Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

Prev temple news விருச்சிகம் : ராகு கேது பெயர்ச்சி ... மகரம் : ராகு கேது பெயர்ச்சி பலன் 2023 – 2025 மகரம் : ராகு கேது பெயர்ச்சி பலன் 2023 – 2025
முதல் பக்கம் » ராகு கேது பெயர்ச்சி பலன் (8.10.2023 முதல் 26.4.2025 வரை)
தனுசு : ராகு கேது பெயர்ச்சி பலன் 2023 – 2025
எழுத்தின் அளவு:
தனுசு : ராகு கேது பெயர்ச்சி பலன் 2023 – 2025

பதிவு செய்த நாள்

03 அக்
2023
03:10

மூலம்: முயற்சி வெற்றியாகும்

கடந்து ஒன்றரை ஆண்டாக ராகு 5ம் இடமான மேஷ ராசியில் சஞ்சரித்து பல இன்னல்கள், குடும்பத்தில் குழப்பம், மனதில் பயத்தை ஏற்படுத்தி இருப்பார், எதிர்பார்ப்பு இழுபறியாகும், குழந்தை பாக்கியத்தில் தடை ஏற்பட்டிருக்கும், பிள்ளைகளால் சிலருக்கு சங்கடம் தோன்றியிருக்கும், பூர்வீக சொத்தில் பிரச்னை உண்டாகி இருக்கும், இப்போது உங்கள் ராசிக்கு 4ம் இடமான மீனத்திற்கு அக்.8, 2023 அன்று செல்கிறார் ராகு. அதனால் உடலில் ஏதேனும் பிரச்சினை உண்டாகலாம், மனைவி வகையில் செலவு அதிகரிக்கும், உழைப்பின் மீது கவனம் இல்லாமல் சந்தோஷத்தை தேடி மனம் செல்லும்.  உங்கள் சந்தோஷத்திற்காக கடன் வாங்கியாவது செலவு செய்வீர்கள், சிலர் தவறான பழக்கங்களால் உடல் நிலையை கெடுத்துக் கொள்வர். இருந்தாலும் மீனம் உங்கள் ராசிநாதனின் வீடு என்பதால் பெருமளவில் சங்கடம் ஏற்படாது.


கேது 8.10.2023 முதல் ஜீவன ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால், முன்னேற்றத்திற்குரிய வழி வகைகளை உண்டாக்குவார். தொட்டது துலங்கும், தடைபட்டிருந்த செயல் வெற்றிகரமாக முடியும். பிரபலங்களின் ஆதரவு, உதவி கிடைக்கும். தொழில் எதுவாக இருந்தாலும் அதில் முயற்சி அதிகரிக்கும் அதற்கேற்ப லாபம் ஏற்படும். உறவினர் நண்பர்கள் வகையில் உதவி உண்டாகும்,  புதிய சொத்துகளை வாங்குவீர்கள், பொன் பொருள் சேரும்.

சனி சஞ்சாரம்:
 ராசிக்கு 4ல் ராகுவும், 10ல் கேதுவும் சஞ்சரிக்கும் காலத்தில், அக்.23, 2023 வரை 2ம் இடத்தில் வக்ர கதியாக சஞ்சரிப்பவர் அதன்பின் வக்கிர நிவர்த்தி அடைந்து 2 மாதம் பாத சனியாக சஞ்சரித்து சங்கடத்தை ஏற்படுத்துவார். டிச.20, 2023 முதல் 3ம் இடமான தைரிய ஸ்தானத்தில் சஞ்சரித்து வெற்றி, பொருளாதார முன்னேற்றம், தொழிலில் லாபம், பணியாளர்களுக்கு பதவி உயர்வு, வியாபாரிகளுக்கு முன்னேற்றம், குடும்பத்தில் மகிழ்ச்சி, வியாபாரம், தொழிலில் லாபத்தையும் வழங்குவார்.

குரு சஞ்சாரம்:
ஏப்.30, 2024 வரை உங்கள் ராசிக்கு 5ல் குரு சஞ்சரிப்பது யோகமான நிலை என்றாலும், அக்.8, 2023 க்கும், டிச.20, 2023 க்குமான காலத்தில் அவர் வக்ரம் அடைவதால் இப்பலன்கள் மாறுபடும். அதன்பின் மீண்டும் யோகப் பலன் உண்டாகும். மே 1, 2023 முதல் 6 ல் சஞ்சரிக்கும் குரு முதலில் உடல் நிலையில் சங்கடத்தை உண்டாக்குவார். எதிரி தொல்லை அதிகரிக்கும். பணவரவில் தடை உண்டாகும். தொழிலில் முதலீடுகள் அதிகரிக்கும் என்றாலும் வருமானம் போதிய அளவில் வராது. கடன் தொல்லையால் மனம் கலங்கும், வரவை விட செலவு பல மடங்காக அதிகரிக்கும், எதிலும் நாட்டம் இல்லாமல் போகும். எங்கு போட்டி எதிலும் போட்டி என்ற நிலை உண்டாகும்.

பொதுப்பலன்:
 ராசிநாதன் குரு ஒரு பக்கம் நன்மையை வழங்க, மறு பக்கம் சனியும் நன்மையை வழங்குவார். ராகு உங்கள் ராசிநாதன் வீட்டில் சஞ்சரிப்பதாலும், கேது உங்கள் நட்சத்திர நாதன் என்பதாலும் அவர்கள் உங்களுக்கு கெடுதல் செய்ய மாட்டார்கள் என்பதால் உங்கள் தைரியம் அதிகரிக்கும், தொழில், வியாபாரம் லாபமாக அமையும். குடும்பத்தில் மகிழ்ச்சியும், சொத்து சேர்க்கையும் உண்டாகும்.

தொழில்: ராகு கேது சஞ்சாரத்தால் தொழிலில் முழு கவனம் செலுத்த வேண்டி வரும். பொதுவாக எதிர்பார்த்த லாபம் கிடைக்காமல் போகும் என்றாலும் தொழில் வளர்ச்சிக்கு ஆதாரமான சனி டிச. 20, 2023 முதல் தைரிய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் சங்கடம் ஏற்பட்டாலும் அதை சமாளித்து தொழிலைக் கொண்டு செல்லக்கூடிய நிலை உருவாகும். உங்கள் ராசிநாதனின் பார்வைகளும் லாபத்தை ஏற்படுத்தும்.

பணியாளர்கள்: உழைப்பு அதிகரித்தாலும் அதற்கேற்ற வருமானம் வரும், அலுவலகத்தில் மறைமுக எதிர்ப்பு உண்டாகும், அதைக் கண்டுபிடித்து சரிசெய்வீர்கள். எந்த ஒன்றிலும் துணிச்சலாக செயல்படும் நிலை உண்டாகும். எதிர்பார்ப்பு நிறைவேறும். செல்வாக்கு உயரும். சங்கடம் விலகும்.

பெண்கள்: வாழ்க்கைத் துணையை அனுசரித்துச் செல்வதால் சங்கடங்களில் இருந்து விடுபட முடியும். ஏப்.30, 2024 வரை குருவின் பார்வையால் ராகு கேது பாதிப்பில் இருந்து விடுபடுவீர்கள். சிலருக்கு திருமணம் நடந்தேறும். வேலைக்காக காத்திருந்தவர்களின் எண்ணம் நிறைவேறும். மே 1, 2024 முதல் தொழில், குடும்ப ஸ்தானங்களுக்கு குரு  பார்வை உண்டாவதால் சுய தொழில் செய்பவர்களின் நிலை உயரும். அலுவலகப் பணியில் உயர்வு ஏற்படும், குடும்பத்தில் நெருக்கடி விலகும். வருமானம் அதிகரிக்கும் பொன் பொருள் சேரும்.

கல்வி:  உங்கள் ராசிநாதன் குருவின் வீட்டில் சஞ்சரிக்கும் ராகுவால் சங்கடம் ஏற்படாது.  படிப்பில் கவனம் செல்லும். ஆசிரியர்களின் அறிவுரைகளை ஏற்பீர்கள். வெளிநாட்டிற்கு சென்று கல்வி பயில வேண்டும் என்ற கனவு நிறைவேறும்.

உடல் நிலை: சுக ஸ்தான ராகுவால் உடல் நிலையில் பாதிப்பு ஏற்படும். சிலருக்கு அவர்களின் நடவடிக்கையின் காரணமாக நோய்த்தொற்று உண்டாகும். டிச.20, 2023 முதல் தைரிய வீரிய பராக்கிரம ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் ஆயுள்காரகன்
சனியால் ஆரோக்கியம் மேம்படும். சிகிச்சையால் உடலில் இருந்த சங்கடம்  விலக ஆரம்பிக்கும்.

குடும்பம்: டிச.20,2023 வரை குடும்பத்திற்குள் சங்கடம் இருக்கும். எதிர்பாராத நெருக்கடி ஏற்படும். குடும்பத்தினர் உங்களைப் புரிந்து கொள்ளாமல் போவார்கள் என்றாலும், அதன் பிறகு நிலை மாறும். குடும்பத்தில் மகிழ்ச்சியான நிலை ஏற்படும். குரு சஞ்சாரமும் பார்வைகளும் உங்களுக்கு சாதகமாக இருப்பதால் எதிர்பார்ப்பு நிறைவேறும், புதிய சொத்து சேர்க்கை, வாகனம் வாங்குவீர்கள். திருமண வயதினருக்கு திருமணம் நடந்தேறும், புதிய தொழில் தொடங்குவீர்கள். வருமானம் அதிகரிக்கும், உடல் நிலை சீராகும்.  துணிச்சலுடன் செயல்பட்டு லாபம் அடைவீர்கள்.

பரிகாரம்

ராகு கேதுவை வழிபடுவதோடு சனிக்கிழமைகளில் நவகிரகத்தில் உள்ள சனி பகவானுக்கு நல்லெண்ணை தீபம் ஏற்றி வழிபட்டு வர சங்கடங்கள் விலகும்.


பூராடம்: போராட்டம் முடிவிற்கு வரும்

சுக்கிரனை நட்சத்திர நாதனாகவும், குருவை ராசி நாதனாகவும் கொண்ட உங்களுக்கு அக்.8, 2023 முதல் 4 ம் இடமான மீனத்தில் சஞ்சரிக்க இருக்கிறார். குடும்பத்தில்  குழப்பம், எதிர்பார்ப்புகளில் இழுபறி, தேவையற்ற அலைச்சல்,  தொழில் மீது கவனம் செலுத்த முடியாத நிலையை, கீழோர் நட்பு, பொருளாதார ரீதியாக உங்களைத் தடுமாற வைப்பார்.  சந்தோஷத்திற்கு தடைகளை உண்டாக்குவார்.

கேது 10ம் இடமான ஜீவன ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் முயற்சிக்கேற்ற லாபத்தை அடைவீர்கள். வேலைப்பளு அதிகரிக்கும். ஒரு பக்கம் சங்கடம் என்றால் மறுபக்கம் ஆதாயம் உண்டாகும். உடலில் சில சங்கடம் தோன்றலாம். பிற இனம், மதத்தினரால்  நன்மை உண்டாகும். நண்பர்கள் உதவியாக இருப்பர். அதிகாரிகளின் ஆதரவு அதிகரிக்கும், வாழ்வில் இருந்த நெருக்கடி விலகும்.

சனி சஞ்சாரம்: அக். 23, 2023 வரை 2ம் இடத்தில் வக்ர கதியாக சஞ்சரிக்கும் சனி, அதன்பின் வக்ர நிவர்த்தியாகி 2 மாதம் உங்களுக்கு பாத சனியாக சஞ்சரித்து எதிர்மறையான பலன்களை வழங்குவார். அக்,20, 2023 முதல் 3ம் இடமான தைரிய  ஸ்தானத்தில் சஞ்சரித்து முயற்சியில் வெற்றி, முன்னேற்றம், தொழிலில் எதிர்பார்த்த லாபம், பணியாளர்களுக்கு நன்மை, வழக்கில் வெற்றி, வியாபாரிகளுக்கு லாபம், குடும்பத்தில் மகிழ்ச்சியை வழங்குவார்.

குரு சஞ்சாரம்:
ஏப்.30, 2024 வரை 5ல் குரு சஞ்சரிப்பதால் நினைத்ததெல்லாம் நடந்தேறும். அக்.8, 2023 க்கும் டிச.20,2023 க்குமான காலத்தில் அவர் வக்ரமடைவதால் எதிர்பார்ப்பு இழுபறியாகும். அதன்பின் மீண்டும் நற்பலன் வழங்க ஆரம்பிப்பார். மே1,2024 முதல் ஆறாம் இடத்தில் சஞ்சரிக்கும் குருவால் உடல்நிலையில் அதிருப்தி ஏற்படும்.  எதிரிகளால் நெருக்கடி வரும். வியாபாரத்தில் போட்டியாளர்கள் தலைதுாக்குவர். பண வரவில் தடை உண்டாகும். தொழிலில் பிரச்னை வரலாம். வரவை விட செலவு பல மடங்கு அதிகரிக்கும். குருவின் பார்வை ராசிக்கு 10,12, 2 ல் பதிவதால் அனைத்தையும் சமாளித்து வெற்றி காண்பீர்கள்.

பொதுப்பலன்: அசுர குருவை நட்சத்திர நாதனாகவும், தேவ குருவை ராசிநாதனாகவும் கொண்ட உங்களுக்கு எப்போதும் உங்கள் நலனில் அக்கறை அதிகமாக இருக்கும், நினைத்ததை அடைய வேண்டும் எண்ணம் உங்களுக்குள் அதிகரித்திருக்கும். அதே போல் பிறரால் நேசிக்கக் கூடியவர்களாகவும் இருப்பீர்கள். ராகு கேது பெயர்ச்சி உங்களுக்கு  சங்கடங்களை உண்டாக்கினாலும் குருவின் சஞ்சார நிலையும், பார்வை பலனும் உங்களை முன்னேற்றும். வருமானம் அதிகரிக்கும். அந்தஸ்து உயரும். 3ம் இட சனியும் சாதகமாக இருப்பதால் நன்மை உண்டாகும்.

தொழில்
தொழில் முன்னேற்றம் அடையும், உங்களுக்குள் இருக்கும் தனிப்பட்ட திறமையால் பிரச்னைகளை சமாளித்து முன்னேறுவீர்கள். டிச.20, 2023 முதல் சனிபகவான் உங்களுக்கு சாதகமாக சஞ்சரிப்பதால் முயற்சிகள் வெற்றியாகும். தொழிலில் லாபம் அதிகரிக்கும்.

பணியாளர்கள்: வேலையில் முன்னேற்றம் உண்டாகும். சிலருக்கு பதவி உயர்வு, சம்பள உயர்வு ஏற்படும், அரசு பணியாளர்களுக்கு விரும்பிய இடத்திற்கு இடமாற்றம் உண்டாகும், புதிய பொறுப்பு வந்து சேரும்.

பெண்கள்: 4 ம் இட ராகு மனதில் சில ஆசைகளை ஏற்படுத்தலாம். அதற்கு இடம் கொடுக்காமல் விளைவுகளை யோசித்து செயல்படுவது நல்லது. குடும்ப நலனில் அக்கறை அதிகரிக்கும். பிள்ளைகள் முன்னேற்றத்தில் கவனம் செல்லும். வேலை வாய்ப்பிற்காக காத்திருந்தவர்களுக்கு வேலை அமையும். திருமணம் கூடி வரும். புதிய சொத்து சேர்க்கை ஏற்படும், அலுவலகத்தில் இருந்த பிரச்னை முடிவிற்கு வரும், பதவி உயர்வும் விரும்பிய இடத்திற்கு இடமாற்றமும் சிலருக்கு ஏற்படும்.

கல்வி: மனதில் வேறு சிந்தனைகளுக்கு இடம் கொடுக்காமல், ஆசிரியர்களின் அறிவுரைகளை ஏற்று படிப்பில் கவனம் செலுத்தினால் தேர்வில் எதிர்பார்த்த மதிப்பெண்கள் கிடைக்கும். விரும்பிய நிறுவனத்தில் மேற்படிப்பை தொடர முடியும்.

உடல்நிலை: சுக ஸ்தானத்தில் ராகு சஞ்சரிப்பதால் மனம் அலைபாயும். ஒழுக்கத்திற்கு பாதிப்பு வரும் என்பதால் இக்காலத்தில் எச்சரிக்கை அவசியம். இல்லையெனில் மறைமுக நோய்களுக்கு ஆளாக நேரலாம். ஆயுள்காரகன் சனியின் சஞ்சாரத்தால் ஆரோக்கியம் சீராகும், நீண்ட நாள் நோய்கள் சிகிச்சையால் விலகும். பரம்பரை நோய் இயற்கை வைத்தியத்திற்கு கட்டுப்படும்.

குடும்பம்
குருவருள், சனியின் அருளும் டிச.20, 2023 முதல் உங்களுக்கு கிடைத்திட இருப்பதால், எத்தனை பிரச்னைகள் வந்தாலும் அதை சமாளிப்பீர்கள், குடும்பத்தில்  சங்கடங்கள் ஒவ்வொன்றாக விலக ஆரம்பிக்கும். பிள்ளைகள் மேற்படிப்பு, புதிய வேலை என முன்னேறுவர். புதிய தொழில் தொடங்க முயற்சித்த எண்ணம் நிறைவேறும். வீட்டில் திருமணம் நடந்தேறும். வருமானத்தில் இருந்த தடை விலகும், புதிய சொத்து, வீடு வாங்க யோகம் உண்டு.

பரிகாரம்:
விநாயகர், துர்கை, நரசிம்மரை வழிபட்டு வர நன்மை அதிகரிக்கும்.


உத்திராடம்: உங்கள் நட்சத்திர நாதனான சூரியனுக்கு ராகு கேது பகைவர்கள் என்றாலும் அவர்கள் சஞ்சரிக்கும் இடத்திற்குரிய ஸ்தான பலனைத் தர வேண்டியவர்களாகிறார்கள். அக்.8, 2023 முதல் உத்திராடம் முதல் பாதத்தினருக்கு ராகு 4ம் இடத்திலும், 2,3,4 ம் பாதத்தினருக்கு  3ம் இடத்திலும் சஞ்சரிக்கிறார். கேது உத்திராடம் முதல் பாதத்தினருக்கு 10ம் இடத்திலும் 2,3,4 ம் பாதத்தினருக்கு 9ம் இடமான பாக்கிய ஸ்தானத்திலும் சஞ்சரிக்கிறார். இதனால் முதல் பாதத்தினருக்கு, சற்று எதிர்மறையான பலன்கள் உண்டாகும். சிலருடைய உடல் நிலையில் பின்னடைவு உண்டாகும். தொழிலில் அதிகபட்ச அக்கறை தேவை. வியாபாரத்தில் எதிர்பார்ப்பு இழுபறியாகும் என்றாலும் முயற்சிக்கேற்பற லாபம் வரும்.  இக்காலத்தில் முன்னேற்றம் என்பது உங்கள் முயற்சியாலும், சங்கடம் என்பது அஜாக்கிரதை, ஆசையாலும் உண்டாகும். 2,3,4 ம் பாதத்தினருக்கு மூன்றாமிட ராகுவாலும், பாக்கிய ஸ்தான கேதுவாலும் முன்னேற்றம் உண்டாகும், ஆதாயம் அதிகரிக்கும். நெருக்கடி விலகும். தைரியமாக செயல்பட்டு நினைத்ததை சாதிப்பீர்கள். குல, இஷ்ட தெய்வ வழிபாட்டை மேற்கொள்வீர்கள். அலட்சியத்தின் காரணமாக சில இழப்புகள் வரலாம்.

சனி சஞ்சாரம்
சனி பகவான் மகரத்தில் வக்கிர நிலையிலும், அக்.23, 2023 அன்று வக்ர நிவர்த்தியாகி ஆட்சியாகவும் சஞ்சரிப்பவர் டிச.20, 2023 முதல் கும்ப ராசியில் சஞ்சரித்து உத்திராடம் முதல் பாதத்தினருக்கு, தொழிலில் முன்னேற்றம், உடல்நலம், மனத்துணிவு, வாழ்வில் முன்னேற்றத்தை உண்டாக்குவார். 2,3,4 ம் பாதத்தினருக்கு குடும்பத்தில் சங்கடம், வருமானத்தில் நெருக்கடி, முயற்சியில் பின்னடைவு, வாக்கை காப்பாற்ற முடியாத நிலையை ஏற்படுத்துவார்.

குரு சஞ்சாரம்
மேஷ ராசியில் ஏப்.30, 2024 வரை சஞ்சரிக்கும் குரு, உத்திராடம் முதல் பாதத்தினருக்கு 5 ம் இடத்திலும், 2,3,4 ம் பாதத்தினருக்கு 4 ம் இடத்திலும்  சஞ்சரிப்பதால் முதல் பாதத்தினருக்கு யோகம், அதிர்ஷ்ட நிலையை உண்டாக்குவார், 2,3,4 ம் பாதத்தினருக்கு  அலைச்சல், செலவு, குழப்பம், நெருக்கடி என சங்கடத்தை ஏற்படுத்துவார். அக்.8, 2023 முதல் டிச.20, 2023 வரை அவர் வக்ரமடைவதால் இப்பலன்களில் மாற்றம் உண்டாகும். மே1, 2024 முதல் உத்திராடம் முதல் பாதத்தினருக்கு 6ம் இடத்திலும் 2,3,4 ம் பாதத்தினருக்கு  5ம் இடத்திலும் சஞ்சரிப்பதால், முதல் பாதத்தினருக்கு எதிரி தொல்லை, ஆரோக்கியத்தில் சங்கடம், தொழில், வியாபாரத்தில் போட்டி தோன்றும். 2,3,4 ம் பாதத்தினருக்கு புதிய பாதை தெரியும். தொழில், வியாபாரத்தில் ஆதாயம் அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி, சுபநிகழ்ச்சி நடந்தேறும். செல்வாக்கு உயரும். பொன் பொருள் சேரும்.

பொதுப்பலன்: உத்திராடம் முதல் பாதத்தினருக்கு சனியாலும், 2,3,4 ம் பாதத்தினருக்கு தன்னுடைய பார்வைகளாலும், மே1, 2024 முதல் 5ம் இட சஞ்சார நிலையாலும் குருவால் நன்மை உண்டாகும். முயற்சிகள் வெற்றியாகும், பொருளாதார நெருக்கடி நீங்கும்.   தன்னம்பிக்கை அதிகரிக்கும், தொழிலில் தடைகள் விலகும். சொத்து சேர்க்கை உண்டாகும்.

தொழில்: தொழிலில் இருந்த சங்கடங்கள் விலகும். வரவு அதிகரிக்கும், சிறிய முயற்சிக்கும் பெரிய அளவில் பலன் கிடைக்கும். சிலர் புதிய தொழில் தொடங்குவீர்கள், விற்பனையில் இருந்த தடைகள் விலகும், போட்டியாளர்கள் விலகிச் செல்வர்.  எலக்ட்ரானிக்ஸ், பேக்டரி, ஆட்டோமொபைல்ஸ், ஸ்டேசனரி, பதிப்பகம், பத்திரிகை, சினிமா, தொலைக்காட்சி,  கம்ப்யூட்டர் தொழில்கள் முன்னேற்றம் காணும்.

பணியாளர்கள்: பணியாளர்களின் நிலை உயரும். புதிய பொறுப்பு வந்து சேரும். விரும்பிய இடத்திற்கு இடமாற்றம் உண்டாகும். தனியார் நிறுவனங்களில் பணியாற்றுபவர்களின் செயல் திறன் அதிகரிக்கும். அதன் காரணமாக முதலாளியின் பாராட்டிற்கு ஆளாவீர்கள். ஊதியம் உயரும். நெருக்கடி விலகும்.

பெண்கள்: நீண்ட நாள் கனவு நிறைவேறும். திருமணத்திற்காக காத்திருந்தவர்களுக்கு வரன் தேடி வரும். குழந்தை பாக்கியத்திற்காக ஏங்கியவர்களின் எதிர்பார்ப்பு நிறைவேறும். வேலை வாய்ப்பிற்காக முயற்சித்தவர்களுக்கு எதிர்பார்த்த தகவல் வரும். குடும்பத்தில் செல்வாக்கு உயரும். வாழ்க்கைத் துணையுடன் இருந்த பிரச்னை விலகும்.

கல்வி: ஆசிரியர்களின் அறிவுரை இக்காலத்தில் கைகொடுக்கும். படிப்பில் முழு கவனத்தையும் செலுத்த வேண்டியதாக இருக்கும். பயிற்சி, முயற்சியால் எதிர்பார்த்த மதிப்பெண் கிடைக்கும். மேற்கல்வி கனவு நனவாகும்.

உடல்நிலை: நீண்ட நாளாக உடலில் இருந்த சங்கடங்கள் முடிவிற்கு வரும். ஆரோக்கியம் மேம்படும். பரம்பரை நோய்களும் வைத்தியத்திற்கு கட்டுப்படும்.  வாகனத்தை இயக்குவதில் கவனம் தேவை.

குடும்பம்: நெருக்கடிகள் விலகி குடும்பத்தில் மகிழ்ச்சி தோன்றும். சுபநிகழ்ச்சிகள் நடந்தேறும். புதிய சொத்து சேர்க்கை உண்டாகும். சிலர் புதிய வீட்டில் குடியேறுவீர்கள்.

பரிகாரம்: ராகு காலத்தில் துர்க்கைக்கு எலுமிச்சை விளக்கேற்றி வழிபட்டு வருவதுடன், நவகிரகத்தில் உள்ள கேது பகவானுக்கு செவ்வாய்க்கிழமைகளில் செந்நிற ஆடை சார்த்தி வணங்கி வழிபட்டு வர சங்கடம் போகும்.

 
மேலும் ராகு கேது பெயர்ச்சி பலன் (8.10.2023 முதல் 26.4.2025 வரை) »
temple news
அசுவினி: முயற்சி வெற்றி பெறும்உங்கள் ஜென்ம ராசியில் இதுவரை சஞ்சரித்த ராகு 12ம் இடமான மீன ராசியிலும், ... மேலும்
 
temple news
கார்த்திகை;  கடந்த ஒன்றரை ஆண்டு காலமாக ராகு கார்த்திகை முதல் பாதத்தினருக்கு ஜென்ம ராகுவாகவும், 2,3,4 ம் ... மேலும்
 
temple news
மிருக சீரிடம்: கடந்த ஒன்றரை ஆண்டு காலமாக மிருகசீரிடம் 1 2 ம் பாதத்தினருக்கு விரய ராகுவாகவும், 3,4 ம் ... மேலும்
 
temple news
புனர்பூசம்: புதிய தொழில் தொடங்குவீர்கள்குருபகவானின் புனர்பூச நட்சத்திரத்தில் பிறந்த உங்களில் 1,2,3 ம் ... மேலும்
 
temple news
மகம்: எச்சரிக்கை அவசியம்கேது பகவானை நட்சத்திர நாதனாகவும் சூரியனை ராசி நாதனாகவும் கொண்ட உங்களுக்கு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar