கோயிலுக்கு செல்லும் போது கருவறை மீதுள்ள விமானத்தை முதலில் தரிசிக்க வேண்டும். அதன் நிழலை மிதிப்பதை தவிர்க்க வேண்டும். பெருமாள் கோயில்களில் 96 வகையான விமானங்கள் உள்ளன. இதில் அஷ்டாங்க விமானம் விசேஷமானது. 108 திவ்ய தேசங்களில் மதுரை கூடழலகர் கோயில், சிவகங்கை மாவட்டம் திருக்கோஷ்டியூர் சவுமிய நாராயணப் பெருமாள் கோயிலில் மட்டுமே அஷ்டாங்க விமானம் உள்ளது. மூன்று நிலைகளுடன், எட்டு பகுதிகளாக உயர்ந்து நிற்கும் இந்த விமானம் ‘ஓம் நமோ நாராயணாய’ என்ற எட்டெழுத்து மந்திரத்தின் வடிவமாக உள்ளது.