திருப்பதி அருகிலுள்ள நாராயணபுரத்தை ஆட்சி செய்தவர் சோழ மன்னரான தொண்டைமான். இவர் ஒருநாள் திருப்பதி மலை மீது யானை வேட்டைக்குச் சென்றார். வழியில் பஞ்சவர்ண கிளி ஒன்றைக் கண்டு மன்னர், அதை பிடிக்க முயன்றார். ‘வெங்கடேசா... கோவிந்தா’ என்னும் திருநாமத்தை சொல்லியபடி கிளி பறந்தது. மன்னரும் பின்தொடர்ந்தார். திருப்பதி கோயில் அருகிலுள்ள சுவாமி புஷ்கரணி என்னும் குளத்தை அடைந்ததும் கிளியைக் காணவில்லை. குளக்கரையில் ஏழுமலையான் சிலையாக நின்று அருள்புரிவதைக் கண்டு அதிசயித்தார். கிளியாக வந்தது பெருமாளே என்பதை அறிந்த தொண்டைமான் சக்கரவர்த்தி கோயிலைக் கட்டினார்.