ஒரு மனிதனின் வாழ்வின் தொடக்கம் பிறப்பு, முடிவு இறப்பு. இரண்டிலுமே சங்கின் சம்பந்தம் உண்டு. அந்தக் காலத்தில் சங்கில் தான் பாலுõட்டுவார்கள். இறப்பிலும் சங்கு ஊதுகிறார்கள். வாழ்வின் நடுவில் திருமணத்தின் போது மணவறை சடங்கின் போதும் மணவறைச் சங்கு ஊதுவார்கள். இந்த மூன்றுமே மனிதவாழ்வில் முக்கியமானவை. சங்க நாதம் ஒலிக்கும் இடத்தில் தெய்வீக சக்தி விளங்கும். துஷ்ட சக்திகள் அண்டாது என்பதற்காகவே சங்கு ஒலிக்கப்படுகிறது.