அறுபது வயதிற்கு மட்டும் முக்கியத்துவம் கொடுத்து மணிவிழா நடத்துவது ஏன்?
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
07அக் 2020 04:10
இது அனைவரும் கட்டாயம் செய்து கொள்ள வேண்டிய வைபவம்.ஜன்ம வர்ஷ ஜன்மமாஸ ஜன்ம நட்சத்திர தின புனர்தர்சன சாந்த்யர்த்தம் ஷஷ்ட்யப்த பூர்த்தி சாந்தி ஹோமம் கரிஷ்யே என்று சங்கல்பம் செய்து கொள்ள வேண்டும் என சாந்தி ரத்னாகரம் என்னும் நுõல் கூறுகிறது. அதாவது தமிழ் வருடங்கள் அறுபது. ஒருவர் துர்முகி ஆண்டு வைகாசி மாதம் புனர்பூச நட்சத்திரத்தில் பிறந்தார் என்றால் அவரது அறுபது வயது நிறைவில் மீண்டும் துர்முகி ஆண்டு வரும். அதில் அதே வைகாசி மாதம் புனர்பூச நட்சத்திரத்தன்று அவரது பிறந்த நாள் மீண்டும் வருகிறது. இது நம் வாழ்வில் காணும் ஒரு அபூர்வமான நாள். மீண்டும் இந்த சேர்க்கையைக் காண 120 வயது வரை இருக்க வேண்டும். எனவே அறுபதாவது பிறந்த நாளில் நாம் கடந்து வந்த 60 வருடங்கள், 12 மாதங்கள், 27 நட்சத்திரங்கள், 12 ராசிகள், இரண்டு அயனங்கள், ஆறு பருவங்கள், ஆயுள் தேவதை என எல்லா தெய்வங்களுக்கும் பூஜை, ஹோமம் செய்து மீண்டும் ஒருமுறை மனைவிக்கு மாங்கல்யம் சூட்டி பெரியவர்களிடம் ஆசி பெற்றால் எல்லா தோஷமும் நீங்கி நீண்டகாலம் வாழலாம்.