‘வி’ என்றால் ‘மேலான’, ‘நாயகர்’ என்றால் ‘தலைவர்’ என்பது பொருள். மேலான தலைவர் என்னும் பொருளில் ‘விநாயகர்’ என பெயர் சூட்டப்பட்டது. விநாயகருக்கு அர்ச்சனை செய்யும் போது ‘ஓம் அநீஸ்வராய நம’ என்றொரு திருநாமம் உண்டு. ‘அநீஸ்வராய’ என்றால் ‘இவருக்கு மேல் ஒரு தலைவர் இல்லை’ என்பது பொருள். ஆதிசங்கரர் பாடிய கணேச பஞ்ச ரத்தினம் ஸ்தோத்திரத்தில் ‘அநாயக ஏக நாயகம்’ என விநாயகரை குறிப்பிடுகிறார். ‘தனக்கு மேல் ஒரு தலைவர் இல்லாத ஒரே கடவுள்’ என்பது இதன் பொருள். சிவ கணங்களின் தலைவர் என்பதால் ‘கணபதி’ என்றும், தடைகளை போக்குபவர் என்பதால் ‘விக்னேஸ்வரர்’ என்றும் விநாயகர் அழைக்கப்படுகிறார்.