கலியுகம் பிறந்த பின்பு கது என்ற கிராமத்தில் பார்பாரிகாவின் தலை கண்டெடுக்கப்பட்டது. இன்றைய ராஜஸ்தானில் உள்ள சிகார் மாவட்டத்தில் இருக்கிறது அந்த கிராமம். அந்தப் பகுதியை ஆண்ட ரூப்சிங் சவான் என்ற மன்னரின் கனவில் பார்பாரிகன் தலைக்கு ஒரு கோயில் எழுப்ப வேண்டும் என்று அசரீரி வந்தது. அதன்படி அவன் தலை கண்டெடுக்கப்பட்ட இடம் தோண்டப்பட்டது. அங்கே அந்தத் தலை காணப்பட்டது. அதை சியாம்குண்ட் என்று அழைக்கிறார்கள். இது ஒரு பிரம்மாண்ட கிணறாகத் தோற்றமளிக்கிறது. அங்கு ஒரு கோசாலையும் காணப்படுகிறது. தேங்காயை அங்குள்ள ஒரு மரத்தில் சிவப்பு பட்டையால் கட்டினால் வேண்டியது நடக்கும் என்ற நம்பிக்கை நிலவுகிறது. பார்பாரிகாவை கதுஷியாம்ஜி என்ற பெயரில் வழிபடுகிறார்கள். அதாவது அந்த ஊரின் பெயரையும் சேர்த்து அழைக்கிறார்கள். தலையில் பிரம்மாண்ட கிரீடமும், முகத்தில் மீசையுமாகக் காட்சி அளிக்கிறது பார்பாரிகாவின் உருவம். தலை மட்டுமே கருவறையில் உள்ளது. பார்பாரிகாவின் தியாகம் இன்றளவும் அங்கு போற்றப்படுகிறது.