இங்கிலாந்தை சார்ந்த பெஞ்சமின் ஜொவெட், ஜி.யு. போப் இருவரும் ஆன்மிக விஷயங்களை பற்றி அவ்வப்போது பேசுவார்கள். ஒரு நாள் நிலா வெளிச்சத்தில் உரையாடிக் கொண்டிருந்த அவர்களுடைய பேச்சு தமிழ்நுால்கள் பற்றி எழுந்தது. அப்போது மாணிக்கவாசகரின் திருவாசகம் பற்றி விரிவாக இருவரும் பேசினர். அதைக்கேட்ட அவரோ, நீர் அந்த திருவாசகத்தை நமது மொழியில் எழுத வேண்டும் அது தான் என் ஆசை என ஆணையிட்டார். அதற்கு இச்செயலை செய்ய நீண்ட வாழ்நாள் வேண்டுமே! அதை செய்வதற்கு எனது ஆயுளும் நீடித்திருக்க வேண்டுமே என பணிந்து கேட்டார் ஜி.யு.போப். அதற்கு அவரோ உம்மால் இதைச் செய்ய முடியும். அதற்கான ஆயுளை அந்த திருவாசகம் வழங்கும் என ஆசியளித்தார். அதன்பிறகு மொழி பெயர்த்து நுாலாக்கம் செய்த பின்பும் எட்டு ஆண்டுகள் கூடுதலாக வாழ்ந்தார். திருவாசகத்தை மொழி பெயர்த்த ஜி.யு.போப்பை இந்தியாவிற்கு அனுப்பிய அதிகாரிகள் குற்றம் சாட்டி இங்கிலாந்து நீதிமன்றத்தில் வழக்கிட்டனர். விசாரித்த நீதிபதி அவர் மொழிபெயர்த்த நுாலை கொண்டு வாருங்கள் என கட்டளையிட்டார். அந்நுாலை படித்த நீதிபதி இவ்வழக்கை யாருடைய நிர்பந்தம் இல்லாமல் தள்ளுபடி செய்கிறேன் என்றார். வழக்கிட்டவர்கள் காரணம் கேட்டனர். அதற்கு அந்நுாலை மொழி பெயர்த்து அவர் அம்மதத்திற்கு மாறாமல் இருக்கிறார் என்பது நாம் செய்த புண்ணியம். அந்தளவுக்கு படித்த என்னையே அந்நுால் ஈர்க்கிறது என்றால் மொழிபெயர்த்த அவரையும் ஈர்க்காமல் இருந்திருக்குமா என்ன என சொன்னார். வழக்கிட்டவர்கள் அமைதியாக நகர்ந்தனர். ஆயுள் அதிகரிக்க புண்ணிய செயலில் ஈடுபடுங்கள்.