எந்த செயலை தொடங்கினாலும் அதில் வெற்றி பெற வேண்டும் என விரும்புகிறோம். அந்த வெற்றியை அருளும் நாளே விஜயதசமி. இந்நாளில் பள்ளியில் சேர உள்ள குழந்தைகளுக்கு வித்யாரம்பம் செய்வதும், இசை, பாட்டு, நடனப் பயிற்சி தொடங்குவதும் சிறப்பு. எழுத்துப் பயிற்சியை தொடங்கும் குழந்தைகள் கல்வியில் சிறந்து விளங்குவர். படிப்பை முடித்தவர்கள் ஆசிரியர்களிடம் ஆசி பெறுவதும் நல்லது.