வைகுண்ட ஏகாதசியன்று பெருமாள் கோயில்களில் சொர்க்கவாசல் திறப்பது வழக்கம். ஆனால் சிவன் கோயிலான திருவண்ணாமலையில் இதே நாளில் சொர்க்கவாசல் திறக்கப்படுகிறது. இவரது சன்னதிக்கு பின்புறம் பாமா, ருக்மணியுடன் வேணுகோபாலர் சன்னதியும் உள்ளது. இதன் அருகே கருடாழ்வாரும், ஆஞ்சநேயரும் உள்ளனர். வைகுண்ட ஏகாதசியன்று காலையில் வேணுகோபாலர் சன்னதியில் ஒரு தீபம் ஏற்றுவர். அந்த தீபத்தையே பெருமாளாகக் கருதி பிரகாரத்திலுள்ள வைகுண்டவாசல் வழியே கொண்டு வருவர். பஞ்சபூத தலங்களில் இது அக்னித்தலம் என்பதால் சிவபெருமானைப் போல் பெருமாளையும் இங்கு தீபமாக வழிபடுகின்றனர்.