ஆடிப்பெருக்கு என்பது நீரோடும், நிலத்தோடும் தொடர்புடைய விழாவாகும். அதிலும் காவிரி பாயும் பகுதிகளில் இவ்விழா கோலாகலமாக நடைபெறும். இதற்கு காரணம் என்ன? நாம் வளமுடன், நலமுடன் வாழ நீர்தானே நமக்கு ஆதாரம். அதை கொடுக்கும் ஆறுகளுக்கு நன்றிக்கடன் செலுத்துவது நமது கடமையல்லவா... அதுவும் ஆடி பெருக்கன்று காவிரி பொங்கி வரும் அழகை காண இரு கண்கள் போதாது. இதனால் ஏரிகள் பூரணமாகி நிரம்பி வழியும். அப்போது அவளை வழிபடும்போது நமது வாழ்வும் நிறைவானதாக மாறும்.