பிறவிக் கடலை சிறு வாய்க்கால் போல சாதுர்யமாகத் தாண்டியவர் ஆதிசங்கரர். கிருஷ்ணரின் மீதுள்ள பக்தியால் அவர் எழுதிய நுால் பஜகோவிந்தம். 31 ஸ்லோகம் கொண்ட இதில் கோவிந்த நாமத்தின் சிறப்பும், பக்தியின் பெருமையும் கூறப்பட்டுள்ளது. இதன் 20வது ஸ்லோகத்தில், ‘‘பகவத்கீதையை கொஞ்சமாவது தெரிந்து கொள். ஒரு துளி கங்கை நீரையாவது குடித்து உன் பாவத்தைப் போக்கு. கிருஷ்ணரின் திருவடியை வணங்கு. இதை தினமும் செய்தால் போதும். எமன் உன்னை நெருங்க பயப்படுவான்” என்கிறார் ஆதிசங்கரர்.