Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

பிரம்மனும் திருமாலும் காணாத ... துணிவே துணை
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
நாகதோஷம் தீர்க்கும் அம்மன்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

26 மார்
2022
02:03


 நாக தோஷம் இருப்பவர்களுக்கு அடிக்கடி பாம்பு கண்ணில் படும்.  இவர்களுக்கு பாம்புகளால் பாதிப்பு, திருமணத்தில் தடை, குழந்தையின்மை ஏற்படலாம். இவர்கள் மைசூருக்கு அருகிலுள்ள உத்தனஹள்ளியில் இருக்கும் சாமுண்டீஸ்வரி அம்மனின் தங்கை ஜுவாலாமுகியை வெள்ளிக்கிழமை, பவுர்ணமி நாட்களில் தரிசித்தால் நன்மை கிடைக்கும்.   
 ரத்த பீஜாசுரன் என்னும் அசுரனுடைய உடம்பில் இருந்து வெளி வரும் ஒவ்வொரு துளி ரத்தத்தில் இருந்தும் அசுரர்கள் தோன்றினர். இவர்களைப் பயன்படுத்தி தேவர்களைத் துன்புறுத்தினான். ரிஷிகள் நடத்திய யாகங்களைத் தடுத்தான். அனைவரும் அன்னை பார்வதியிடம் முறையிட்டனர். உக்ர ரூபத்துடன் நாக்கை நீட்டியபடி, கோரைப் பற்களுடன் ‘ஜுவாலாமுகி’ என்ற திருநாமத்தோடு பார்வதி புறப்பட்டாள். அசுரனுடன் போரிட்டு அவனது உடம்பிலிருந்து வெளிப்பட்ட ரத்தத்தை குடித்தாள். அசுரனை அழித்து தர்மத்தை நிலைநாட்டினாள்.   
இவள் சாமுண்டி மலையை அடுத்துள்ள குன்று ஒன்றில் சுயம்புவாக  காட்சியளிக்கிறாள். மிகச் சிறிய வாசலுடன் குகை போல இவளின் சன்னதி உள்ளது. நாக்கை நீட்டிய படியே கோபத்தோடு காட்சி தரும் அம்மனின் கைகளில் திரிசூலம், உடுக்கை, வாள், பாணம் என்னும் ரத்தம் குடிக்கும் கிண்ணம் உள்ளன. உற்ஸவ அம்மனின் முகம் சாந்த நிலையில் உள்ளது. ஜுவாலாமுகியை தரிசித்த பின்னரே சாமுண்டீஸ்வரி கோயிலுக்கு பக்தர்கள் செல்கின்றனர்.  வெள்ளிக்கிழமை ராகு காலத்தில் தீபமேற்றி வழிபட நாகதோஷம் விலகும். பவுர்ணமியன்று வெல்லம், தேங்காய், வாழைப்பழ கலவையை நிவேதனம் செய்து எலுமிச்சை தீபமேற்றினால் திருமணத்தடை நீங்கும்.
ஜுவாலாமுகி சன்னதியை ஒட்டி சிவபெருமானின் சன்னதி உள்ளது. அசுரர்களை அழித்த பாவம் தீர அம்பிகை இங்கு சிவனை வழிபட்டாள். சித்தேஸ்வரர், ராமநாதேஸ்வரர் என சிவன் அழைக்கப்படுகிறார். விநாயகர், சுப்பிரமணியர், கால பைரவர் சன்னதிகள் இங்குள்ளன.
எப்படி செல்வது
மைசூருவில் இருந்து 12 கி.மீ.,
விசேஷ நாள்: ஆடிபவுர்ணமி, நவராத்திரி, மகாசிவராத்திரி, சனிப்பிரதோஷம்
நேரம்: காலை 7:30 - 2:00, மாலை 3.00 - 9.00 மணி.
தொடர்புக்கு: 089645 - 71235
அருகிலுள்ள தலம்: மைசூரு சாமுண்டீஸ்வரி கோயில்(12 கி.மீ.,)

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
* அழகை பார்க்காதீர்கள். குணத்தை பாருங்கள்.   * மன வலிமையும் உறுதியுமே வாழ்வை நிர்ணயிக்கின்றன. * நீண்ட ... மேலும்
 
புல்வெளியில் மேய்ந்த பசுவை பார்த்தது ஒரு குட்டித்தவளை. அது தன் தாயிடம் சென்று, உன்னை விட பெரிய பிராணி ... மேலும்
 
குழந்தையில்லாத  தம்பதியர் அனாதை விடுதிக்கு சென்றார்கள். அங்கிருந்த சிறுவன் ஒருவனை பார்த்து ... மேலும்
 
 நீண்ட நாட்களாக தன் மனைவிக்கு காது கேட்க வில்லையோ என்ற சந்தேகம் பீட்டருக்கு இருந்தது. டாக்டரிடம் ... மேலும்
 
பணக்கார வீட்டுப்பெண் ஒருவர் சேவல் கூவியவுடனே எழுந்து விடுவார். அப்போதே பணிப்பெண்ணையும் எழுப்பி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar