நரசிம்மர் என்ற பெயரை கேட்டாலே கோழையும் பலசாலி ஆகிவிடுவர். அப்படி யொரு சக்தி மிகுந்த திருநாமம் அது. முதன் முதலில் நரசிம்ம அவதாரம் நடந்த இடம் ஆந்திரா மாநிலத்திலுள்ள அஹோபில தலம் என புராணங்கள் கூறுகின்றன. அத்தரிசனத்தை மீண்டும் ஒரு முறை காண்பிக்கும்படி வேண்டிக் கொண்டார் கருட பகவான். அத்தரிசனத்தை கண்ட அவர், மெய்மறந்து அஹோபிலம் மஹாபலம் என போற்றி பணிந்தார் என்பது வரலாறு. பெரிய அசுரனை எந்த ஆயுதமும் இல்லாமல் விரல் நகங்களாலேயே வதம் செய்த பராக்கிரமத்தைக் கண்ட வானவர்கள், ‘ஆஹா, மஹாவிஷ்ணுவிற்குத்தான் என்ன பலம்!’ என வியக்க, அந்த ஆச்சரியமே ‘அஹோப(பி)லம்’ என்ற பெயரும் உண்டாயிற்று என சொல்வர்.ஒரு முறை அஹோபிலம் சென்று நரசிம்மரை வணங்கி வருபவர்களுக்கு மஹாபலம் கிடைக்கும்.