ஜாதகத்தில் ராகுதோஷம் இருந்தால் திருமணத்தடை, கணவன்-மனைவி இடையே பிரச்னை ஏற்பட வாய்ப்புண்டு. இதனைப் போக்க துர்க்கைக்கு வளர்பிறை அஷ்டமி திதி, செவ்வாய், வெள்ளிக் கிழமைகளில் பூஜை செய்வது நன்மை யளிக்கும். இந்த மூன்றில் ஏதாவது ஒன்றைத் தேர்ந்தெடுத்து வழிபட்டால் கூட போதும். இந்த விரதநாளில், பகலில் எதுவும் சாப்பிடாமல், ராகு காலத்தில் துர்க்கை பூஜை செய்ய வேண்டும். இரவில் எளிய உணவு சாப்பிடலாம். கோயிலுக்குச் செல்ல முடியாதவர்கள், வீட்டில் திருவிளக்கின் முன், 2 வெள்ளி அல்லது அகல் விளக்கு ஏற்றி இந்த வழிபாட்டை செய்யலாம். 16 வாரம் தீபமிட, திருமணத் தடை நீங்கும். தம்பதி யரிடையே கருத்து வேறுபாடு நீங்கும்.