ஒரு ராசியைக் கடக்க சூரியன் எடுத்துக் கொள்ளும் காலம் ஒரு மாதம். ஒரு ராசியிலிருந்து அடுத்த ராசிக்கு சூரியன் பிரவேசிப்பதை (நுழைவதை) மாதப்பிறப்பு அல்லது விஷு புண்ணியகாலம் என்கிறோம். இந்நாளில் பிதுர் தர்ப்பணம் கொடுப்பது, கோயில் வழிபாடு செய்வது, மந்திர உபதேசம் பெறுவது சிறப்பு.