பூலோகத்தில் அம்மன் அவதரித்து நதிகளுக்குப் புனிதத்தன்மை அளித்தது ஆடியில் தான். இதனால் ஆடிவெள்ளி, ஆடிப்பூரம், ஆடிப்பெருக்கு நாட்களில் அம்மன், நதிவழிபாடு சிறப்பாக நடக்கிறது. அப்போது அம்மனுக்கு வளையல், பாசிப்பருப்பும், நதிகளுக்கு காதோலை, கருகமணி போன்ற திரவியங்களையும் படைத்து வழிபட்டு பெண்களுக்கு பிரசாதமாக அளிப்பர். இதனால் பருவமழை பெய்யும். விவசாயம் செழிக்கும். எங்கும் சுபிட்சம் நிலவும்.