Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

நிதிநெருக்கடி போக்கும் சிவன் உலகாளும் பசுபதிநாதர்
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
கலப்படமா...காத்திருக்கு தண்டனை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

03 மார்
2022
11:03


பாலில் தண்ணீர், பால்மாவில் சுண்ணாம்பு பவுடர், நெய்யில் வனஸ்பதி என கலப்படம் செய்யும் வியாபாரிகள் இருக்கிறார்கள். சட்டத்தின் பிடியிலிருந்து ஒருவேளை இவர்கள் தப்பிக்கலாம். ஆனால் ஈரோடு மாவட்டம் அத்தாணி மாதேஸ்வரர் (சடையப்பர்) கோயிலிலுள்ள சந்திரசேகரரின் தண்டனையிலிருந்து தப்ப முடியாது.
ஒரு காலத்தில் காடாக இருந்த இப்பகுதியில் சடையப்பர் என்ற விவசாயி மேய்ச்சலுக்காக பசுக்களுடன் சென்ற போது  புலி ஒன்று தாக்கியது. அவர் கடுமையாகப் போரிட்டு புலியை விரட்டிய போதும் பசுவுக்கும், அவருக்கும் காயம் ஏற்பட்டது. முடிவில் சடையப்பரும், பசுவும் இறந்தனர். பசு இறந்த இடத்தில் நந்தி சிலையை பிரதிஷ்டை செய்தனர். அருகிலுள்ள ஓடையில் கிடந்த சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்து ‘மாதேஸ்வரர்’ எனப் பெயரிட்டனர். விவசாயியின் நினைவாக ‘ சடையப்பர் கோயில்’ என இது அழைக்கப்படுகிறது.
 பால் பொருட்களில் கலப்படம் செய்து குறுக்குவழியில் பணம் சம்பாதித்ததே சடையப்பரின் இறப்புக்கான காரணம் என்றும், இப்படி யாரும் சம்பாதிக்கக் கூடாது என்பதை உணர்த்தவே புலி வடிவில் சிவன் வந்ததையும் மக்கள் உணர்ந்தனர்.  மாதேஸ்வரர் உக்கிர வடிவில் இருந்ததால் பிற்காலத்தில் சந்திரசேகரர் என்னும் பெயரில் சிவன் சிலையைப் பிரதிஷ்டை செய்து சுவாமியை சாந்தப்படுத்தினர்.  கலப்பட வியாபாரம் செய்பவர்களால் பாதிக்கப்பட்டவர்கள் இங்கு முறையிடுகின்றனர்.
சிவலிங்கத்தின் பின்புறம் ஐந்து தலை நாகம் உள்ளது. திருமணத்தடை விலக மாதேஸ்வரர், ஆனந்தவல்லி அம்மனை வெள்ளிக்கிழமையில் வழிபடுகின்றனர். ஏழரைச்சனி, அஷ்டமத்துச்சனி தோஷம் உள்ளவர்கள் சனிபிரதோஷத்தன்று வில்வ அர்ச்சனை செய்கின்றனர். விநாயகர், பிரம்மா, பெருமாள், நவக்கிரக சன்னதியும் இங்குள்ளன.  
எப்படி செல்வது?
* ஈரோட்டில் இருந்து 40 கி.மீ.,
* கோபிச்செட்டி பாளையத்தில் இருந்து 20 கி.மீ.,
விசேஷ நாட்கள்: ஆருத்ரா தரிசனம், மகாசிவராத்திரி
நேரம்: காலை 6:00– 11:00 மணி, மாலை 4:00 – 8:00 மணி

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
* அழகை பார்க்காதீர்கள். குணத்தை பாருங்கள்.   * மன வலிமையும் உறுதியுமே வாழ்வை நிர்ணயிக்கின்றன. * நீண்ட ... மேலும்
 
புல்வெளியில் மேய்ந்த பசுவை பார்த்தது ஒரு குட்டித்தவளை. அது தன் தாயிடம் சென்று, உன்னை விட பெரிய பிராணி ... மேலும்
 
குழந்தையில்லாத  தம்பதியர் அனாதை விடுதிக்கு சென்றார்கள். அங்கிருந்த சிறுவன் ஒருவனை பார்த்து ... மேலும்
 
 நீண்ட நாட்களாக தன் மனைவிக்கு காது கேட்க வில்லையோ என்ற சந்தேகம் பீட்டருக்கு இருந்தது. டாக்டரிடம் ... மேலும்
 
பணக்கார வீட்டுப்பெண் ஒருவர் சேவல் கூவியவுடனே எழுந்து விடுவார். அப்போதே பணிப்பெண்ணையும் எழுப்பி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar