வேடுவனாக வாழ்ந்த வால்மீகி சிவனை நோக்கி தவம் இருந்த தலம் திருப்புத்துார். சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகில் இத்தலம் உள்ளது. கொன்றை வனமான இங்கு, புற்றின் அடியில் சிவன் காட்சியளித்தால், ‘திருப்புற்றுார்’ என்ற பெயர் உண்டானது. பின் திருப்புத்துார் என மருவியது. இங்கு மூலவருக்கு ‘திருத்தளிநாதர்’ என்பது திருநாமம். இங்குள்ள யோகபைரவர் கால்பெருவிரலைத் தரையில் ஊன்றியபடி மேற்கு நோக்கி காட்சியளிக்கிறார். சூரபத்மன் தேவலோகத்தின் மீது படையெடுத்த போது, இந்திரனின் மகனான ஜெயந்தன் இங்குள்ள யோகபைரவரை வழிபட்டு துயரம் நீங்கப்பெற்றான். தேய்பிறை அஷ்டமி. ஞாயிறன்று ராகு காலத்தில் (மாலை 4:30 – 6:00 மணி) யோகபைரவரை வழிபட்டால் எதிரி தொல்லை, வழக்கு, கடன் பிரச்னை தீரும். வாழ்வில் நல்ல திருப்பம் உண்டாகும்.