மது, கைடபர், சண்டன், முண்டன், மகிஷாசுரன் போன்ற அரக்கர்களை அழிக்க விரும்பிய தேவர்கள் ஒன்பது நாட்கள் விரதமிருந்து அம்பிகையை வழிபட்டனர். சீதையை மீட்பதற்காக ராமர் இலங்கை செல்லும் முன்பாக, நாரதரின் உபதேசப்படி அம்பிகையை ஒன்பது நாட்கள் வழிபட்டார். இதனையே நவராத்திரி என்னும் பெயரில் கொண்டாடுகிறோம்.