மகாபாரதம் போல ராமாயணத்தோடும் விஜயதசமி இணைத்துப் பேசப்படுகிறது. அம்பிகையை ஒன்பது நாட்கள் வழிபட்டு அவளது அருளாலேயே ராவணனைக் கொன்று சீதையை மீட்டார் ராமர். இந்த வரலாறை தேவி பாகவதம் என்னும் நுால் கூறுகிறது. வெற்றி தினமான விஜயதசமியை ராம்லீலா என்னும் விழாவாக டில்லியில் கொண்டாடுகின்றனர். அப்போது உலகில் உள்ள தீமைகள் அழிய வேண்டும் என ராவணனின் உருவ பொம்மைகளை எரிக்கின்றனர்.