வழிபாடு முடிந்ததும், கோயிலில் சிறிது நேரம் அமர்ந்த பின்னரே வீட்டுக்கு புறப்படுவோம். இதற்கு காரணம் என்ன தெரியுமா... கண்ணுக்குத் தெரியாத கடவுளின் துாதர்கள் நம்முடன் இருந்து வழிகாட்டுகின்றனர். கோயிலில் வழிபாடு முடிந்ததும் துாதர்களிடம் விடை பெறும் விதமாக சிறிது நேரம் உட்கார வேண்டும். அப்போது, “தெய்வத்தின் கட்டளையை நிறைவேற்ற காத்திருக்கும் துாதர்களே! எங்கள் வேண்டுகோளை ஏற்று அருள்புரிய வேண்டும்” என பிரார்த்திக்க வேண்டும். அதன்பின் சிறிதுநேரம் தியானம் செய்து விட்டு புறப்பட வேண்டும்.