அமாவாசைக்குப் பிறகு வரும் ஆறாம் நாளில் முருகனை வேண்டியிருப்பது சஷ்டி விரதம். குழந்தைப் பேறு வேண்டும் தம்பதியர் இதை கடைபிடிப்பர். இதன் அடிப்படையில் சொல்லப்படும் பழமொழி ‘சட்டியில் இருந்தால் தான் அகப்பையில் வரும்’ என்பதாகும். சஷ்டி விரதம் இருந்தால் அகப்பையில் {கருப்பையில்} குழந்தை தோன்றும் என்பது இதன் பொருள்.