நாயன்மாரான சோமாசிமாறர் செய்த யாகத்திற்கு, சிவபெருமான் நான்கு நாய்களை அழைத்து வந்தார். அந்த நான்கு நாய்களும் நான்கு வேதங்களாகும். சிவாம்சமான பைரவருக்கு நாய் வாகனம் உள்ளது. எவ்வளவு தான் அடித்தாலும் தன்னை வளர்த்தவனை விட்டு நன்றியுணர்வு கொண்ட நாய் பிரியாது. அதே நேரம் பிறரால் தன் எஜமானனுக்கு துன்பம் நேருமானால் அவனை விரட்டவும் தயங்காது. மனிதனும் நன்றியுள்ளவனாகவும், பிறருக்கு துன்பம் வரும் நேரத்தில் தன்னைச் சார்ந்தவர்களுக்கு பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பது கருதியே, ‘நாய் வாகனம்’ பைரவருக்கு தரப்பட்டுள்ளது. மண்ணால் ஆன நாய் வாகனம் வாங்கி வைப்பதாக பைரவரிடம் வேண்டினால் எதிர்பார்ப்பு நிறைவேறும்.