தட்சன் நடத்திய யாகத்தில் அசுரர்களுக்கு அவிர்பாகத்தை கொடுத்தவர் அக்னி. இதனையறிந்த சிவபெருமானுக்கு கோபம் உண்டானது. ஏனெனில் தட்சன் அவருக்கு அழைப்பு விடுக்கவில்லை. அக்னியைக் கொல்ல முடிவு செய்தார் சிவன். விஷயம் அறிந்த அக்னி உடனடியாக கிளி வடிவெடுத்து சிவபூஜை செய்தான். தன் செயலுக்கு மன்னிப்பு கேட்டு அழுதான். சிவன் மன்னிப்பு அளித்தார். திருவாரூர் மாவட்டம் கொல்லுமாங்குடி அருகிலுள்ள கீரனுார் சிவலோகநாதர் கோயிலில் அக்னி வழிபட்ட சிவனைத் தரிசிக்கலாம். அறியாமல் செய்த தவறுக்கு மன்னிப்பு வேண்டுபவர்கள் வழிபட்டால் இவரிடம் விமோனசம் பெறலாம்.