகல தோஷங்களும் நீங்கி நலம் உண்டாகும்' என்றார்.
 
     
சிறப்பம்சம்:
     
  அதிசயத்தின் அடிப்படையில்: ஆதி சங்கரர் இமயமலையிலிருந்து கன்னியாகுமரி வரை பாதயாத்திரை வரும் வழியில் திருப்பத்தூரில் விருச்சிக மரத்தை பிரதிஷ்டை செய்தார். அதன் நினைவாக இத்தலத்திலும் விருச்சிக மரம் உள்ளது. இந்த மரத்தை வழிபட்டால் சிவனையே நேரில் தரிசித்த பலன் என்பது ஐதீகம்.
 
     
     
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar