Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

காதுல காமாட்சி! கழுத்தில மீனாட்சி! பவுர்ணமி பூஜையை ஆண்கள் செய்யலாமா?
முதல் பக்கம் » துளிகள்
திருமணத்தடையா... நட்சத்திர தீபம் ஏத்துங்க!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

25 பிப்
2022
04:02


பருவ வயதைக் கடந்தும் பல காரணங்களால் திருமணத்தடையால் வாடுவோர் பலர். இவர்களை சந்திப்பவர்களும் ‘என்னப்பா கல்யாணம் எப்போ? உன் ஜாதகத்தில தோஷம் இருக்கும் போல... என ஏதாவது சொல்லி மனதை காயப்படுத்துவர். இதிலிருந்து விடுபட்டு நல்ல மணவாழ்வு அமைய வேண்டுமானால் திருச்சி அருகிலுள்ள திருநாராயணபுரம் வேத நாராயணப்பெருமாள் கோயிலுக்குச் செல்லுங்கள்.  
படைக்கும் தொழிலை ஏற்ற பிரம்மாவுக்கு உபதேசம் செய்த பெருமாள் இத்தலத்தில் பள்ளி கொண்டார். ‘வேத நாராயணர்’ என அழைக்கப்பட்ட இவரது சிலை பிற்காலத்தில் மண்ணால் மூடப்பட்டது. இப்பகுதியை ஆண்ட மன்னர் வானவராயரின் கனவில் தோன்றிய பெருமாள் தான் புதைந்திருப்பதைத் தெரிவித்தார். சிலையைக் கண்டெடுத்த மன்னர் கோயில் எழுப்பினார். படுத்த நிலையில் காட்சியளிக்கும் மூலவருக்கு தலையணையாக வேதங்கள் உள்ளன. நாபியிலுள்ள பிரம்மாவிற்கு  உபதேசிக்கும் கோலத்தில் சுவாமி இருக்கிறார். இரணிய வதத்தின் போது உக்கிர கோலத்தில் காட்சியளித்த நரசிம்மர், இங்கு குழந்தையாக காட்சிளிக்கிறார். அருகில் பாலகனாக பிரகலாதன் நிற்கிறார்.
ஆதிசேஷனும், அவரது மனைவியும் வேதநாராயணரை தாங்கியபடி உள்ளனர். நாக, களத்திர தோஷத்தால் திருமணத் தடை உள்ளவர்கள் வழிபட்டால் தோஷம் தீரும்.
பிள்ளைத் திருநறையூர் அரையர் என்னும் பக்தர், குடும்பத்துடன் வந்த போது திடீரென கோயில் கூரை மீது தீப்பற்றியது. அதிர்ந்த அரையர்,  தீ பரவுவதைத் தடுக்க மனைவி, குழந்தைகளை படுக்க வைத்து, அவர்கள் மீது குறுக்காக தானும் விழுந்து தடுத்தார். அவருக்கு காட்சியளித்த பெருமாள் மோட்சத்தை அளித்தார்.
ராமானுஜர் இங்கு தரிசிக்க போது ‘காவிரியில் நீராடி காவி உடுத்தி வா!’ என கட்டளையிட்டார் சுவாமி. ராமானுஜரும் அவ்வாறே உடுத்தினார். இந்த நிகழ்ச்சிக்காக. சித்திரை மாதம் திருவாதிரை நட்சத்திரத்தன்று ராமானுஜர் காவியுடை அணிந்து உலா வருகிறார்.  
கல்வித்தலமான இங்கு வேதநாரயணருக்கு திருவோணம், ஏகாதாசி, அமாவாசை நாளில் சிறப்பு பூஜை நடக்கிறது.  குருபலம் இல்லாவிட்டால் திருமணம் தடைபடும். இவர்கள் சுவாமிக்கு துளசி மாலை அணிவித்து 27 நெய் தீபம் ஏற்றுகின்றனர். வியாழன் அல்லது பிறந்த நட்சத்திரத்தன்று செய்வது சிறப்பு
எப்படி செல்வது
திருச்சியில் இருந்து 52 கி.மீ., துாரத்தில் தொட்டியம். அங்கிருந்து 5 கி.மீ.,

 
மேலும் துளிகள் »
temple news
திருமாலுக்கு மிகவும் உகந்த விரதம் ஏகாதசி. 15 நாளுக்கு ஒரு முறை வரும் இந்த திதியை புண்ணிய காலம் என்பர். ... மேலும்
 
temple news
சோமன்" என்றால் சமஸ்கிருத மொழியில் சந்திரன் என்று பொருள். சந்திர பகவானின் தன்மை கொண்ட திங்கட்கிழமை ... மேலும்
 
temple news
மகாளய பட்சத்தின் ஒன்பதாம் நாள் அவிதவா நவமி. சுமங்கலியாக இறந்த மூதாதையர்களின் அருளாசி பெறும் நாள். ... மேலும்
 
temple news
மகாளய பட்ச காலத்தில் வரும் அஷ்டமி மத்யாஷ்டமி ஆகும். மகாளய பட்ச காலத்தின் நடுவே, அஷ்டமி திதி வரும் நாள் ... மேலும்
 
temple news
குரு எனும் வடசொல்லிற்கு பெரியது என்றும், பிதா, அரசன் என்ற பொருள் உண்டு. அனைத்திலும் பெரியவராகவும், ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar