பெரம்பலூர் மாவட்டம் செட்டிகுளத்தில் உள்ள சிவபெருமான் கோயில் பிரபலமானது. கருவறையில் உள்ள ஏகாம்பரேஸ்வரர் சிவலிங்கத்தின் மீது பங்குனி மாதம் 19, 20, 21 ஆகிய நாட்களில் சூரிய ஒளி படும். அருகிலுள்ள மலையின் மீது முருகப்பெருமான் கையில் கரும்புடன் காட்சித் தருகிறார். குழந்தை இல்லாத தம்பதியர் இங்கு வந்து கரும்பு தொட்டில் நேர்த்திகடன் செய்து குழந்தைபேற்றினை பெறுகின்றனர்.