நம் வளர்ச்சியைக் கண்டால் சிலருக்கு பிடிக்காது. நாம் அவர்களுக்கு எவ்வளவு தான் நல்லது செய்தாலும் நம்மை எதிரியாக கருதுவார்கள். அப்படிப்பட்டவர்கள் உறவினராகவோ, ஒரு காலத்தில் நண்பராக பழகியவராகவோ இருக்கலாம். சிலருக்கு தொழிலில் பங்குதாரராக கூட இருக்கலாம். இவர்கள் யாராக இருந்தாலும் அவர்களிடம் இருந்து நம்மை விடுவிப்பவராக காஞ்சிபுரம் திருப்பாடகம் பாண்டவதுாதப் பெருமாள் இருக்கிறார். 25அடி உயரத்தில் பிரம்மாண்டமாக காட்சி தரும் இவரை ரோகிணி நட்சத்திரத்தினர் தரிசிப்பது சிறப்பு. பாண்டவர்களுக்காக ஐந்து வீடுகளையாவது பெற்றுத் தரும் நோக்கத்துடன் துரியோதனனிடம் துாது சென்றார் கிருஷ்ணர். ஆனால் பாண்டவர்களின் பெரிய பலமாக விளங்கும் கிருஷ்ணரை அவமானப்படுத்த நினைத்தான் துரியோதனன். அவர் அமர்வதற்காக இருந்த ஆசனத்தின் அடியில் பாதாள அறையை உண்டாக்கி அதன் மீது பசுந்தழைகளை மூடி மறைத்தான். ஆசனத்தில் கிருஷ்ணர் அமர்ந்ததும் அது சரிந்து விழுந்தது. அவரைத் தாக்கியவர்களை கிருஷ்ணர் கொன்றதோடு விஸ்வரூபத்தில் நின்றார். பின்னாளில் பாரத போர் முடிந்த பிறகு மகாராஜா ஜனமேஜயர் இத்தலத்தில் தவம் செய்து கிருஷ்ணரை தரிசிக்கும் பேறு பெற்றார். அந்த கிருஷ்ணரே பெருமாளாக இங்கு இருக்கிறார். சத்தியபாமா, ருக்மணி உடன் இருக்கிறார். இத்தலத்தின் புராணப்பெயர் திருப்பாடகம். இங்கு பலர் அடி, அங்கப் பிரதட்சணம் செய்கின்றனர்.பாண்டவருக்காக துாது சென்றதால் இவரை ‘பாண்டவ துாதப்பெருமாள்’ என அழைக்கின்றனர். நட்சத்திரங்களில் ஒருத்தியான ரோகிணி இங்கு வழிபட்டு சந்திரனை திருமணம் புரிந்ததாள். அதற்கு நன்றி செலுத்தும் விதமாக ரோகிணி சூட்சும வடிவில் இங்கு வழிபடுவதாக ஐதீகம். எப்படி செல்வது? காஞ்சிபுரம் பஸ் ஸ்டாண்டில் இருந்து 1 கி.மீ.,