சிதம்பரம் நடராஜரின் திருவுருவ அமைப்பிலேயே உலகின் தோற்றம், இயக்கம், நிறைவு அனைத்தும் அடங்கியுள்ளது. இதை உணர்வதற்கு சிவபெருமானுக்குரிய ‘ஓம் நமசிவாய’ என்னும் மந்திரத்தை ஓதி உண்மை அறிவு பெற வேண்டும். இந்த ரகசியம் யந்திர வடிவில் நடராஜரின் வலப்புறம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. இதையே சிதம்பர ரகசியம் என்பர்.