புரட்டாசி சனி, அவிதவா நவமி; சுமங்கலியாக பரமபதம் அடைந்த மூதாதையர்களின் அருளாசி பெறும் நாள்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
07அக் 2023 10:10
மகாளய பட்சத்தின் ஒன்பதாம் நாள் அவிதவா நவமி. சுமங்கலியாக இறந்த மூதாதையர்களின் அருளாசி பெறும் நாள். சுமங்கலிகளுக்கு உணவு, மங்கலப் பொருள் வழங்க மகாலட்சுமியின் அருள் கிடைக்கும். மாஹாளைய பக்ஷத்தில் ஒன்பதாம் நாளான அவிதவா நவமியிலும் சுமங்கலி பிரார்த்தனை செய்யலாம். இந்தச் சுமங்கலி பிரார்த்தனை சிராத்தத்திற்கு சமமானது. நமது மூதாதையர்களின் அருளாசியே நம்மை காக்கும் கவசங்களாகும். ஒருவன் எந்த ஒரு செல்வத்தை இழந்தாலும், வறுமையின் எல்லையில் நின்று வாழ்வை நொந்தாலும், அவனது முன்னோர்களான பித்ருக்களின் ஆசீர்வாதம் மட்டும் இருந்தாலே போதும். மஹாளய பட்சத்தில் நவமி நிதியில் சுமங்கலி வழிபாடு செய்தால், வீட்டில், மஹாலட்சுமி நித்யம் வாசம் செய்யும் அருள் கிடைக்கும். விஷ்ணுவின் அருள்பெற உகந்த மாதம் புரட்டாசி. இன்று புரட்டாசி சனியில் பெருமாளை வழிபட நினைத்தது நடக்கும். இன்று சுமங்கலியாக பரமபதம் அடைந்த மூதாதையர்களை நினைத்தாலும் தோஷம் நீங்கி மங்கள வாழ்வு கிடைக்கும்.