திருமணச் சடங்கில் அம்மி மிதிக்கும் சடங்கு இடம் பெற்றிருக்கும். மணமகன் மணமகளின் வலது கால் கட்டைவிரலைப் பிடித்தபடி அக்னிக்கு வலப்புறம் உள்ள அம்மிமீது ஏற்றி வைப்பார். அப்போது, “மணமகளே! நீ இந்த கல்லைப் போல வலிமை மிக்கவளாக திடசிந்தையோடு இருக்க வேண்டும். உன்னை அழிக்க நினைப்பவர்களின் முன் பயமற்று எதிர்த்து நிற்பாயாக” என்ற மந்திரத்தைச் சொல்வர். இதைச் சொல்வதற்கு காரணம் இருக்கிறது. சந்தேகம், சபலம், கோபம், குரோதம், பயம் எல்லாம் வாழ்வில் குறுக்கிட்டு நெருக்கடி கொடுக்க நேரிடும். அப்போது அவற்றை திடசித்தமுடன் எதிர்த்து நிற்பதில் தான் வெற்றி இருக்கிறது. பெண் கற்புநெறியில் உறுதிமிக்கவளாக இருக்க வேண்டும் என்பதே இதன் நோக்கம்.