பதிவு செய்த நாள்
02
டிச
2020
04:12
1 அங்கோர்வாட் விஷ்ணு கோயில், கம்போடியா
* 1113 – 1150ல் இரண்டாம் சூரியவர்மனால் கட்டப்பட்டது.
* 162.6 ஹெக்டேர் பரப்பு கொண்டது.
* கம்போடியா நாட்டின் சின்னமாக உள்ளது.
* பள்ளி கொண்டநிலையில் விஷ்ணு இங்கிருக்கிறார்.
2. ஸ்ரீரங்கநாதர்கோயில், ஸ்ரீரங்கம், திருச்சி
* 108 திவ்ய தேசங்களில் முதல் தலம்.
* 156 ஏக்கர் பரப்பு கொண்டது.
* தென்னிந்தியாவின் பெரியராஜ கோபுரம் இங்குள்ளது (239 அடி)
* 21 கோபுரங்களும், 7 மதில் சுவர்களும் உள்ளன.
3. பிருகதீஸ்வரர் கோயில், தஞ்சாவூர்
* 11ம் நுாற்றாண்டில் முதலாம் ராஜராஜ சோழனால் கட்டப்பட்டது.
* 44 ஏக்கர் பரப்பு கொண்ட இங்கு மூலவர் 54 அடி சுற்றளவுள்ள ஆவுடையுடன் 23 அடி உயர பாணத்துடன் இருக்கிறார்.
* 20 டன் எடையில் ஒரே கல்லால் ஆன நந்தி சிலை உள்ளது.
* தட்சிண மேரு என்னும் 216 அடி உயர விமானம் உள்ளது.
4. நடராஜர் கோயில், சிதம்பரம்
* பூலோக கைலாயமான இதுவே முதல் சிவத்தலம்.
* 40 ஏக்கர் பரப்பு கொண்ட இங்கு சிவனின் ஐந்து சபைகள் உள்ளன.
* சம்பந்தர், நாவுக்கரசர், சுந்தரர், மாணிக்கவாசகரால் பாடல் பெற்றது.
* கனக சபையின் பொற்கூரை பராந்தக சோழனால் கட்டப்பட்டது.
* கிழக்கு கோபரத்தில் 108 சிவதாண்டவங்கள் இடம் பெற்றுள்ளன.
5. அக்ஷர்தாம் கோயில், டெல்லி
* மகான் சுவாமி நாராயணருக்காக கட்டப்பட்டது.
* 23 ஏக்கர் பரப்பு கொண்டது.
* கருவறையில் 7 அடி உயர தங்கச்சிலை உள்ளது.
* நினைவிடம், ஆராய்ச்சி மையம், கண்காட்சி அரங்கம், 15 ஏக்கர் பூங்கா உள்ளன.