பதிவு செய்த நாள்
20
ஜூன்
2022
05:06
அங்காரகன், மங்களன் என்றெல்லாம் போற்றப்படும் செவ்வாய் கிரகத்தின் அதிதெய்வம் முருகப் பெருமான். ஜாதகத்தில் செவ்வாய் பலம் குறைந்தவர்கள். அவரால் தோஷத்தைச் சந்தித்தவர்கள். அழகன் முருகனை வழிபடுவது சிறப்பு. செவ்வாய்க் கிழமைகளில் நெய் தீபம் ஏற்றி வைத்து, கீழ்க்காணும் கந்தப்பெருமானின் 16 நாமங்களைச் சிறப்பிக்கும் ஸ்லோகத்தைச் சொல்லி தியானித்து, பஞ்சாமிர்தம் நைவேத்தியம் செய்து கந்தக் கடவுளை வழிபடுவதால், செவ்வாயால் ஏற்படும் தோஷங்கள் நீங்கும். மங்களனாகிய செவ்வாய் அருளும். பலா பலன்களைப் பரிபூரணமாகப் பெறலாம்.
க்ஞானஸக்திதர: ஸகந்த: தேவஸேநாபதிஸ்ததா
ஸுப்ரம்மண்யோ கஜாரூட: ஸரகாநநஜம்பவ:
கார்த்திகேய: குமாரஸ்ச ஷண்முகஸ்தாரகாந்தக:
ஸேநாநீர் பிரம்மஸாஸ்தா ச வள்ளீகல்யாணஸுந்தர:
பாலஸ்ச க்ரௌஞ்சபேத்தா ச ஸிகிவாஹந ஏவ ச
ஏதாநி ஸ்வாமி நாமாநி ஷோடஸப்ரத்யஹம் நர:
ய: படேத் ஸர்வபாபேப்ய: ஸ முச்யேத மஹாமுநே
கருத்து: ஞான வேலைத் தரித்தவன் சிவனிடமிருந்து பிறந்த தேஜஸ்வரூபி, தேவசேனாவின் கணவன், வேதம், வேத வித்துக்கள் மற்றும் வேதோக்தமான கர்மாக்கள் ஆகியவற்றைப் பாதுகாக்கிறவன், யானை மீது அமர்ந்தவன் நாணற்காட்டில் அவதரித்தவன், கிருத்திகாதேவியின் புத்திரன், குமரகுருவாய் இருப்பவன். ஆறுமுகம் உள்ளவன். தாரகாசுரனை வதைத்தவன். தேவ சைன்னியங்களை அழைத்துச் செல்கிறவன். பிரம்மதேவனை அடக்கியவன், வள்ளியுடன் கல்யாணக் கோலத்தில் அழகாய் விளங்குகிறவன். சிறு குழந்தையாய் இருப்பவன். க்ரௌஞ்ச மலையைப் பிளந்தவன். மயிலை வாகனமாகக் கொண்டவன். ஸ்வாமிநாதனுடைய இந்தப் பதினாறு திருப்பெயர்களையும் படிப்பவர்கள். மகாபாவங்களில் இருந்து விடுபடுவார்கள்.