சினிமா
கோயில்கள்
விளையாட்டு
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
சீர்ஆர் கழலே தொழுவீர் இதுசெப்பீர்,வார்ஆர் முலைமங் கையொடும் உடன்ஆகிஏர்ஆர் இரும்பூ ளைஇடம் கொண்டஈசன்கார்ஆர் கடல்நஞ்சு அமுதுஉண் டகருத்தே.தொழல்ஆர் கழலே தொழுதொண் டர்கள்சொல்லீர்,குழல்ஆர் மொழிக்கோல் வளையோடு உடன்ஆகிஎழில்ஆர் இரும்பூ ளைஇடங் கொண்டஈசன்கழல்தான் கரிகான் இடை ஆடுகருத்தே.அன்பால் அடிகை தொழுவீர் அறியீரே,மின்போல் மருங்குல் மடவா ளொடுமேவிஇன்பாய் இரும்பூ ளைஇடம் கொண்டஈசன்பொன்போல் சடையில் புனல்வைத்த பொருளே.நச்சித் தொழுவீர் கள்நமக்கு இதுசொல்லீர்,கச்சிப் பொலிகா மக்கொடி யுடன்கூடிஇச்சித்து இரும்பூ ளைஇடம் கொண்டஈசன்உச்சித் தலையில் பலிகொண்டு உழல்ஊணே.சுற்றுஆர்ந்து அடியே தொழுவீர் இதுசொல்லீர்,நல்தாழ் குழல்நங் கையொடும் உடன்ஆகிஎற்றே இரும்பூ ளைஇடம் கொண்டஈசன்புற்றுஆடு அரவோடு என்புபூண் டபொருளே.தோடுஆர் மலர்தூய்த் தொழுதொண் டர்கள்சொல்லீர்,சேடுஆர் குழற்சே யிழையோடு உடன்ஆகிஈடாய் இரும்பூ ளைிடம் கொண்டஈசன்காடுஆர் கடுவே டுவன் ஆனகருத்தே.ஒருக்கும் மனத்துஅன் பர்உள்ளீர் இதுசொல்லீர்,பருக்கை மதவே ழம்உரித் துஉமையோடும்இருக்கை இரும்பூ ளைஇடம் கொண்டஈசன்அரக்கன் உரம்தீர்த்து அருள்ஆக் கியவாறே.துயர் ஆயினநீங் கித்தொழும் தொண்டர்சொல்லீர்,கயல்ஆர் கருங்கண் ணியொடும் உடன்ஆகிஇயல்பாய் இரும்பூ ளைஇடம் கொண்டஈசன்முயல்வார் இருவர்க்கு எரி ஆகிய மொய்ம்பே.துணைநன் மலர்தூய்த் தொழும்தொண் டர்கள்சொல்லீர்,பணைமென் முலைப்பார்ப் பதியோடு உடன்ஆகிஇணைஇல் இரும்பூ ளைஇடம் கொண்டஈசன்அணைவுஇல் சமண்சாக் கியம்ஆக் கியவாறே.எந்தை இரும்பூ ளைஇடம் கொண்டஈசன்சந்தம் பயில்சண் பையுள்ஞா னசம்பந்தன்செந்தண் தமிழ்செப் பியபத்து இவைவல்லார்பந்தம் ஆறுத்து ஓங்குவர் பான்மையினாலே.திருச்சிற்றம்பலம்