சத்தியலோகத்தில் பிரம்மாவைத் தரிசிக்கச் சென்ற நாரதர், “கலியுகத்தில் விஷ்ணுவைப் பூஜிப்பது எப்படி?” என்று கேட்டார். அதற்கு பி ரம்மா,“லட்சுமி பதியான திருமாலின் அருள் பெற பக்தியுடன் சனிவார விரதம் மேற்கொள்வது நல்லது. புரட்டாசியில் வரும் சனி இன்னும் வி÷ சஷமானது. இதனால் சூரியனைக் கண்ட பனி போல துன்பம் நீங்கும். கலியுகத்தில் சனிவார விரதம் மேற்கொண்டால் ஆயுள், ஆரோக்கியம், ஐஸ்வர்யம் என அனைத்து நன்மையும் கிடைக்கும்,” என விளக்கம் அளித்தார். நாரதர் மூலம் இதன் அருமையை உணர்ந்து தேவர்கள் அனைவரும் விரதம் மேற்கொண்டு பலன் அடைந்தனர்.