ஆலமரம் ஒன்றில் பறவைகள் வாழ்ந்தன. அதில் காய்ந்த கிளைகள் ஒன்றோடு ஒன்று உராய்ந்து கொண்டிருந்தன. இதை கவனித்த வயதான பறவை, ‘‘நண்பர்களே... இந்த மரம் தீப்பற்றி எரிய வாய்ப்புள்ளதால், இங்கே தங்க வேண்டாம்’’ என சொன்னது. பல பறவைகள் பாதுகாப்பான இடங்களுக்குச் சென்றன. ‘இந்த கிழப் பறவைக்கு வேற வேலையே இல்லை. ஒன்றும் இல்லாததற்கு எல்லாம் பயப்படும்’ என்று சில பறவைகள் அசட்டையாக இருந்தன. ஒருநாள் மரமும் எரிந்தது. பாவம்! மூத்தோர் சொல் கேட்காத பறவைகள் அங்கேயே இறந்தன.