மந்திர தந்திரத்தால் எல்லாவற்றையும் சாதிக்க முடியாது. அதிர்ஷ்டத்தை நம்பி சோம்பேறியாக இருக்கக் கூடாது. மந்திரித்தல், நேர்ந்து கொள்ளுதல் போன்றவை துணை புரியுமே தவிர செயலை சாதித்துக் கொள்ள உதவாது. கால்பங்கு மந்திரம், முக்கால்பங்கு உழைப்பு சேர்ந்தால் தான் வெற்றி. அதாவது மந்திரம் கால் மதி முக்கால்.