ஆழ்வார்களால் மங்களாசனம் செய்யப்பெற்ற தலங்களை 108 திவ்ய தேசங்கள் என்பர். அவற்றில் ஒன்று ஆந்திராவிலுள்ள ‘‘சிங்கவேள் குன்றம்’’ என்னும் தலம் . இதனை அஹோபில மடம் என்றும் அழைப்பர். இத்தலத்தை பற்றி ஆழ்வார்களால் பாடப்பெற்ற அனைத்து பாடல்களிலும் தலத்தின் மேன்மையும், நரசிம்ம அவதாரத்தின் சிறப்புகளும் இடம் பெற்றுள்ளன. நரசிம்மரை வழிபட்டால் குற்றம் இல்லாமல் வாழலாம் என ஆழ்வார்களில் ஒருவரான திருமங்கையாழ்வார் பாடியுள்ளார். இதோ அப்பாடல் செங்கண் ஆளி இட்டிறைஞ்சும் சிங்கவேள்குன்றுடைய எங்கள் ஈசன் எம்பிரானை இருந்தமிழ் நூல் புலவன் மங்கையாளன் மன்னு தொல் சீர் வண்டறை தார் கலியன் செங்கையாளன் செஞ்சொல் மாலை வல்லவர் தீதிலரே.