Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

Prev temple news திருப்புகழ் பகுதி-14 திருப்புகழ் பகுதி-3 திருப்புகழ் பகுதி-3
முதல் பக்கம் » திருப்புகழ்
திருப்புகழ் பகுதி-2
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

23 மார்
2013
03:03

66. மூளும்வினை சேர மேல்கொண்டி டாஐந்து
பூதவெகு வாய மாயங்கள் தானெஞ்சில்
மூடிநெறி நீதி யே துஞ்செ யாவஞ்சி  யதிபார
மோகநினை வான போகஞ்செய் வேனண்டர்
தேடஅரி தாய ஞேயங்க ளாய்நின்ற 
மூலபர யோக மேல்கொண் டிடாநின்ற  துளதாகி

நாளுமதி வேக கால்கொண்டு திமண்ட
வாசியன லூடு போயொன்றி வானின்க
ணாமமதி மீதி லூறுங்க லாஇன்ப  அமுதூறல்
நாடியதன் மீத போய்நின்ற ஆநந்த
மேலைவெளி யேறி நீயின்றி நானின்றி
நாடியினும் வேறு தானின்றி வாழ்கின்ற

காளவிட மூணி மாதங்கி வேதஞ்சொல்
பேதைநெடு நீலி பாதங்க ளால்வந்த
காலன்விழ மோதுசாமுண்டி பாரம்பொ  டனல்வாயு
காதிமுதிர் வான மேதங்கி வாழ்வஞ்சி
ஆடல்விடை யேறி பாகங்கு லாமங்கை
காளிநட மாடி நாளன்பர் தாம்வந்து  தொழுமாது

வாளமுழு தாளு மோர்தண்டு ழாய்தங்கு
சோதிமணி மார்ப மாலின்பி னாளின்சொல்
வாழுமுமை மாத ராள்மைந்த னேயெந்தை  யிளையோனே
மாசிலடி யார்கள் வாழ்கின்ற வூர்சென்று
தேடிவிளை யாடி யேயங்ங னேநின்று
வாழுமயில் வீர னேசெந்தில் வாழ்கின்ற  பெருமாளே.

67. வஞ்சஞ்கொண் டுந்திட ராவண
னும்பந்தென் திண்பரி தேர்கரி
மஞ்சின்பண் புஞ்சரி யாமென  வெகுசேனை
வந்தம்பும் பொங்கிய தாகஎ
திர்ந்துந்தன் சம்பிர தாயமும்
வம்புந்தும் பும்பல பேசியு  மெதிரேகை

மிஞ்சென்றுஞ் சண்டைசெய் போதுகு
ரங்குந்துஞ் சுங்கனல் போலவெ
குண்டுங்குன் றுங்கர டார்மர  மதும்வீசி
மிண்டுந்துங் கங்களி னாலெத
கர்ந்தங்கப் கங்கர மார்பொடு
மின்சந்துஞ் சிந்திநி சாசரர்  வகைசேர

வுஞ்சண்டன் தென்றிசை நாடிவி
ழுந்தங்குஞ் சென்றெம தூதர்க
ளுந்துந்துந் தென்றிட வேதசை  நிணமூளை
உண்டுங்கண்  டுஞ்சில கூளிகள்
டிண்டிண்டென் றுங்குதி போடவு
யர்ந்தம்புங் கொண்டுவெல் மாதவன்

தஞ்சந்தஞ் சஞ்சிறி யேன்மதி
கொஞ்சங்கொஞ் சந்துரை யேயருள்
தந்தென்றின் பந்தரு வீடது  தருவாயே
சங்கங்கஞ் சங்கயல் சூழ்தட
மெங்கெங்கும் பொங்கம காபுனி
தந்தங்குஞ் செந்திலில் வாழ்வுயர்  பெருமாளே.

68. வஞ்சத் துடனொரு நெஞ்சிற் பலநினை
வஞ்சிக் கொடியிடை  மடவாரும்
வந்திப் புதல்வரும் அந்திக் கிளைஞரும்
மண்டிக் கதறிட  வகைகூர

அஞ்சக் கலைபடு பஞ்சிப் புழுவுடல்
அங்கிக் கிரையென  வுடன்மேவ
அண்டிப் பயமுற வென்றிச் சமன்வரும்
அன்றைக் கடியிணை தரவேணும்

கஞ்சப் பிரமனை அஞ்சத் துயர்செய்து
கன்றச்  சிறையிடு  மயில்வீரா
கண்டொத் தனமொழி அண்டத் திருமயில்
கண்டத் தழகிய  திருமார்பா

செஞ்சொற் புலவர்கள் சங்கத் தமிழ்தெரி
செந்திற் பதிநகர்  உறைவோனே
செம்பொற் குலவட குன்றைக் கடலிடை
சிந்தப் பொரவல  பெருமாளே.

69. வந்து வந்து முன்த வழ்ந்து
வெஞ்சு கந்த யங்க நின்று
மொஞ்சி மொஞ்சி யென்ற ழுங்கு  ழந்தையோடு
மண்ட லங்கு லுங்க அண்டர்
விண்ட லம்பி ளந்தெ ழுந்த
செம்பொன் மண்ட பங்க ளும்ப  யின்றவீடு

கொந்த ளைந்த குந்த ளந்த
ழைந்து குங்கு மந்த யங்கு
கொங்கை வஞ்சி தஞ்ச மென்று  மங்குகாலம்
கொங்க டம்பு கொங்கு பொங்கு
பைங்க் டம்பு தண்டை கொஞ்சு
செஞ்ச தங்கை தங்கு பங்க  யங்கள்தாராய்

சந்த டர்ந்தெ ழுந்த ரும்பு
மந்த ரஞ்செ ழுங்க ரும்பு
கந்த ரம்பை செண்ப தங்கொள் செந்தில்வாழ்வே
தண்க டங்க டந்து சென்று
பண்க டர்ந்த இன்சொல்
திண்பு னந்து குந்து கண்டி

அந்த கன்க லந்து வந்து
கந்த ரங்க லந்த சிந்து
ரஞ்சி றந்து வந்த லம்பு
அம்பு னம்பு வந்த நண்பர்
சம்பு நன்பு ரந்த ரன்த
ரம்ப லும்பர் கும்பர் நம்பு தம்பிரனே

70. பெரியார் கருங்கண்  மடமாதர்
மகவாசை தொந்த  மதுவாகி
இருபோது நைந்து  மெலியாதே
இருதாளி னன்பு  தருவாயே
பரிபால னஞ்செய்  தருள்வோனே
பரமேசு ரன்ற னருள்பாலா
அரிகேச வன்றன்  மருகோனே
அலைவா யமர்ந்த பெருமாளே.

71. விந்ததி னூறி வந்தது காயம்
வெந்தது கோடி  யினிமேலோ
விண்டுவி டாம லுன்பத மேவு
விஞ்சையர் போல  அடியேனும்

வந்துவி நாச முன்கலி தீர
வண்சிவ ஞான  வடிவாகி
வன்பத மேறி யென்களை யாற
வந்தருள் மேறி யென்களை யாற
வந்தருள் பாத

எந்தணு ளேக செஞ்சுட ராகி
யென்கணி லாடு
எந்தையர் தேடு மன்பர்ச காய
ரெங்கள்சு வாமி  யருள்பாலா

சுந்தர ஞான மென்குற மாது
தன்றிரு மார்பி  லணைவோனே
சுந்தர மான செந்திலில் மேவு
கந்தசு ரேசர்  பெருமாளே.

72. வெஞ்ச ரோருக மோகடு நஞ்ச மோகய லோநெடு
வின்ப சாகர மோவடு  வகிரோமுன்
வெந்து போன புராதன சம்ப ராரி புராரியை
வென்ற சாயக மோகரு  விளையோகண்

தஞ்ச மோயம தூதுவர் நெஞ்ச மோவெனு மாமத
சங்க மாதர் பயோதர  மதில்மூழ்கு
சங்கை யோவிரு கூதள கந்த மாலிகை தோய்தரு
தண்டை சேர்கழ லீவது  மொருநாளே

பஞ்ச பாதக தாருக தண்ட னீறெழ வானவர்
பண்டு போலம ராவதி  குடியேறப்
பங்க யாசனர் கேசவ ரஞ்ச லேயென மால்வரை
பங்க நீறெழ வேல்வீடு  மிளையோனே

செஞ்ச டாடவி மீமிசை கங்கை மாமதி தாதகி
திங்கள் சூடிய நாயகர்  பெருவாழ்வே
செண்ப காடவி நீடிய துங்க மாமதிள் சூழ்தரு
செந்தில் மாநகர் மேவிய  பெருமாளே.

73. அமுதுததி விடமுமிழு செங்கட் டிங்கட்
பகவினொளிர் வெளிறெயிறு துஞ்சற் குஞ்சித்
தலையுமுடை யவனரவ தண்டச் சண்டச்  சமனோலை
அதுவருகு மளவிலுயி ரங்கிட் டிங்குப்
பறைதிமிலை திமிர்தமிகு தம்பட் டம்பற்
கரையவுற வினரலற வுந்திச் சந்தித்  தெருவூடே

எமதுபொரு ளெனுமருளை யின்றிக் குன்றிப்
பிளவளவு தினையளவு பங்கிட் டுண்கைக்
கிளையுமுது வசைதவிர இன்றைக் கன்றைக்  கெனநாடா
திடுககடி தெனுமுணர்வு பொன்றிக் கொண்டிட்
டுடுடுடுடு டுடுடுடுடு டுண்டுட் டுண்டுட்
டெனவகலு நெறிகருதி நெஞ்சத் தஞ்சிப்  பகிராதோ

குமுதபதி வகிரமுது சிந்தச் சிந்தச்
சரணபரி புரசுருதி கொஞ்சக் கொஞ்சக்
குடிலசடை பவுரிகொடு தொங்கப் பங்கிற்  கொடியாடக்
குலதடினி அசையஇசை பொங்கப் பொங்கக்
கழலதிர டெகுடெகுட டெங்கட் டெங்கத்
தொகுகுகுகு தொகுகுகுகு தொங்கத் தொங்கத் தொகுதீதோ

திமிதமென முழவொலிமு ழங்கச் செங்கைத்
தமருகம ததிர்சதியொ டன்பர்க் கின்பத்
திறமுதவு பரதகுரு வந்திக் குஞ்சற்  குருநாதா
திரளுமணி தரளமுயர் தெங்கிற் றங்கிப்
புரளஎறி திரைமகர சங்கத் துங்கத்
திமிரசல நிதிதழுவு செந்திற் கந்தப்  பெருமாளே.

74. கொடியனைய இடைதுவள அங்கமும் பொங்கஅங்
குமுதஅமு திதழ்பருகி யின்புறும் சங்கையன்
குலவியணை முகிலளக முஞ்சரிந் தன்பினின்  பண்புலாவக்
கொடியவிரல் நகநுதியில் புண்படுஞ் சஞ்சலன்
குனகியவ ருடனினிது சம்ப்ரமங் கொண்டுளம்
குரலழிய அவசமுறு குங்குணன் கொங்கவிழ்ந் தொன்றுபாய்மேல்

விடமனைய விழிமகளிர் கொங்கையின் பன்புறும்
வினையனியல் பரவுமுயிர் வெந்தழிந் தங்கமும்
மிதமொழிய அறிவில்நெறி பண்பிலண் டுஞ்சகன் செஞ்செநீடும்
வெகுகனக வொளிகுலவும் அந்தமன் செந்திலென்
றவிழவுள சிறுகமல மன்பிலன் தந்திலன்
விரவுமிரு சிறுகமல பங்கயந் தந்துகந்  தன்புறாதோ

படமிலகு மரவினுட லங்கமும் பங்கிடந்
துதருமொரு கலபிமிசை வந்தெழுந் தண்டர்தம்
பகையசுர ரனைவருடல் சந்துசந் துங்கதஞ்  சிந்தும்வேலா
படியவரு மிமையவரும் நின்றிறைஞ் செண்குணன்
பழையஇறை யுருவமிலி யன்பர்பங் கன்பெரும்
பருவரல்செய் புரமெரிய விண்டிடுஞ் செங்கணன் கங்கைமான்வாழ்

சடிலமிசை யழகுபுனை கொன்றையும் பண்புறுந்
தருணமதி யினகுறைசெய் துண்டமுஞ் செங்கையொண்
சகலபுவ னமுமொழிக தங்குறங் கங்கியும்  பொங்கிநீடும்
சடமருவு விடையரவர் துங்கஅம் பங்கினின்
றுலகுதரு கவுரியுமை கொங்கைஅந் தன்புறும்
தமிழ்விரக வுயர்பரம சங்கரன் கும்பிடுந்  தம்பிரானே.

75. அம்பொத் தவிழித் தந்தக் கலகத்
தஞ்சிக் கமலக்  கணையாலே
அன்றிற் குமனற் றென்றற் குமிளைத் 
தந்திப் பொழுதிற்  பிறையாலே

எம்பொற் கொடிமற் றுன்பக் கலனற்
றின்பக் கலவித்  துயரானாள்
என்பெற் றுலகிற் பெண்பெற் றவருக்
கின்பப் புலியுற்  றிடலாமோ

கொம்புக் கரிபட் டஞ்சப் பதுமக்
கொங்கைக் குறவிக்  கினியோனே
கொன்றைச் சடையற் கொன்றைத் தெரியக்
கொஞ்சித் தமிழைப்  பகர்வோனே

செம்பொற் சிகரப் பைம்பொற் கிரியைச்
சிந்தக் கறுவிப்  பொரும்வேலா
செஞ்சொற் புலவர்க் கன்புற் றதிருச்
செந்திற் குமரப்  பெருமாளே.

76. கொங்கைப் பணையிற் செம்பொற் செறிவிற்
கொண்டற் குழவிற்  கொடிதான
கொன்றைக் கணையொப் பந்தக் கயலிற்
கொஞ்சுக் கிளியுற்  றுறவான

சங்கத் தொனியிற் சென்றிற் கடையிற்
சந்திப் பவரைச்  சருவாதே
சந்தப் படியுற் றென்றற் றலையிற்
சந்தப் பதம்வைத் தருள்வாயே

அங்கப் படைவிட் டன்றைப் படுகைத்
கந்திக் கடலிற்  கடிதோடா
அந்தப் பொழிலிற் சந்துத் தலையுற்
றஞ்சப் பொருதுற் றொழியாதே

செங்கைக் கதிருற் றொன்றக் கடலிற்
சென்றுற் றவர்தற்  பொருளானாய்
சிந்தைக் கனிவைத் தந்தப் பொழிலிற்
செந்திற் குமரப்  பெருமாளே.

77. புகரப் புங்கப் பகரக் குன்றிற்
புயலிற் றங்கிப்  பொலிவோனும்
பொருவிற் றஞ்சச் சுருதிச் சங்கப்
பொருளைப் பண்பிற்  புகழ்வோனும்

திகிரிச் செங்கட் செவியிற் றுஞ்சத்
திகிரிச் செங்கைத்  திருமாலும்
திரியப் பொங்கித் திரையற் றுண்டுட்
டெளிதற் கொன்றைத்  தரவேணும்

தகரத் தந்தச் சிகரத் தொன்றித்
தடநற் கஞ்சத்  துறைவோனே
தருணக் கொங்கைக் குறவிக் கின்பத்
தையளித் தன்புற்  றருள்வோனே

பகரப் பைம்பொற் சிகரக் குன்றைப்
படியிற் சிந்தத்  தொடும்வேலா
பவளத் துங்கப் புரிசைச் செந்திற்
பதியிற் கந்தப்  பெருமாளே.

78. அளக பாரம லைந்துகு லைந்திட
வதனம் வேர்வுது லங்கிந லங்கிட
அவச மோகம் விளைந்ததுத ளைந்திட  அணைமீதே
அருண வாய்நகை சிந்திய சம்ப்ரம
அடர்ந காநுதி பங்கவி தஞ்செய்து
அதர பானம ருந்திம ருங்கிற  முலைமேல்வீழ்ந்

துளமும் வேறுப டும்படி யொன்றிடு
மகளிர் தோதக இன்பின் முயங்குத
லொழியு மாறு தெளிந்துள மன்பொடு  சிவயோகத்
துருகு ஞானப ரம்பர தந்திர
அறிவி னோர்கரு தங்கொள் சிலம்பணி
உபய சீதள பங்கய மென்கழல்  தருவாயே

இளகி டாவளர் சந்தன குங்கும
களப பூரண கொங்கை நலம்புனை
யிரதி வேள்பணி தந்தையும் அந்தண மறையோனும்
இனிது றாதெதி ரிந்திர னண்டரும்
அரஹ ராசிவ சங்கர சங்கர
எனமி காவரு நஞ்சினை யுண்டவ  ரருள்பாலா

வளர்நி சாசரர் தங்கள்சி ரம்பொடி
படவி ரோதமி டுங்குல சம்ப்ரமன்
மகர வாரிக டைந்தநெ டும்புயல்  மருகோனே
வளரும் வாழையு மஞ்சளு மிஞ்சியும்
இடைவி டாதுநெ ருங்கிய மங்கல
மகிமை மாநகர் செந்திலில் வந்துறை  பெருமாளே.

79. கமல மாதுட னிந்துரை யுஞ்சரி
சொலவொ ணாதம டந்தையர் சந்தன
களப சீதள கொங்கையி லங்கையி  லிருபோதேய்
களபு நூல்தெரி வஞ்சனை யஞ்சன
விழியின் மோகித கந்த சுகந்தரு
கரிய வோதியி லிந்து முகந்தனின்  மருளாதே

அமல மாகிய சிந்தைய டைந்தகல்
தொலைவி லாதஅ றம்பொரு ளின்பமு
மடையவோதியு ணர்ந்து தணந்தபின்  அருள்தானே
அறியு மாறுபெ றும்படி யன்பினி
னினிய நாதசி லம்புபு லம்பிடு
மருண ஆடக கிண்கிணி தங்கிய  அடிதாராய்

குமரி காளிப யங்கரி சங்கரி
கவுரி நீலிப ரம்பரை யம்பிகை
குடிலை யோகினி சண்டினி குண்டலி  யெமதாயி
குறைவி லாளுமை மந்தரி யந்தரி
வெகுவி தாகம சுந்தரி தந்தருள்
குமர மூஷிக முந்திய ஐங்கர  கணராயன்

மமவி நாயக னஞ்சுமிழ் கஞ்சுகி
அணிக ஜானன விம்பனொ ரம்புலி
மவுலி யானுறு சிந்தையு கந்தரு  ளிளையோனே
வளரும் வாழையு மஞ்சளு மிஞ்சியும்
இடைவி டாது நெருங்கிய மங்கல
மகிமை மாநகர் செந்திலில் வந்துறை  பெருமாளே.

80. அவனிபெ றுந்தோட் டம்பொற்
குழையட ரம்பாற் புண்பட்
டரிவையர் தம்பாற் கொங்கைக்  கிடையேசென்
றணைதரு பண்டாட் டங்கற்
றுருகிய கொண்டாட் டம்பெற்
றழிதரு திண்டாட் டஞ்சற்  றொழியாதே

பவமற நெஞ்சாற் சிந்தித்
திலகுக டம்பார்த் தண்டைப்
பதயுக ளம்போற் றுங்கொற்  றமுநாளும்
பதறிய அங்காப் பும்பத்
தியுமறி வும்போய்ச் சங்கைப்
படுதுயர் கண்பார்த் தன்புற் றருளாயோ

தவநெறி குன்றாப் பண்பிற்
றுறவின ருந்தோற் றஞ்சத்
தனிமல ரஞ்சார்ப் புங்கத்  தமராடி
தமிழினி தென்காற் கன்றிற்
றிரிதரு கஞ்சாக் கன்றைத்
தழலெழ வென்றார்க் கன்றற்  புதமாகச்

சிவவடி வங்காட் டுஞ்சற்
குருபர தென்பாற் சங்கத்
திரள்மணி சிந்தாச் சிந்துக்  கரைமோதும்
தினகர திண்டேர்ச் சண்டப்
பரியிட றுங்கோட் டிஞ்சித்
திருவளர் செந்தூர்க் கந்தப்  பெருமாளே.

81. தொடரிய மன்போற் றுங்கப்
படையைவளைந்தோட் டுந்துட்
டரையிள குந்தோட் கொங்கைக்  கிடுமாயத்
துகிலவிழ வுஞ்சேர்த் தங்கத்
துளைவிர குஞ்சூழ்த் தண்டித்
துயர்விளை யுஞ்சூட் டின்பத்  தொடுபாயற்

கிடைகொடு சென்றீட் டும்பொற்
பணியரை மென்றேற் றங்கற்
றனையென இன்றோட் டென்றற்  கிடுமாதர்க்
கினிமையி லொன்றாய்ச் சென்றுட்
படுமன முன்றாட் கன்புற்
றியலிசை கொண்டேத் தென்றுட்  டருவாயே

நெடிதுத வங்கூர்க் குஞ்சற்
புருடரும் நைந்தேக் கம்பெற்
றயர்வுற் நின்றார்த் தங்கட்  கணையேவும்
நிகரில்ம தன்தேர்க் குன்றற்
றெரியில்வி ழுந்தேர்ப் பொன்றச்
சிறிதுநி னைந்தாட் டங்கற்  றிடுவோர்முன்

திடமுறு அன்பாற் சிந்தைக்
கறிவிட முஞ்சேர்த் தும்பர்க்
கிடர்களை யும்போர்ச் செங்கைத்  திறல்வேலா
தினவரி வண்டார்த் தின்புற்
றிசைகொடு வந்தேத் திஞ்சித்
திருவளர் செந்தூர்க் கந்தப் பெருமாளே.

82. அனிச்சங் கார்முகம் வீசிட மாசறு
துவட்பஞ் சானத டாகம்வி டாமட
அனத்தின் தூவிகு லாவிய சீறடி  மடமானார்
அருக்கன் போலொளி வீசிய மாமர
கதப்பைம் பூணணி வார்முலை மேல்முகம்
அழுத்தும் பாவியை யாவி யிடேறிட  நெறிபாரா

வினைச்சண் டாளனை வீணனை நீணிதி
தனைக்கண் டாணவ மானநிர் மூடனை
விடக்கன் பாய்நுகர் பாழனை யோர்மொழி  பகராதே
விகற்பாங் கூறிடு மோகவி காரனை
அறத்தின் பாலொழு காதமு தேவியை
விளித்துன் பாதுகை நீதர நானருள்  பெறுவேனோ

முனைச்சங் கோலிடு நீலம கோததி
அடைத்தஞ் சாதஇ ராவண னீள்பல
முடிக்கன் றோர்கணை யேவுமி ராகவன்  மருகோனே
முளைக்குஞ் சீதநி லாவொட ராவிரி
திரைக்கங் காநதி தாதகி கூவிள
முடிக்குஞ் சேகரர் பேரரு ளால்வரு  முருகோனே

தினைச்செங் கானக வேடுவ ரானவர்
திகைத்தந் தோவென வேகணி யாகிய
திறற்கந் தாவளி நாயகி காமுறும்  எழில்வேலா
சிறக்குந் தாமரை யோடையில் மேடையில்
நிறக்குஞ் சூல்வளை பால்மணி வீசிய
திருச்செந் தூர்வரு சேவக னேசுரர்  பெருமாளே.

83. உருக்கம் பேசிய நீலியர் காசுகள்
பறிக்குந் தோஷிகள் மோகவி காரிகள்
உருட்டும் பார்னையர் மாபழி காரிகள்  மதியாதே
உரைக்கும் வீரிகள் கோளர வாமென
வுடற்றுந் தாதியர் காசள வேமனம்
உறைக்குந் தூரிகள் மீதினி லாசைகள்  புரிவேனோ

அருக்கன் போலொளி வீசிய மாமுடி
யனைத்தும் தானழ காய்நல மேதர
அருட்கண் பார்வையி னாலடி யார்தமை  மகிழ்வோடே
அழைத்துஞ் சேதிகள் பேசிய காரண
வடிப்பந் தானென வேயெனை நாடொறும்
அதிக்கஞ் சேர்தர வேயரு ளாலுட  னினிதாள்வாய்

இருக்குங் காரண மீறிய வேதமும்
இசைக்குஞ் சாரமு மேதொழு தேவர்கள்
இடுக்கண் தீர்கன னேயடி யார்தவ  முடன்மேவி
இலக்கந்  தானென வேதொழ வேமகிழ்
விருப்பங் கூர்தரு மாதியு மாயுல
கிறுக்குந் தாதகி சூடிய வேணிய  னருள்பாலா

திருக்குந் தாபதர் வேதிய ராதியர்
துதிக்குங் தாளுடை நாயக னாகிய
செகச்செஞ் சோதியு மாகிய மாதவன்  மருகோனே
செழிக்குஞ் சாலியு மேகம ளாவிய
கருப்பஞ் சோலையும் வாழையு மேதிகழ்
திருச்செந் தூர்தனில் மேவிய தேவர்கள்  பெருமாளே.

84. நிறுக்குஞ் சூதன மெய்த்தன முண்டைகள்
கருப்பஞ் சாறொட ரைத்துள வுண்டைகள்
நிழற்கண் காணவு ணக்கிம ணம்பல  தடவாமேல்
நெருக்கும் பாயலில் வெற்றிலை யின்புறம்
ஒளித்தன் பாகஅ ளித்தபி னிங்கெனை
நினைக்கின் றீரிலை மெச்சலி தஞ்சொலி  யெனவோதி

உறக்கண் டாசைவ லைக்குள ழுந்திட
விடுக்கும் பாவிகள் பொட்டிகள் சிந்தனை
யுருக்குந் தூவைகள் செட்டை குணந்தனி  லுழலாமே
உலப்பின் றாறெனு மக்கர முங்கமழ்
கடப்பந் தாரும கப்ரபை யுந்தினம்
உளத்தின் பார்வையி டத்தினி னைந்திட  அருள்வாயே

கறுக்குந் தூயமி டற்றன ருஞ்சிலை
யெடுக்குந் தோளனி றத்தம ரெண்கரி
கடக்குந் தானவ னைக்கொல ரும்புயன்  மருகோனே
கனத்தஞ் சாபுரி சிக்கல்வ லஞ்சுழி
திருச்செங் கோடு இடைக்கழி தண்டலை
களர்ச்செங் காடு குறுக்கை புறம்பயம்  அமர்வோனே

சிறுக்கண் கூர்மத அத்தி சயிந்தவ
நடக்குந் தேரனி கப்படை கொண்டமர்
செலுத்தும் பாதகன் அக்ரமன் வஞ்சனை  யுருவானோன்
செருக்குஞ் சூரக லத்தை யிடந்துயிர்
குடிக்கும் கூரிய சத்திய மர்ந்தருள்
திருச்செந் தூர்நக ரிக்குள் விளங்கிய  பெருமாளே.

85. கரிக்கொம்பந் தனித்தங்கங்
குடத்தின்பந் தனத்தின்கண்
கறுப்புந்தன் சிவப்புஞ்செம்  பொறிதோள்சேர்
கணைக்கும்பண் டுழைக்கும்பங்
களிக்கும்பண் பொழிக்குங்கண்
கழுத்துஞ்சங் கொளிக்கும்பொன்  குழையாடச்

சரக்குஞ்சம் புடைக்கும்பொன்
றுகிற்றந்தந் தரிக்குந்தன்
சடத்தும்பண் பிலுக்குஞ்சம்  பளமாதர்
சலித்தும்பின் சிரித்துங்கொண்
டழைத்துஞ்சண் பசப்பும்பொன்
தனத்துன்பந் தவிப்புண்டிங்  குழல்வேனோ

சுரர்ச்சங்கம் துதித்தந்தஞ்
செழுத்தின்பங் களித்துண்பண்
சுகத்துய்ந்தின் பலர்ச்சிந்தங்  சுகராரைத்
துவைத்தும்பந் தடித்துஞ்சங்
கொலித்துங்குன் றிடித்தும்பண்
சுகித்துங்கண் களிப்புங்கொண்  டிடும்வேலா

சிரப்பண்புங் கரப்பண்புங்
கடப்பந்தொங் கலிற்பண்புஞ்
சிவப்பண்புந் தவப்பண்புந்  தருவோனே
தினைத்தொந்தங் குறப்பெண்பண்
சசிப்பெண்கொங் கையிற்றுஞ்சுஞ்
செழிக்குஞ்செந் திலிற்றங்கும்  பெருமாளே.

86. கருப்பந்தங் கிரத்தம்பொங்
கரைப்புண்கொண் டுருக்கும்பெண்
களைக்கண்டங் கவர்ப்பின்சென்  றவரோடே
கலப்புண்டுஞ் சிலுப்புண்டுந்
துவக்குண்டும் பிணக்குண்டுங்
கலிப்புண்டுஞ் சலிப்புண்டுந்  தடுமாறிச்

செருத்தண்டந் தரித்தண்டம்
பகத்தண்டந் தகற்கென்றுந்
திகைத்தந்திண் செகத்தஞ்சுங்  கொடுமாயும்
தியக்கங்கண் டுயக்கொண்டென்
பிறப்பங்கஞ் சிறைப்பங்கஞ்
சிதைத்துன்றன் பதத்தின்பந்  தருவாயே

அருக்கன்சஞ் சரிக்குந்தெண்
டிரைக்கண்சென் றரக்கன்பண்
பனைத்தும்பொன் றிடக்கன்றுங்  கதிர்வேலா
அணிச்சங்கங் கொழிக்குந்தண்
டலைப்பண்பெண் டிசைக்குங்கொந்
தளிக்குஞ்செந் திலிற்றங்குங்  குமரேசா

புரக்குஞ்சங் கரிக்குஞ்சங்
கரர்க்குஞ்சங் கரர்க்கின்பம்
புதுக்குங்கங் கையட்குந்தஞ்  சுதனானாய்
புனக்குன்றந் திளைக்குஞ்செந்
தினைப்பைம்பொன் குறக்கொம்பின்
புறத்தண்கொங் கையிற்றுஞ்சும்  பெருமாளே.

87. குழைக்குஞ்சந் தனச்செங்குங்
குமத்தின்சந் தநற்குன்றங்
குலுக்கும்பைங் கொடிக்கென்றிங்  கியலாலே
குழைக்குங்குண் குமிழ்க்குஞ்சென்
றுரைக்குஞ்செய் கயற்கண்கொண்
டழைக்கும்பண் தழைக்குஞ்சிங்  கியராலே

உழைக்குஞ்சங் கடத்துன்பன்
சுகப்பண்டஞ் சுகித்துண்டுண்
டுடற்பிண்டம் பருத்தின்றிங்  குழலாதே
உதிக்குஞ்செங் கதிர்ச்சிந்தும்
ப்ரபைக்கொன்றுஞ் சிவக்குந்தண்
டுயர்க்குங்கிண் கிணிச்செம்பஞ்  சடிசேராய்

தழைக்குங்கொன் றையைச்செம்பொன்
சடைக்கண்டங் கியைத்தங்குந்
தரத்தஞ்செம் புயத்தொன்றும்  பெருமானார்
தனிப்பங்கின் புறத்தின்செம்
பரத்தின்பங் கயத்தின்சஞ்
சரிக்குஞ்சங் கரிக்கென்றும்  பெருவாழ்வே

கழைக்குங்குஞ் சரக்கொம்புங்
கலைக்கொம்புங் கதித்தென்றுங்
கயற்கண்பண் பளிக்குந்திண்  புயவேளே
கறுக்குங்கொண் டலிற்பொங்கும்
கடற்சங்கங் கொழிக்கும்செந்
திலிற்கொண்டன் பினிற்றங்கும்  பெருமாளே.

88. மனத்தின்பங் கெனத்தங்கைம்
புலத்தென்றன் குணத்தஞ்சிந்
த்ரியத்தம்பந் தனைச்சிந்தும்  படிகாலன்
மலர்ச்செங்கண் கனற்பொங்குந்
திறத்தின்தண் டெடுத்தண்டங்
கிழித்தின் றிங் குறத்தங்கும்  பலவோரும்

எனக்கென்றிங் குனக்கென்றங்
கினத்தின்கண் கணக்கென்றென்
றிளைத்தன்புங் கெடுத்தங்கங்  கழிவாமுன்
இசைக்குஞ்செந் தமிழ்க்கொண்டங்
கிரக்கும்புன் றொழிப்பங்கங்
கெடத்துன்பங் கழித்தின்பம்  தருவாயே

கனைக்குந்தண் கடற்சங்கங்
கரத்தின்கண் தரித்தெங்குங்
கலக்கஞ்சிந் திடக்கண்துஞ்  சிடுமாலும்
கதித்தொண்பங் கயத்தன்பண்
பனைத்துங்குன் றிடச்சந்தங்
களிக்குஞ்சம் புவுக்குஞ்செம்  பொருளீவாய்

திøக்குன்றந் தனிற்றங்குஞ்
சிறுப்பெண்குங் குமக்கும்பந்
திருச்செம்பொன் புயத்தென்றும்  புனைவோனே
செழிக்குங்குண் டகழ்ச்சங்கங்
கொழிக்குஞ்சந் தனத்தின்பைம்
பொழிற்றண்செந் திலிற்றங்கும்  பெருமாளே.

89. பருத்தந்தத் தினைத்தந்திட்
டிருக்குஞ்கச் சடர்த்துந்திப்
பருக்கும்பொற் ப்ரபைக்குன்றத்  தனமானார்
பரிக்குந்துற் சரக்கொன்றத்
திளைத்தங்குற் பலப்பண்பைப்
பரக்குஞ்சக் கரத்தின்சத்  தியைநேரும்

துரைச்செங்கட் கடைக்கொன்றிப்
பெருத்தின்புற் றிளைத்தங்குத்
துணிக்கும்புத் தியைச்சங்கித்  தறியேனைத்
துணைச்செம்பொற் பதத்தின்புற்
றெனக்கென்றப் பொருட்டங்கத்
தொடுக்குஞ்சொற் றமிழ்த்தந்திப்  படியாள்வாய்

தருத்தங்கப் பொலத்தண்டத்
தினைக்கொண்டச் சுரர்க்கஞ்சத்
தடத்துன்பத் தினைத்தந்திட்  டெதிர்சூரன்
சமர்க்கெஞ்சிப் படித்துஞ்சக்
கதிர்த்துங்கத் தயிற்கொண்டத்
தலத்தும்பர்ப் பதிக்கன்புற்  றருள்வோனே

திருக்கஞ்சத் தனைக்கண்டித்
துறக்கங்குட் டிவிட்டுஞ்சற்
சிவற்கன்றப் பொருட்கொஞ்சிப்  பகர்வோனே
செயத்துங்கக் கொடைத்துங்கத்
திருத்தங்கித் தரிக்கும்பொற்
றிருச்செந்திற் பதிக்கந்தப்  பெருமாளே.

90. பெருக்கச்சஞ் சலித்துக்கந்
தலுற்றுப்புந் தியற்றுப்பின்
பிழைப்பற்றுங் குறைப்புற்றும்  பொதுமாதர்
ப்ரியப்பட்டங் கழைத்துத்தங்
கலைக்குட்டங் கிடப்பட்சம்
பிணித்துத்தந் தனத்தைத்தந்  தணையோதே

புரக்கைக்குன் பதத்தைத்தந்
தெனக்குத்தொண் டுறப்பற்றும்
புலத்துக்கண் செழிக்கச்செந்  தமிழ்பாடும்
புலப்பட்டங் கொடுத்தற்கும்
கருத்திற்கண் படக்கிட்டும்
புகழ்ச்சிக்குங் க்ருபைச்சித்தம்  புரிவாயே

தருக்கிக்கண் களிக்கத்தெண்
டனிட்டுத்தண் புனத்திற்செங்
குறத்திக்கன் புறச்சித்தந்  தளர்வோனே
சலிப்புற்றங் குரத்திற்சம்
ப்ரமித்துக்கொண் டலைத்துத்தன்
சமர்த்திற்சங் கரிக்கத்தண்  டியசூரன்

சிரத்தைச்சென் றறுத்துப்பந்
தடித்துத்திண் குவட்டைக்கண்
டிடித்துச்செந் திலிற்புக்கங்  குறைவோனே
சிறக்கற்கஞ் செழுத்தத்தந்
திருச்சிற்றம் பலத்தத்தன்
செவிக்குப்பண் புறச்செப்பும்  பெருமாளே.

91. காலனார் வெங்கொடுந் தூதர்பா சங்கொடென்
காலினார் தந்துடன்  கொடுபோகக்
காதலார் மைந்தருந் தாயரா ருஞ்சுடுங்
கானமே பின்தொடர்ந்  தலறாமுன்

சூலம்வாள் தண்டுசெஞ் சேவல்கோ தண்டமுஞ்
சூடுதோ ளுந்தடந்  திருமார்புந்
தூயதாள் தண்டையுந் காணஆர் வஞ்செயுந்
தோகைமேல் கொண்டுமுன்  வரவேணும்

ஆலகா லம்பரன் பாலதா கஞ்சிடுந்
தேவர்வா ழன்றுகந்  தமுதீயும்
ஆரவா ரஞ்செயும் வேலைமேல் கண்வளர்ந்
தாதிமா யன்றனன்  மருகோனே

சாலிசேர் சங்கினம் வாவிசூழ் பங்கயஞ்
சாரலார் செந்திலம்  பதிவாழ்வே
தாவுசூ ரஞ்சிமுன் சாயவே கம்பெறுந்
தாரைவே லுந்திடும்  பெருமாளே.

92. சங்கைதா னொன்றுதா னின்றியே நெஞ்சிலெ
சஞ்சலா ரம்பமாயன்-
சந்தொடே குங்குமா லங்க்ருதா டம்பரா
சம்ப்ரமா நந்தமாயன்;

மங்கைமார் கொங்கைசே ரங்கமோ கங்களால்
வம்பிலே துன்புறாமே-
வண்குகா நின்சொரு பம்ப்ரகா சங்கொடே
வந்துநீ யன்பிலாள்வாய்;

கங்கைசூ டும்பிரான் மைந்தனே அந்தனே
கந்தனே விஞ்சையூரா-
கம்பியா திந்த்ரலோ கங்கள் கா வென்றவா
கண்டலே சன்சொல்வீரா;

செங்கைவேல் வென்றிவேல் கொண்டுசூர் பொன்றவே
சென்றுமோ தும்ப்ரதாபா-
செங்கண்மால் பங்கஜா னன்தொழா நந்தவேள்
செந்தில் வாழ் தம்பிரானே.

93. சங்குபோல் மென்கழுத் தந்தவாய் தந்தபற்
சந்தமோ கின்பமுத்  தெனவானிற்
றங்குகார் பைங்குழற் கொங்கைநீள் தண்பொருப்
பென்றுதாழ் வொன்றறுத்  துலகோரைத்

துங்கவேள் செங்கைபொற் கொண்டல்நீ யென்றுசொற்
கொண்டுதாய் நின்றுரைத்  துழலாதே
துன்பநோய் சிந்துநந் கந்தவே ளென்றுனைத்
தொண்டினை லொன்றுரைக்  கருள்வாயே

வெங்கண்வ்யா ளங்கொதித் தெங்கும்வே மென்றெடுத்
துண்டுமே லண்டருக்  கமுதாக
விண்டநா தன்திருக் கொண்டல்பா கன்செருக்
குண்டுபே ரம்பலத்  தினிலாடி

செங்கண்மால் பங்கயக் கண்பெறா தந்தரத்
தின்கணா டுந்திறற்  கதிராழித்
திங்கள்வா ழுஞ்சடைத் தம்பிரா னன்புறச்
செந்தில்வாழ் செந்தமிழ்ப்  பெருமாளே.

94. பங்கமே வும்பிறப் பந்தகா ரந்தனிற்
பந்தபா சந்தனிற்  றடுமாறிப்
பஞ்சபா ணம்படப் புண்படா வஞ்சகப்
பண்பிலா டம்பரப்  பொதுமாதர்

தங்களா லிங்கனக் கொங்கையா கம்படச்
சங்கைமால் கொண்டிளைத்  தயராதே
தண்டைசூழ் கிண்கிணிப் புண்டரீ கந்தனைத்
தந்துநீ யன்புவைத்  தருள்வாயே

அங்கைவேல் கொண்டரக் கன்ப்ரதா பங்கெடுத்
தண்டவே தண்டமுட்  படவேதான்
அஞ்சவே திண்டிறற் கொண்டலா கண்டலற்
கண்டலோ கங்கொடுத்  தருள்வோனே

திங்களார் கொன்றைமத் தந்துழாய் துன்றுபொற்
செஞ்சடா பஞ்சரத்  துறுதோகை
சிந்தையே தென்றிசைத் தென்றல்வீ சும்பொழிற்
செந்தில்வாழ் செந்தமிழ்ப்  பெருமாளே.

95. சத்தமிகு மேழுகட லைத்தேனை
யுற்றமது தோடுகணை யைப்போர்கொள்
சத்திதனை மாவின்வடு வைக்காவி  தனைமீறு
தக்கமணம் வீசுகம லப்பூவை
மிக்கவிளை வானகடு வைச்சீறு
தத்துகளும் வாளையடு மைப்பாவு  விழிமாதர்

மத்தகிரி போலுமொளிர் வித்தார
முத்துவட மேவுமெழில் மிக்கான
வச்சிரகி ரீடநிகர் செப்பான  தனமீதே
வைத்தகொடி தானமயல் விட்டான
பத்திசெய ஏழையடி மைக்காக
வஜ்ரமயில் மீதிலினி யெப்போது வருவாயே

சித்ரவடி வேல்பனிரு கைக்கார
பத்திபுரி வோர்கள்பனு வற்கார
திக்கினு நடாவுபுர விக்கார  குறமாது
சித்தஅநு ராககல விக்கார
துட்டஅசு ரேசர்கல சுக்கார
சிட்டர்பரி  பாலலளி தக்கார  அடியார்கள்

முத்திபெற வேசொல்வச னக்கார
தத்தைநிகர் தூயவனி தைக்கார
முச்சகர்ப் ராவுசர ணக்கார  இனிதான
முத்தமிழை யாயும்வரி சைக்கார
பச்சைமுகில் தாவுபுரி சைக்கார
முத்துலவு வேலைநகர் முத்தேவர்  பெருமாளே.

96. சந்தனச வாதுநிறை கற்பூர
குங்குமப டீரவிரை கத்தூரி
தண்ழுக ளாவுகள பச்சீத  வெகுவாச
சண்பகக லாரவகு ளத்தாம
வம்புதுகி லாரவயி ரக்கோவை
தங்கியக டோரதர வித்தார  பரிதான

மந்தரம தானதன மிக்காசை
கொண்டுபொருள் தேடுமதி நிட்டூர
வஞ்சகவி சாரஇத யப்பூவை  யனையார்கள்
வந்தியிடு மாயவிர கப்பார்வை
அம்பிலுளம் வாடுமறி வற்றேனை
வந்தடிமை யாளஇனி யெப்போது  நினைவாயே

இந்த்ரபுரி காவலமுதன் மைக்கார
சம்ப்ரமம யூரதுர கக்கார
என்றுமக லாதஇள மைக்கார  குறமாதின்
இன்பஅநு போகசர சக்கார
வந்த அசு ரேசர்கல கக்கார
எங்களுமை சேயெனரு மைக்கார  மிகுபாவின்

செந்தமிழ்சொல் நாலுகவி தைக்கார
குன்றெறியும் வேலின்வலி மைக்கார
செஞ்சொலடி யார்களெளி மைக்கார
திங்கள்முடி நாதர்சம யக்கார
மந்த்ரவுப தேசமகி மைக்கார
செந்தினகர் வாழுமரு மைத்தேவர்  பெருமாளே.

97. முந்துதமிழ் மாலை கோடிக் கோடி
சந்தமொடு நீடு பாடிப்பாடி
முஞ்சர்மனை வாசல் தேடித் தேடி யுழலாதே-
முந்தைவினை யேட ராமற் போக
மங்கையர்கள் காதல் தூரத் தேக
முந்தடிமை யேனை யாளத் தானு முனைமீதே;

திந்திதிமி தோதி தீதித் தீதி
தந்ததன தான தானத் தான
செஞ்செணகு சேகு தாளத்தோடு நடமாடுஞ்-
செஞ்சிறிய கால்வி சாலத் தோகை
துங்க அநுகூல பார்வைத் தீர
செம்பொன் மயில் மீதி லேயெப் போது வருவாயே;

அந்தண்மறை வேள்வி காவற் கார
செந்தமிழ் சொல் பாவின் மாலைக் கார
அண்டரூப கார சேவற் கார முடிமேலே-
அஞ்சலிசெய் வோர்கள் நேயக் கார
குன்றுருவ ஏவும் வேலைக் கார
அந்தம் வெகு வான ரூபக் கார எழிலான;

சிந்துரமின் மேவு போகக் கார
விந்தைகுற மாது வேளைக் கார
செஞ்சொலடி யார்கள் வாரக் கார எதிரான-
செஞ்சமரை மாயு மாயக் கார
துங்கரண சூர சூறைக் கார
செந்திநகர் வாழு மாண்மைக் கார பெருமாளே.

98. தண்டே னுண்டே வண்டார் வஞ்சேர்
தண்டார் மஞ்சுக்  குழல்மானார்
தம்பா லன்பார் நெஞ்சே கொண்டே
சம்பா வஞ்சொற்  றடிநாயேன்

மண்டோ யந்தீ மென்கால் விண்டோய்
வண்கா யம்பொய்க்  குடில்வேறாய்
வன்கா னம்போ யண்டா முன்பே
வந்தே நின்பொற்  கழல்தாராய்

கொண்டா டும்பேர் கொண்டா டுஞ்சூர்
கொன்றாய் வென்றிக்  குமரேசா
கொங்கார் வண்டார் பண்பா டுஞ்சீர்
குன்றா மன்றற்  கிரியோனே

கண்டா கும்பா லுண்டா யண்டார்
கண்டா கந்தப்  புயவேளே
கந்தா மைந்தா ரந்தோள் மைந்தா
கந்தா செந்திற்  பெருமாளே.

99. வெங்கா ளம்பா ணஞ்சேல் கண்பால்
மென்பா கஞ்சொற்  குயில்மாலை
மென்கே சந்தா னென்றே கொண்டார்
மென்றோ ளொன்றப  பொருள்தேடி

வங்கா ளஞ்சோ னம்சீ னம்போய்
வன்பே துன்பப்  படலாமோ
மைந்தா ருந்தோள் மைந்தா அந்தா
வந்தே யிந்தப்  பொழுதாள்வாய்

கொங்கார் பைந்தே னுண்டே வண்டார்
குன்றாள் கொங்கைக்  கினியோனே
குன்றோ டுஞ்சூ ழம்பே ழுஞ்சூ
ரும்போய் மங்கப்  பொருகோபா

கங்கா ளஞ்சேர் மொய்ம்பா ரன்பார்
கன்றே யும்பர்க்  கொருநாதா
கம்பூர் சிந்தார் தென்பால் வந்தாய்
கந்தா செந்திற்  பெருமாளே.

100. விதிபோலு முந்த விழியாலு மிந்து
நுதலாலு மொன்றி  யிளைஞோர்தம்
விரிவான சிந்தை யுருவாகி நொந்து
விறல்வேறு சிந்தை  வினையாலே

இதமாகி யின்ப மதுபோத வுண்டு
இனிதாளு மென்று  மொழிமாதர்
இருளாய துன்ப மருள்மாயை வந்து
எனையீர்வ தென்றும்  ஒழியாதோ

மதிசூடி யண்டர் பதிவாழ மண்டி
வருமால முண்டு  விடையேறி
மறவாத சிந்தை யடியார்கள் பங்கில்
வருதேவ சம்பு  தருபாலா

அதிமாய மொன்றி வருசூரர் பொன்ற
அயில்வேல்கொ டன்று  பொரும்வீரா
அழகான செம்பொன் மயில்மேல மர்ந்து
அலைவாயு கந்த  பெருமாளே.

101. விறல்மார னைந்து மலர்வாளி சிந்த
சிகவானி லிந்து வெயில்காய-
மிதவாடை வந்து தழல்போல வொன்ற
வினை மாதர் தந்தம் வசைகூற;

குறவாணர் குன்றி லுறைபேதை கொண்ட
கொடிதான துன்ப மயல்தீர-
குளிர்மாலை யின்க ணணிமாலை தந்து
குறை தீர வந்து குறுகாயோ;

மறிமானு கந்த இறையோன் மகிழ்ந்து
வழிபாடு தந்த மதியாளா-
மலைமாவு சிந்த அலைவேலை யஞ்ச
வடிவே லெறிந்த அதிதீரா;

அறிவா லறிந்து னிருதா ளிறைஞ்சு
மடியா ரிடைஞ்சல் களைவோனே-
அழகான செம்பொன் மயில்மே லமர்ந்து
அலைவா யுகந்த பெருமாளே.

102. அங்கை மென்குழ லாய்வார் போலே
சந்தி நின்றய லோடே போவா
ரன்பு கொண்டிட நீரோ போறீ  ரறியீரோ
அன்று வந்தொரு நாள்நீர் போனீர்
பின்பு கண்டறி யோநா மீதே
அன்று மின்றுமொர் போதோ போகா  துயில்வாரா

எங்க ளந்தரம் வேறா ரோர்வார்
பண்டு தந்தது போதா தோமே
லின்று தந்தற வோதா னீதே  னிதுபோதா
திங்கு நின்றதென் வீடே வாரீ
ரென்றி ணங்கிகள் மாயா லீலா
இன்ப சிங்கியில் வீணே வீழா  தருள்வாயே

மங்கு லின்புறு வானாய் வானூ
டன்ற ரும்பிய காலாய் நீள்கால்
மண்டு றும்பகை நீறா வீறா  ளிதீயாய்
வந்தி ரைந்தெழு நீராய் நீர்சூழ்
அம்ப ரம்புனை பாராய் பாரேழ்
மண்ட லம்புகழ் நீயாய் நானாய்  மலரோனாய்

உங்கள் சங்கரர் தாமாய் நாமார்
அண்ட பந்திகள் தாமாய் வானாய்
ஒன்றி னுங்கடை தோயா மாயேன்  மருகோனே
ஒண்த டம்பொழில் நீடூர் கோடூர்
செந்தி லம்பதி வாழ்வே வாழ்வோர்
உண்ட நெஞ்சறி தேனே வானோர்  பெருமாளே.

103. தண்டையணி வெண்டையங் கிண்கிணிச தங்கையும்
தண்கழல்சி லம்புடன் கொஞ்சவேநின்-
தந்தையினி முன்பரிந் தின்பவுரி கொண்டுநன்
சந்தொடம ணைந்து நின் றன்பு போலக்;

கண்டுறக டம்புடன் சந்தமகு டங்களுங்
கஞ்சமலர் செங்கையுஞ் சிந்துவேலும்-
கண்களுமு கங்களுஞ் சந்திர நிறங்களுங்
கண்குளிர என்றன்முன் சந்தியாவோ;

புண்டரிக ரண்டமுங் கொண்டபகி ரண்டமும்
பொங்கியெழ வெங்களங் கொண்டபோது-
பொன்கிரியே னஞ்சிறந்தெங்கினும் வளர்ந்து முன்
புண்டரிகர் தந்தையுஞ் சிந்தை கூரக்;

கொண்டநட னம்பதஞ் செந்திலிலு மென்றன்முன்
கொஞ்சிநட னங்கொளுங் கந்தவேளே-
கொங்கை குற மங்கையின் சந்தமண முண்டிடுங்
கும்பமுநி கும்பிடுந் தம்பிரானே.

மூன்றாம் படைவீடு - பழநி (திருவாவினன் குடி)

104. நாத விந்துக லாதி நமோநம
வேத மந்த்ரசொரூபா நமோநம  வெகுகோடி
ஞான பண்டித ஸாமீ நமோநம
நாம சம்புகு மாரா பாலா நமோநம
போக அந்தரி பாலா நமோநம
நாக பந்தம யூரா நமோநம  பரசூர்

சேத தண்டவி நோதா நமோம
கீத கிண்கிணி பாதா நமோநம  கிரிராஜ
தீர சம்ப்ரம வீரா நமோநம
தீப மங்கள ஜோதீ நமோநம.
தூய அம்பல லீலா நமோநம
தேவ குஞ்சரி பாகா நமோநம  அருள்தாராய்

ஈத லும்பல கோலால பூஜையும்
ஓத லுங்குண ஆசார நீதியும்
ஈர முங்குரு சீர்பாத சேவையு  மறவாத
எழ்த லாம்புகழ் காவேரி யால்விளை
சோழ மண்டல மீதேம னோகர
ராஜ öம்பிபர நாடாளு நாயக  வயலூரா

ஆத ரம்பயி லாரூரர் கோதுமை
சேர்தல் கொண்ட ரோடேமு னாளிகனில்
ஆடல் வெம்பரி மீதேறி மாகவி  லையிலகி
ஆதி யந்தவு லாவாசு பாடிய
சேரர் கொங்குவை காவூர்ந னாடியில்

105. போத கந்தரு கோவே நமோநம
நீதி தங்கிய தேவா நமோநம
பூத லந்தனை யாள்வாய் நமோநம  பணியாவும்
பூணு கின்றபி ரானே நமோநம
வேடர் தங்கொடி மாலா நமோநம
போத வன்புகழ் ஸாமீ நமோநம  அரிதானை

வேத மந்திர ரூபா நமோநம
ஞான பண்டித நாதா நமோநம
வீர கண்டைகொள் தாளா நமோநம  அழகான
மேனி தங்கிய வேளே நமோநம
வ்õன பைந்தொடி வாழ்வே நமோநம
வீறு கொண்டவி சாகா நமோநம  அருள்தாராய்

பாத கஞ்செறி சூரதி மாளவெ
கூர்மை கொண்டயி லாலேபொ ராடியே
பார அண்டர்கள் வானாடு, ÷ர்சந்தர  அருள்வோனே
பாதி சந்திர னேசூடும் வேணியர்
சூல சங்கர னார்கீத நாயகர்
பார திண்புய மேசேரு சோதியர்  கயிலாயர்

ஆதி சங்கர னார்பாக மாதுமை
கோல அம்பிகை மாதா மநோமணி
ஆயி சுந்தரி தாயான நாணி  அபிராமி
ஆவல் கொண்டுவி றாலேசி ராடவெ
கோம ளம்பல சூழ்கோயில் மீறிய
ஆவி னன்குடி வாழ்வான் தேவர்கள்  பெருமளே!.

106. வார ணந்தனை நேரான மாமுலை
மீத ணிந்திடு பூணார மாரொளி
வால சந்திர னேராக மாமுக  மெழில்கூர
வார ணங்கிடு சேலான நீள்விழி
யோலை தங்கிய வார்காது வாவிட
வான இன்சுதை மேலான வாயித  ழமுதூறத்

தோர ணஞ்செறி தார்வாழை யேய்தொடை
மீதில் நின்றிடை நூல்போலு லாவியெ
தோகை யென்றிட வாகாக வூரன  நடைமானார்
தோத கந்தனை மாமாயை யேவடி
வாக நின்றதெ னாஆய வோர்வது
தோணி டும்படி நாயேனுள் நீயருள்  புரிவாயே

கார ணந்தனை யோராநி சாசரர்
தாம டங்கலு மீறாக வானவர்
காவ லிந்திர னாடாள வேயயில்  விடும்வீரா
கார்வி டந்தனை யூணாக வானவர்
வாழ்த ரும்படி மேனாளி லேமிசை
காள கண்டம காதேவ னார்தரு  முருகோனே

ஆர ணன்றனை வாதாடி யோருரை
ஓது கின்றென வாராதெ னாவவ
னாண வங்கெட வேகாவ லாமதி  லிடும்வேலா
ஆத வன்கதி ரோவாது லாவிய
கோபு ரங்கிளர் மாமாது மேவிய
ஆவி னன்குடி யோனேசு ராதிபர்  பெருமாளே.

107. மூல மந்திர மோத லிங்கிலை
யீவ திங்கிலை நேய மிங்கிலை
மோன மிங்கிலை ஞான மிங்கிலை  மடவார்கள்
மோக முண்டதி தாக முண்டப
சார முண்டப ராத முண்டிடு
மூக னென்றொரு பேரு முண்டருள்  பயிலாத

கோல முங்குண வீன துன்பர்கள்
வார்மை யும்பல வாகி வெந்தெழு
கோர கும்பியி லேவி ழுந்திட  நினைவாகிக்
கூடு கொண்டுழல் வேனை யன்பொடு
ஞான நெஞ்சினர் பாலி ணங்கிடு
கூர்மை தந்தினி யாள வந்தருள்  புரிவாயே

பீலி வெந்துய ராவி வெந்தவ
சோகு வெந்தமண் மூகர் நெஞ்சிடை
பீதி கொண்டிட வாது கொண்டருள்  எழுதேடு
பேணி யங்கெதி ராறு சென்றிட
மாற னும்பிணி தீர வஞ்சகர்
பீறு வெங்கழு வேற வென்றிடு  முருகோனே

ஆல முண்டவர் சோதி யங்கணர்
பாக மொன்றிய வாலை யந்தரி
ஆதி யந்தமு மான சங்கரி  குமரேசா
ஆர ணம்பயில் ஞான புங்கவ
சேவ லங்கொடி யான பைங்கர
ஆவி னன்குடி வாழ்வு கொண்டருள்  பெருமாளே.

108. வேயி சைந்தெழு தோள்கள் தங்கிய
மாதர் கொங்கையி லேமு யங்கிட
வீணி லுஞ்சில பாத கஞ்செய  அவமேதான்
வீறு கொண்டுட னேவ ருந்தியு
மேயு லைந்தவ மேதி ரிந்துள
மேக வன்றறி வேக லங்கிட  வெகுதூரம்

போய லைந்துழ லாகி நொந்துபின்
வாடி நைந்தென தாவி வெம்பியெ
பூத லந்தனி லேம யங்கிய  மதிபோகப்
போது கங்கையி னீர்சொ ரிந்திரு
பாத பங்கய மேவ ணங்கியெ
பூசை யுஞ்சில வேபு ரிந்திட  அருள்வாயே

தீயி சைந்தெழ வேயி லங்கையில்
ராவ ணன்சிர மேய ரிந்தவர்
சேனை யுஞ்செல மாள வென்றவன்  மருகோனே
தேச மெங்கணு மேபு ரந்திடு
சூர்ம டிந்திட வேலின் வென்றவ
தேவர் தம்பதி யாள அன்புசெய்  திடுவோனே

ஆயி சுந்தரி நீலி பிங்கலை
போக அந்தரி சூலி குண்டலி
ஆதி யம்பிகை வேத தந்திரி  யிடமாகும்
ஆல முண்டர னாரி றைஞ்சவொர்
போத கந்தனை யேயு கந்தருள்
ஆவி னன்குடி மீதி லங்கிய  பெருமாளே.

109. கோல குங்கும கற்புர மெட்டொன்
றான சந்தன வித்துரு மத்தின்
கோவை செண்பக தட்பம கிழ்ச்செங்  கழுநீரின்
கோதை சங்கிலி யுற்றக ழுத்தும்
பூஷ ணம்பல வொப்பனை மெச்சுங்
கூறு கொண்டப ணைத்தனம் விற்கும்  பொதுமாதர்

பாலு டன்கனி சர்க்கரை சுத்தந்
தேனெ னும்படி மெத்தரு சிக்கும்
பாத கம்பகர் சொற்களி லிட்டம்  பயிலாமே
பாத பங்கய முற்றிட வுட்கொண்
டோது கின்றதி ருப்புகழ் நித்தம்
பாடு மன்பது செய்ப்பதி யிற்றந்  தவனீயே

தால முன்புப டைத்தப்ர புச்சந்
தேக மின்றிம திக்கவ திர்க்குஞ்
சாக ரஞ்சுவ றக்கிரி யெட்டுந்  தலைசாயச்
சாடு குன்றது பொட்டெழ மற்றுஞ்
சூர னும்பொடி பட்டிட யுத்தஞ்
சாத கஞ்செய்தி ருக்கைவி திர்க்குந்  தனிவேலா

ஆல முண்டக ழுத்தினி லக்குந்
தேவ ரென்புநி ரைத்தெரி யிற்சென்
றாடு கின்றத கப்பனு கக்குங்  குருநாதா
ஆட கம்புனை பொற்குடம் வைக்குங்
கோபு ரங்களி னுச்சியு டுத்தங்
காவி னன்குடி வெற்பினி னிற்கும்  பெருமாளே.

110. அபகார நிந்தைபட்  டுழலாதே
அறியாத வஞ்சரைக்  குறியாதே
உபதேச மந்திரப்  பொருளாலே
உனைநானி னைந்தருட்  பெறுவேனோ

இபமாமு கன்தனக்  கிளையோனே
இமவான்ம டந்தையுத்  தமிபாலா
ஜெபமாலை தந்தசற்  குருநாதா
திருவாவி னன்குடிப்  பெருமாளே.

111. கனமா யெழுந்துவெற் பெனவே யுயர்ந்துகற்
புரமா ரணந்துளுத்  திடுமானார்
கனிவா யுகந்துசிக் கெனவே யணைந்துகைப்
பொருளே யிழந்துவிட்  டயர்வாயே

மனமே தளர்ந்துவிக் கலுமே யெழுந்துமட்
டறவே யுலந்துசுக்  கதுபோலே
வசமே யழிந்துவுக் கிடுநோய் துறந்துவைப்
பெனவே நினைந்துனைப்  புகழ்வேனோ

புனவேடர் தந்தபொற் குறமாது இன்புறப்
புணர்காதல் கொண்டஅக்  கிழவோனே
புனலேழு மங்கவெற் பொடுசூர் சிரங்கள்பொட்
டெழவே லெறிந்தவுக்  கிரவீரா

தினமேவு  குங்குமப் புயவாச கிண்கிணிச்
சிறுகீத செம்பதத்  தருளாளா
சிவலோக சங்கரிக் கிறைபால பைங்கயத்
திருவாவி னன்குடிப்  பெருமாளே.

112. கார ணிந்தவரைப் பார டர்ந்துவினைக்
காதல் நெஞ்சயரத்  தடுமாறிக்
கான ரம்புதிரத் தோல்வ ழும்புறுபொய்க்
காய மொன்றுபொறுத்  தடியேனும்

தாரி ணங்குகுழற் கூர ணிந்தவிழிச்
சாப மொன்றுநுதற்  கொடியார்தம்
தாள்ப ணிந்தவர்பொற் றோள்வி ரும்பிமிகத்
தாழ்வ டைந்துலையத்  தகுமோதான்

சூர னங்கம்விழத் தேவர் நின்றுதொழத்
தோய முஞ்சுவறப்  பொரும்வேலா
தூய்மை கொண்டகுறத் தோகை நின்றபுனச்
சூழ்பெ ருங்கிரியில்  திரிவோனே

ஆர ணன்கருடக் கேத னன்தொழமுற்
றால முண்டவருக்  குரியோனே
ஆலை யும்பழனச் சோலை யும்புடைசுற்
றாவி னன்குடியின்  பெருமாளே.

113. சிவனார் மனங்குளிர உபதேச மந்த்ரமிரு
செவிமீதி லும்பகர்செய்  குருநாதா
சிவகாம சுந்தரிதன் வரபால கந்தநின
செயலேவி ரும்பியுளம்  நினையாமல்

அவமாயை கொண்டுலகில் விருதாவ லைந்துழலும்
அடியேனை அஞ்சலென  வரவேணும்
அறிவாக மும்பெருக இடரான துந்தொலைய
அருள்ஞான இன்பமது  புரிவாயே

நவநீத முந்திருடி உரலோடெ யொன்றுமரி
ரகுராமர் சிந்தைமகிழ்  மருகோனே
நவலோக முங்கைதொழ நிசதேவ லங்கிருத
நலமான விஞ்சைகரு  விளைகோவே

தெவயானை யங்குறமின் மணவாள சம்ப்ரமுறு
திறல்வீர மிஞ்சுகதிர்  வடிவேலா
திருவாவி னன்குடியில் வருவேள்ச வுந்தரிக
செகமேல்மெய் கண்டவிறல்  பெருமாளே.

114. பகர்தற்கரி தான செந்தமி ழிசையிற்சிலபாட லன்பொடு
பயிலப்பல காவி யங்களை  யுணராதே
பவளத்தினை வீழி யின்கனி யதனைப்பொரு வாய்ம டந்தையர்
பசலைத்தன மேபெ றும்படி  விரகாலே

சகரக்கடல் சூழ மம்புவி மிசையிப்படி யேதி ரிந்துழல்
சருகொத்துள மேய யர்ந்துடல்  மெலியாமுன்
தகதித்தமி தாகி ணங்கிண எனவுற்றெழு தோகை யம்பரி
தனிலற்புத மாக வந்தருள்  புரிவாயே

நுகர்வித்தக மாகு மென்றுமை மொழியிற் பொழி பாலை யுண்டிடு
நுவல்மெய்ப்புள பால னென்றிடு  மிளையோனே
நுதிவைத்தக ராம லைந்திடு களிறுக்கரு ளேபு ரிந்திட
நொடி யிற்பரி வாக வந்தவன்  மருகோனே

அகரப்பொரு ளாதி யொன்றிடு முதலக்கர மான தின்பொருள்
அரனுக்கினி தாமொ ழிந்திடு  குருநாதா
அமரர்க்கிறை யேவ ணங்கிய பழநித்திரு வாவி னன்குடி
அதனிற்குடி யாயி ருந்தருள்  பெருமாளே.

115. வஞ்சனை மிஞ்சிய மாய வம்பிகள்
வந்தவர் தங்களை வாதை கண்டவர்
வங்கண முந்தெரி யாம லன்புகள்  பலபேசி
மஞ்சமி ருந்தது ராக விந்தைகள்
தந்தக டம்பிக ளூற லுண்டிடு
மண்டைகள் கண்டித மாய்மொ ழிந்திடு  முரையாலே

சஞ்சல முந்தரு மோக லண்டிகள்
இன்சொல்பு ரிந்துரு காத தொண்டிகள்
சங்கம மென்பதை யேபு ரிந்தவ  னயராதே
தங்களில் நெஞ்சக மேம கிழ்ந்தவர்
கொஞ்சிந டம்பயில வேசை முண்டைகள்
தந்தசு கந்தனை யேயு கந்துடல்  மெலிவேனோ

கஞ்சன்வி டுஞ்சுக டாசு ரன்பட
வென்றுகு ருந்தினி லேறி மங்கையர்
கண்கள்சி வந்திட வேக லந்தரு  முறையாலே
கண்டும கிழ்ந்தழ காயி ருந்திசை
கொண்டுவி ளங்கிய நாளி லன்பொடு
கண்குளி ருந்திரு மால்ம கிழ்ந்தருள்  மருகோனே

குஞ்சர வஞ்சியு மான்ம டந்தையும்
இன்பமி குந்திடவேய ணைந்தருள்
குன்றென வந்தருள் நீப முந்திய  மணிமார்பா
கொந்தவி ழுந்தட மேநி ரம்பிய
பண்புத ருந்திரு வாவி னன்குடி
குன்றுக ளெங்கினு மேவ ளர்ந்தருள்  பெருமாளே.

116. அணிபட் டணுகித் திணிபட் டமனத்
தவர்விட் டவிழிக்  கணையாலும்
அரிசுற் றுகழைத் தவர்பெற் றவளத்
தவன்விட் டமலர்க்  கணையாலும்

பிணிபட் டுணர்வற் றவமுற் றியமற்
பெறுமக் குணமுற்  றுயிர்மாளும்
பிறவிக் கடல்விட் டுயர்நற் கதியைப்
பெறுதற் கருளைத்  தரவேணும்

கணிநற் சொருபத் தையெடுத் துமலைக்
கனியைக் கணியுற்  றிடுவோனே
கமலத் தயனைப் ப்ரணவத் துரையைக்
கருதிச் சிறைவைத்  திடுவோனே

பணியப் பணியப் பரமர்ப் பரவப்
பரிவுற் றொருசொற்  பகர்வோனே
பவளத் தவளக் கனகப் புரிசைப்
பழநிக் குமரப்  பெருமாளே.

117. இருசெப் பெனவெற் பெனவட் டமுமொத்
திளகிப் புளகித்  திடுமாதர்
இடையைச் சுமையைப் பெறுதற் குறவுற்
றிறுகக் குறுகிக்  குழல்சோரத்

தருமெய்ச் சுவையுற் றிதழைப் பருகித்
தழுவிக் கடிசுற்  றணைமீதே
சருவிச் சருவிக் குனகித் தனகித்
தவமற் றுழலக்  கடவேனோ

அரிபுத் திரசித் தஜனுக் கருமைக்
குரியத் திருமைத்  துனவேளே
அடல்குக் குடநற் கொடி பெற் றெதிருற்
றசுரக் கிளையைப்  பொருவோனே

பரிவுற் றரனுக் கருணற் பொருளைப்
பயனுற் றறியப்  பகர்வோனே
பவனப் புவனச் செறிவுற் றுயர்மெய்ப்
பழநிக் குமரப்  பெருமாளே.

118. கடலைச் சிறைவைத் துமலர்ப் பொழிலிற்
ப்ரமரத் தையுடற் பொறியிட் டுமடுக்
கமலத் தைமலர்த் திவிடத் தையிரப்  பவனூணாக்
கருதிச் சருவிக் கயலைக் கயமுட்
படுவித் துழையைக் கவனத் தடைசிக்
கணையைக் கடைவித் துவடுத் தனையுப் பினின்மேவி

அடலைச் செயல்சத் தியையக் கினியிற்
புகுவித் துயமப் ப்ரபுவைத் துகைவித்
தரிகட் கம்விதிர்த் துமுறித் துமதித்  தசகோரம்
அலறப் பணிரத் நமணிக் குழையைச்
சிலுகிட் டுமையிட் டொளிவிட் டுமருட்
டுதலுற் றபொறிச் சியர்கட் கடையிற்  படுவேனோ

சடிலத் தவனிட் டவிசிட் டகுலத்
தொருசெட் டியிடத் தினுதித் தருள்வித்
தகருத் ரஜன்மப் பெயர்செப் பியிடப்  பரிவாலே
சநகர்க் குமகஸ்த் யபுலஸ்த் யசநற்
குமரர்க் குமநுக் க்ரக மெய்ப் பலகைச்
சதுபத் துநவப் புலவர்க் கும்விபத்  தியில்ஞான

படலத் துறுலக் கணலக் யதமிழ்த்
த்ரயமத் திலகப் பொருள்வ்ருத தியினைப்
பழுதற் றுணர்வித் தருள்வித் தகசற்  குருநாதா
பவளக் கொடிசுற் றியபொற் கமுகிற்
றலையிற் குலையிற் பலமுத் துதிர்செய்ப்
பழநிப் பதிவெற் பினில்நிற் குமரப்  பெருமாளே.

119.  தகைமைத் தனியிற் பகைகற் றுறுகைத்
தநுமுட் டவளைப்  பவனாலே
தரளத் திரளிற் புரளக் கரளத்
மரத் திமிரக்  கடலாலே

உகைமுத் தமிகுத் ததெனப் பகல்புக்
கொளிமட் குமிகைப்  பொழுதாலே
உரையற் றுணர்வற் றுயிரெய்த் தகொடிக்
குனநற் பிணையற்  றரவேணும்

திகைபத் துமுகக் கமலத் தனைமுற்
சிறையிட் டபகைத்  திறல்வீரா
திகழ்கற் பகமிட் டவனக் கனகத்
திருவுக் குருகிக்  குழைமார்பா

பகலக் கிரணப் பரணச் சடிலப்
பரமற் கொருசொற்  பகர்வோனே
பவனப் புவனச் செறிவுற் றுயர்மெய்ப்
பழநிக் குமரப்  பெருமாளே.

120. புடைசெப் பெனமுத் தணிகச் சறவுட்
பொருமிக் கலசத்  திணையாய
புளகக் களபக் கெருவத் தனமெய்ப்
புணரத் தலையிட்  டமரேசெய்

அடைவிற் றினமுற் றவசப் படுமெற்
கறிவிற் பதடிக்  கவமான
அசடற் குயர்வொப் பதில்நற் க்ருபையுற்
றடிமைக் கொருசொற்  புகல்வாயே

குடமொத் தகடக் கரடக் கலுழிக்
குணமெய்க் களிறுக்  கிளையோனே
குடிபுக் கிடமிட் டசுரப் படையைக்
குறுகித் தகரப்  பொரும்வேலா

படலைச் செறிநற் கதலிக் குலையிற்
பழமுற் றொழுகப்  புனல்சேர்நீள்
பழனக் கரையிற் கழைமுத் துகுநற்
பழநிக் குமரப்  பெருமாளே

121. கரிய பெரிய எருமை கடவு
கடிய கொடிய  திரிசூலன்
கறுவி யிறுகு கயிறொ டுயிர்கள்
கழிய முடுகி  யெழுகாலந்

திரியு நரியு மெரியு முரிமை
தெரிய விரவி  யணுகாதே
செறிவு மறிவு முறவு மனைய
திகழு மடிகள்  தரவேணும்

பரிய வரையி னரிவை மருவு
பரம ரருளு  முருகோனே
பழன முழவர் கொழுவி லெழுது
பழைய பழநி  யமர்வோனே

அரியு மயனும் வெருவ வுருவ
அரிய கிரியை  யெறிவோனே
அயிலு மயிலு மறமு நிறமு
மழகு முடைய  பெருமாளே.

122. தமரு மமரு மனையு மினிய
தனமு மரசும்  அயலாகத்
தறுகண் மறலி முறுகு கயிறு
தலையை வளைய  எறியாதே

கமல விமல மரக தமணி
கனக மருவு  மிருபாதம்
கருத அருளி யெனது தனிமை
கழிய அறிவு  தரவேணும்

குமர சமர முருக பரம
குலவு பழநி  மலையோனே
கொடிய பகடு முடிய முடுகு
குறவர் சிறுமி  மணவாளா

அமர ரிடரு மவுண ருடலு
மழிய அமர்செய்  தருள்வோனே
அறமு நிறமு மயிலு மயிலு
மழகு முடைய  பெருமாளே.

123. திமிர வுதநி யனைய நரக
செனன மதனில் விடுவாயேல்-
செவிடு குருடு வடிவு குறைவு
சிறிது மிடியு மணுகாதே;

அமரர் வடிவு மதிக குலமு
மறிவு நிறையும் வரவேநின்-
அருள தருளி யெனையு மனதொ
டடிமை கொளவும் வரவேணும்;

சமர முகவே லசுரர் தமது
தலைக ளுருள மிகவேநீள்-
சலதி யலற நெடிய பதலை
தகர அயிலை விடுவோனே;

வெமர வணையிலினிது துயிலும்
விழிகள் நளினன் மருகோனே-
மிடறு கரியர் குமர பழநி
விரவு மமரர் பெருமாளே.

 
மேலும் திருப்புகழ் »
temple news
அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் முதலாம் பகுதி விநாயகர் துதி 1. கைத்தல நிறைகனி யப்பமொ டவல்பொரிகப்பிய ... மேலும்
 
temple news
177. மந்தரம தெனவேசி றந்தகும்பமுலை தனிலேபு னைந்தமஞ்சள்மண மதுவேது லங்க  வகைபேசிமன்றுகமழ் தெருவீதி ... மேலும்
 
temple news
124. தகர நறுமலர் பொதுளிய குழலியர்கலக கெருவித விழிவலை படவிதிதலையி லெழுதியு மனைவயி னுறவிடு  வதனாலேதனையர் ... மேலும்
 
temple news
242. புமியதனிற் ப்ரபுவான புகலியில்வித் தகர்போல;அமிர்தகவித் தொடைபாட அடிமைதனக் கருள்வாயே;சமரிலெதிர்த் ... மேலும்
 
temple news
306. முகிலு மிரவியு முழுகதிர் தரளமுமுடுகு சிலைகொடு கணைவிடு மதனனுமுடிய வொருபொரு ளுதவிய புதல்வனு  ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar