Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

நல்ல வாழ்க்கை அமைய... நம்பினால் நடந்தே தீரும்
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
நடனமும் சுடலைப்பொடியும்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

23 மே
2022
02:05


சித்தர் இலக்கிய ஆய்வாளர் கமலக்கண்ணன்

சிதம்பரத்தில் சிவபெருமானுக்கு ஒர் உருவச்சிலை தங்கத்தில் உருவாக்குமாறு சோழ மன்னர் சிற்பிகளுக்கு ஆணையிட்டார். சிற்பிகள் பலமுறை முயன்றும் சிலை உருவாகாததால் மிகவும் வருந்தினர். அப்போது சிவபெருமான், திருமூலர் முன்பாகத் தோன்றி அந்த சிலையை வார்க்க உதவி செய்யுமாறு ஆணையிட்டார். அதன்படி திருமூலர் ககனமார்க்கமாகச் சென்று சிலையை வார்க்க உதவி செய்த செய்தி போகர் கற்பம் 300 என்ற நுாலில் காணப்படுகின்றன.
ஒரு சித்தரின் துணையோடு உருவாக்கப் பெற்ற நடராஜரின் உலகம் அறிந்திராத பல அரிய ரகசியங்கள் பொதிந்திருப்பதை ஞானிகள் வழி வழியாகத் தம் சீடர்களுக்கு நேரில் கூறி வருகின்றனர். அந்த வகையில் சில செய்திகள்:  
* நம் சிரசிலுள்ள பிரம்மரந்திரத்தின் எட்டாவது நிலையாகிய விஞ்ஞானமயகோசத்தில் உயிராக கடவுள் இருக்கும் இடத்திற்கு மேலே ஒன்பதாவது நிலையான ஆனந்தமய கோசத்தில் அமிர்தம் ஊறுவதால் சிவபெருமானின் சடாமுடியில் கங்கை இருப்பதாகக் காட்டப்பெற்றது.
* சூரியனாகிய சிவத்தில், சந்திரனாகிய சக்தி பாதியாக இணைந்துள்ளதைக் குறிப்பதே பிறைச்சந்திரனாகும்.
* சுவாசத்தின் நிலை தொண்டை என்பதால் ஒலியோடு சுவாசத்தை வெளிப்படுத்தும் பாம்பு கழுத்தில் உள்ளது.
* சரியை, கிரியை, யோகம், ஞானம் என்னும் நான்கையும் குறிப்பவை நான்கு கைகள், உடுக்கை யோகத்தையும், எரி தழல் ஞானத்தையும் குறிக்கும்.
* கால் என்ற சொல்லுக்கு காற்று என்று பொருள். கால் இரண்டாக இருப்பதை போன்று சுவாசமும் இடகலை, பிங்கலை என இரண்டாக உள்ளது. அவற்றைக் கொண்டு தவம் செய்வது எப்படி என்பதைக் குறிப்பதே காலைத் துாக்கி நின்றாடும் கோலமாகும். இவையனைத்தும் ஆழ்ந்து சிந்திக்கத்தக்கவை.  
இதற்கு ஆதாரமாக  திருமூலரின் இப்பாடல் இருப்பதை காணலாம்.
ஆதி நடஞ்செய்தான் என்பர்கள் ஆதர்கள்
ஆதி நடஞ்செய்கையாரும் அறிகிலர்
ஆதி நடமாடல் ஆரும் அறிந்த பின்
ஆதிநடமாடலாம் அருட்சத்தியே
 – திருமந்திரம்.
சிவன் கால்களை துாக்கி நடனமாடினான் எனக் கூறுவோர் அறிவில்லாதவர், அவன் விஞ்ஞானமய கோசத்திலிருந்து கொண்டு இடகலை, பிங்கலை இரண்டையும் மாற்றி மாற்றி இரு நாசித் துவாரங்களிலும் ஓய்வின்றி  இயக்குவதை எவரும் அறிய மாட்டார்கள். தவத்தால் உயிராகிய சிவலிங்க வடிவம் சுவாசக் காற்றை (காலை) மாற்றி மாற்றி இயக்குவதைக் கண்டால் அந்த இயக்கமே நடராஜரின் நடனமாக உவமிக்கப் பெற்றதாக அறிவர்.
இதை ஞானசம்பந்தர் திருச்சேய்லுார் தேவாரம் மூலமாக காண்போம்.
ஊனடைந்த வெண்தலையினோடு பலி திரிந்து
கானடைந்த பேய்களோடு பூதம் கலந்துடனே
மானடைந்த  நோக்கி காண மகிழ்ந்து எரியாடல் என்னே.  
இப்பாடலை மேலோட்டமாக படித்துவிட்டு இறந்து போன மனிதனின் மண்டையோட்டில் சிவன் பிச்சை எடுத்தார். சுடுகாட்டிலுள்ள பேய்கள், பூதங்களோடும் நடனமாடினார் என்று பொருள் கூறினால் அது அறிவுக்கு பொருந்துமோ.
கல்லினுள் தேரைக்கும், கருவினுள் இருக்கும் குழந்தைக்கும் உணவளித்து, சகல கோடி ஜீவ ராசிகளுக்கும் உயிராக விளங்கும் கடவுள் சுடுகாட்டில் யாரிடம் பிச்சை எடுப்பார். அவருக்கு உணவு தேவையா இதோ வேதம் என்ன கூறுகிறது என்று கேளுங்கள்
தேவர்கள் உண்பதுமில்லை; பருகுவதுமில்லை அமிர்தத்தை பார்த்தே திருப்தியடைகின்றனர்.
 – சாந்தோக்கிய உபநிடதம்
உணவே தேவையில்லாத போது பிச்சை எடுத்தார் என்பது அறிவுக்குப்பொருந்தாது. இது போன்ற மற்றொரு பாடலையும் சிந்திப்போம்.
மாண்டார் சுடலைப் பொடிபூசி மயானத்
தீண்டா நடமாடிய வேந்தன் தன்மேனி
சம்பந்தர். திருபிரமபுரத் தேவாரம்.
இப்பாடலுக்கு, சுடுகாட்டில் பிணங்களை எரித்த சாம்பலை கடவுளை மேனியில் பூசினான் என்பது அறிவிற்கு பொருந்தாது.  
இந்த பாடல்கள் எல்லாம் பரிபாஷையாகும். ஆகவே சித்தர் பாடல்களை மேற்கோள் காட்டி விளக்கம் கூறுகிறேன்.
எட்டிரண்டும் ஒன்றுமது வாலை என்பர்
இது தானே பரிதிமதி சுழுமுனை என்பார்
ஒட்டிமுறிந்தெழுந்தது முக்கோண மென்பார்
உதித்தெழுத்த மூன்றெழுத்தை அறியார் அய்யோ
கொட்டுமொரு தேளுருவாய் நிற்கும் பாரு
கூட்டமிட்டுப் பாராதே குறிகள் தோன்றும்
சுட்ட சுடு காடுமது வெளியு மாகும்
சொல்லுதற்கு வாய் விளங்காச் சூட்சம் தானே.
கருவூரார் பூஜா விதி.
ஞானிகளைத் தவிர மற்றவர்கள் எத்தனை முறை படித்தாலும் புரிந்து கொள்ள முடியாத இப்பாடலின் கடைசி இரண்டு வரிகளை விளக்குகிறேன்.
மனிதனுடைய நெற்றிக்குள்ளே கோடி சூரியப்பிரகாசம் பொருந்திய உயிராகிய பரப்பிரம்மம் இருப்பதால் நெற்றிக்கு சுட்ட சுடுகாடு என்று பெயர் எனக் கருவூரார் கூறுவதை நினைவில் நிறுத்திக்கொண்டு சம்பந்தர் தேவாரத்தின் பாடலுக்கான விளக்கத்தை அறிவோம்.
(மானடைந்த நோக்கி) மனிதன் செய்யும் ஞான தவத்தின் பயனை (ஊனடைந்த வெண்தலையினோடு) ஊனுடம்புக்குள்ளே மனோமய கோசத்தில் பொருந்திய சூக்கும சரீரத்தோடு இணைந்து பிரம்மரந்திரத்தில் இருளில் பதுங்கியுள்ள காமம், குரோதம் லோபம், மோகம் முதலான தீயசக்திகளை எல்லாம் எரித்து பலி வாங்குவதற்காக சுழுமுனை என்னும் கொடிய அக்னியோடு இடைவிடாது சுவாசக்காற்றாக ஆடிக் கொண்டிருக்கும் சிவன் ஆதாரம்.
செடங்காண திருக்கண்ட ஆகமத்தில், சிந்த அதிரேச மற்றுக் காம மற்றுக்
குடம் போல விகாரமற்று குரோதமற்று, கூ கூ கூ கோப மற்று மோகம் தள்ளே.
தள்ளப்பா மதமொடு மாச்சரியம் தானும், சகமாய் ஈரிலையும் அசூசையப்பா
விள்ளப்பா டம்பமொடு தருப்பகம் தானும்,விதமான ஆங்காரம் கூடத்தள்ளு
கள்ளப்பா கொண்டிருந்த மயக்கம் போலே கலந்த இந்தப் பதிமூன்றும் காலனாமே.
 – கொங்கணர் மெய்யான  பாடல்கள்.
இரண்டாவது பாடலுக்குரிய ஞான விளக்கம்: காமம், குரோதம் முதலான பதிமூன்று தீயசக்திகளையும் எரித்து சாம்பலாக்கிய சூரியன், சந்திரன் அக்கினி மூன்றும் இணைந்த சுழுமுனை நுண்ணிய துகள்களால் ஆன மூன்று கோடுகள் போன்று திருமேனியில் விளங்குமாறு தோன்றுவார் கடவுள். இந்த ஞான விளக்கங்களை சான்றோர்கள் ஆழ்ந்து சிந்திப்பார்களாக.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
* அழகை பார்க்காதீர்கள். குணத்தை பாருங்கள்.   * மன வலிமையும் உறுதியுமே வாழ்வை நிர்ணயிக்கின்றன. * நீண்ட ... மேலும்
 
புல்வெளியில் மேய்ந்த பசுவை பார்த்தது ஒரு குட்டித்தவளை. அது தன் தாயிடம் சென்று, உன்னை விட பெரிய பிராணி ... மேலும்
 
குழந்தையில்லாத  தம்பதியர் அனாதை விடுதிக்கு சென்றார்கள். அங்கிருந்த சிறுவன் ஒருவனை பார்த்து ... மேலும்
 
 நீண்ட நாட்களாக தன் மனைவிக்கு காது கேட்க வில்லையோ என்ற சந்தேகம் பீட்டருக்கு இருந்தது. டாக்டரிடம் ... மேலும்
 
பணக்கார வீட்டுப்பெண் ஒருவர் சேவல் கூவியவுடனே எழுந்து விடுவார். அப்போதே பணிப்பெண்ணையும் எழுப்பி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar