எமதர்மனின் நான்கு பற்கள் ஆபத்தானவை. அவை உக்ர ரதம், ருத்ர ரதம், பீம ரதம், விஜய ரதம். ‘ரதம்’ என்பது பல்லைக் குறிக்கும். இவை ஒவ்வொன்றினாலும் குறிப்பிட்ட வயதில் கண்டம் ஏற்படுவதால் ஆயுள் ஹோமம் செய்வது அவசியம். 59 வது வயதில் உக்ரரத சாந்தி, 69ல் ருத்ரரத சாந்தி, 70 ல் பீமரத சாந்தி, 75ல் விஜயரத சாந்தி ஹோமம் செய்வர்.