குலதெய்வமான அழகரிடம், ஆண்டாள் பெருமாளை தான் திருமணம் செய்ய வேண்டுமென்று வேண்டினார். அதற்கு நேர்த்திக் கடனாக 100 அண்டாக்களில் அக்கார அடிசிலை(100 லிட்டர் பாலை காய்ச்சி 25 லிட்டர் பாலாக மாற்றி முந்திரி,பாதாம், பிஸ்தா, கற்கண்டு, குங்குமப்பூ போன்றவைகளை விட்டு கிளறிய சர்க்கரை பொங்கல்) செய்து தருவதாக வேண்டிக்கொண்டார். அதன்படியே ஆண்டாள், ரங்கமன்னாரை திருமணம் செய்து கொண்டாள். ஆனால், ஆண்டாள், அழகருக்கு செய்ய வேண்டிய நேர்த்திக்கடனை செய்யவில்லை. பின், 12ம் நூற்றாண்டில் வாழ்ந்த ராமானுஜர், ஆண்டாளின் வேண்டுதலை நிறைவேற்ற எண்ணம் கொண்டு அக்கார அடிசில் தயாரித்து அழகருக்கு படைத்தார். ராமானுஜரின் பக்திக்கு இரங்கிய அழகர், அவருக்கு தரிசனம் கொடுத்தார்.