Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

Prev temple news திருப்புகழ் பகுதி-4 திருப்புகழ் பகுதி-6 திருப்புகழ் பகுதி-6
முதல் பக்கம் » திருப்புகழ்
திருப்புகழ் பகுதி-5
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

23 மார்
2013
03:03

242. புமியதனிற் ப்ரபுவான புகலியில்வித் தகர்போல;
அமிர்தகவித் தொடைபாட அடிமைதனக் கருள்வாயே;
சமரிலெதிர்த் தகர்மாளத் தனியயில்விட் டருள்வோனே;
நமசிவயப் பொருளானே ரசதகிரிப் பெருமாளே

243. முகத்தைப் பிலுக்கி மெத்த மினுக்கித் தொடைத்து ரத்ந
முலைக்கச் சவிழ்த்த சைத்து  முசியாதே
முழுக்கக் கழப்பி யெத்தி மழுப்பிப் பொருட்ப றித்து
மொழிக்குட் படுத்த ழைத்த மளிமீதே

நகைத்திட் டழுத்தி முத்த மளித்துக் களித்து மெத்த
நயத்திற் கழுத்தி றுக்கி  யணைவார்பால்
நடுக்குற் றவர்க்கு மெத்த மனத்தைப் பெருக்கவைத்து
நயத்துத் தியக்கி நித்த  மழிவேனோ

செகக்கச் செகக்க செக்க தரிக்கத் தரிக்க தக்க
திமித்தித் திமித்தி தித்தி  யெனஆடும்
செகத்துக் கொருத்தர் புத்ர நினைத்துத் துதித்த பத்த
ஜெனத்துக் கினித்த சித்தி  யருள்வோனே

மிசைத்துத்  திடத்தொ டுற்று அசைத்துப் பொறுத்த ரக்கன்
மிகுத்துப் பெயர்த்தெ டுத்த  கயிலாய
மிசைக்குற்றடுத்துமற்ற பொருப்பைப்பொடித்திடித்து
மிதித்துத் துகைத்து விட்ட  பெருமாளே.

ஸ்ரீசைலம் (திருமலை)

244. ஒருபது மிருபது மறுபது முடனறு
முணர்வுற இருபத முளநாடி
உருகிட முழுமதி தழலென வொளிதிகழ்
வெளியொடு வொளிபெற விரவாதே;

தெருவினில் மரமென எவரோடு முரைசெய்து
திரிதொழி லவமது புரியாதே
திருமகள் மருவிய திரள்புய அறுமுக
தெரிசனை பெற அருள் புரிவாயே;

பரிவுட னழகிய பழமொடு கடலைகள்
பயறொடு சிலவகை  பணியாரம்
பருகிடு பெருவயி றுடையவர் பழமொழி
எழுதிய கணபதி இளையோனே;

பெருமலை யுருவிட அடியவ ருருகிட
பிணிகெட அருள்தரு குமரேசா
பிடியொடு களிறுகள் நடையிட கலைதிரள்
பிணையமர் திருமலை பெருமாளே

திருப்பதி (திருவேங்கடம்)

245. கறுத்ததலை வெளிறு மிகுந்து
மதர்த்தஇணை விழிகள் குழிந்து
கதுப்பிலுறு தசைகள் வறண்டு  செவிதோலாய்க்
கழுத்தடியு மடைய வளைந்து
கனத்தநெடு முதுகு குனிந்து
கதுப்புறுப லடைய விழுந்து  தடுநீர்சோ

ருறக்கம்வரு மளவி லெலும்பு
குலுக்கிவிடு மிருமல் தொடங்கி
உரத்தகன குரலு நெரிந்து  தடிகாலாய்
உரத்தநடை தளரு முடம்பு
பழுத்திடுமுன் மிகவும் விரும்பி
உனக்கடிமை படுமவர் தொண்டு  புரிவேனோ

சிறுத்தசெலு வதனு ளிருந்து
பெருத்ததிரை யுததி கரந்து
செறித்தமறை கொணர நிவந்த  ஜெயமாலே
செறித்தவளை கடலில் வரம்பு
புதுக்கியிளை யவனொ டறிந்து
செயிர்த்தஅநு மனையு முகந்து  படையோடி

மறப்புரிசை வளையு மிலங்கை
யரக்கனொரு பதுமுடி சிந்த
வளைத்தசிலை விஜய முகுந்தன்  மருகோனே
மலர்க்கமல வடிவுள செங்கை
அயிற்குமர குகைவழி வந்த
மலைச்சிகர வடமலை நின்ற  பெருமாளே.

246. சரவண பவநிதி யறுமுக குருபர
சரவண பவநிதி யறுமுக குருபர
சரவண பவநிதி யறுமுக குருபர எனவோது
தமிழினி லுருகிய வடியவ ரிடமுறு
சனனம ரணமதை யொழிவற சிவமுற
தருபிணி துளவர மெமதுயிர் சுகமுற வருள்வாயே;

கருணைய விழிபொழி யொருதனி முதலென
வருகரி திருமுகர் துணைகொளு மிளையவ
கவிதை யமுதமொழி தருபவ ருயிர்பெறவருள்நேயா
கடலுல கினில்வரு முயிர்படு மதிகன
கலகமி னையதுள கழியவும் நிலைபெற
கதியமு னதுதிரு வடிநிழல் தருவது மொருநாளே;

திரிபுர மெரிசெயு மிறையவ ரருளிய
குமரச மரபுரி தணிகையு மிகுமுயர்
சிவகிரி யிலும்வட மலையிலு முலவிய வடிவேலா
தினமுமு னதுதுதி பரவிய அடியவர்
மனது குடியுமிரு பொருளிலுமிலகுவ
திமிரம லமொழிய தினகர னெனவரு பெருவாழ்வே!

அரவணை மிசைதுயில் நரகரி நெடியவ
மருகனெ னவௌரு மதிசய முடையவ
அமலிவி மலிபரை உமையவ ளருளிய முருகோனே
அதல விதல முதல் கிடுகிடு கிடுவென
வருமயி லினிதொளிர் ஷடுமையில் நடுவுற
அழகி னுடனமரு மரகர சிவசவ பெருமாளே

247. நெச்சுப் பிச்சிப் புட்பத் தட்பக்
கச்சிக் கச்சுற் றறன்மேவி
நெறித்து வெறித்து இருட்டை வெருட்டிய
நிரைதரு மருமலர் செருகிடு பரிமள
நிறையுறை மதுகர  நெடிதாடி

நிச்சிக் கச்சப் பட்டுச் சிக்கற்
றொப்புக் கொப்புக் குயர்வாகி
நெளித்த சுளித்த விழைக்கு ளழைத்துமை
நிகரென வகருவு முகுபுகை தொகுமிகு
நிகழ்புழு கொழுகிய  குழன்மேலும்

வச்ரப் பச்சைப் பொட்டிட் டப்பொட்
டுக்குட் செக்கர்ப் ப்ரபைபோல
வளைத்த தழைத்த பிறைக்கு முறைக்குமன்
மதசிலை யதுவென மகபதி தனுவென
மதிதில தமும்வதி  நுதன்மேலும்

மச்சச் செச்சைச் சித்ரச் சத்ரப்
பொற்பக் கத்திச் சையனாகி
மனத்தி னனைத்து மணைத்த துணைப்பத
மலரல திலைநிலை யெனமொழி தழியமெய்
வழிபட லொழிவனை  யருள்வாயே

நச்சுத் துச்சொப் பிச்சுக் குட்டத்
துட்டக் கட்டத் தசிகாண
நடத்தி விடத்தை யுடைத்த படத்தினி
னடநவில் கடலிடை யடுபடை தொடுமுகில்
நகைமுக திருவுறை  மணிமார்பன்

நத்தத் தைச்சக் ரத்தைப் பத்மத்
தைக்கைப் பற்றிப் பொருமாய
னரிக்கு மரிக்கு மெரிக்கும் விருப்புற
நசிதரு நிசிசர ருடகுட லிடல்செய்த
நரகரி யொருதிரு  மருகோனே

நகச்சுத் தச்சுப் பொற்கட் டிட்டுப்
பட்டுக் குட்பட் டமுதாலுங்
கருப்பி ரசத்து முருச்செய் துவைச்சிடு
கனதன பரிமள முழுகுப னிருபுய
கனகதி வியமணி  யணிமார்பா

கைச்சத் திக்குக் கெற்சித் தொக்கப்
பட்சிக் கக்கொட் டசுராதி
கறுத்த நிறத்த அரக்கர் குலத்தொடு
கறுவிய சிறியவ கடவைகள் புடைபடு
கடவட மலையுறை  பெருமாளே.

248. கோங்கிள நீரிளக வீங்குப யோதரமும்
வாங்கிய வேல்விழியும்  இருள்கூருங்
கூந்தலு நீள்வளைகொள் காந்தளு நூலிடையும்
மாந்தளிர் போல்வடிவும்  மிகநாடிப்

பூங்கொடி யார்கலவி நீங்கரி தாகிமிகு
தீங்குட னேயுழலும்  உயிர்வாழ்வு
பூண்டடி யேனெறியில் மாண்டிங னேநரகில்
வீழ்ந்தலை யாமலருள்  புரிவாயே

பாங்கியும் வேடுவரும் ஏங்கிட மாமுனியும்
வேங்கையு மாய்மறமின்  னுடன்வாழ்வாய்
பாண்டவர் தேர்கடவும் நீண்டபி ரான்மருக
பாண்டிய னீறணிய  மொழிவோனே

வேங்கையும் வாரணமும் வேங்கையு மானும்வளர்
வேங்கட மாமலையி  லுறைவோனே
வேண்டிய போதடியர் வேண்டிய போகமது
வேண்டவெ றாதுதவு  பெருமாளே.

249. சாந்தமில் மோகவெரி காந்திய வாவனில
மூண்டவி யாதசம  யவிரோத
சாங்கலை வாரிதியை நீந்தவொ ணாதுலகர்
தாந்துணை யாவரென  மடவார்மேல்

ஏந்திள வார்முளரி சாந்தணி மார்பினொடு
தோய்ந்துரு காஅறிவு  தடுமாறி
ஏங்கிட ஆருயிரை வாங்கிய காலன்வசம்
யான்தனி போய்விடுவ  தியல்போதான்

காந்தளி னானகர மான்தரு கானமயில்
காந்தவி சாகசர  வணவேளே
காண்டகு தேவர்பதி யாண்டவ னேசுருதி
யாண்டகை யேயிபமின்  மணவாளா

வேந்தகு மாரகுக சேந்தம யூரவட
வேங்கட மாமலையி  லுறைவோனே
வேண்டிய போதடியர் வேண்டிய போகமது
வேண்டவெ றாதுதவு  பெருமாளே.

250. வரிசேர்ந்திடு சேல்கய லோவெனு
முழைவார்ந்திடு வேலையு நீலமும்
வடுவாங்கிடு வாள்விழி மாதர்கள்  வலையாலே
வளர்கோங்கிள மாமுகை யாகிய
தனவாஞ்சையி லேமுக மாயையில்
வளமாந்தளிர் போல்நிற மாகிய  வடிவாலே

இருள்போன்றிடு வார்குழல் நீழலில்
மயல்சேர்ந்திடு பாயலின் மீதுற
இனிதாங்கனி வாயமு தூறல்கள்  பருகாமே
எனதாந்தன தானவை போயற
மலமாங்கடு மோக விகாரமு
மிவைநீங்கிட வேயிரு தாளினை  யருள்வாயே

கரிவாம்பரி தேர்திரள் சேனையு
முடனாந்துரி யோதன னாதிகள்
களமாண்டிட வேயொரு பாரத  மதிலேகிக்
கனபாண்டவர் தேர்தனி லேயெழு
பரிதூண்டிய சாரதி யாகிய
கதிரோங்கிய நேமிய னாமரி  ரகுராமன்

திரைநீண்டிரை வாரியும் வாலியும்
நெடிதோங்கும் ராமர மேழொடு
தெசமாஞ்சிர ராவண னார்முடி  பொடியாகச்
சிலைவாங்கிய நாரண னார்மரு
மகனாங்குக னேபொழில் சூழ்தரு
திருவேங்கட மாமலை மேவிய  பெருமாளே.

திருத்தணி (க்ஷணிகாசலம், செருத்தணி)

251. அமைவுற் றடையப் பசியுற் றவருக்
கமுதைப் பகிர்தற்  கிசையாதே
அடையப் பொருள்கைக் கிளமைக் கெனவைத்
தருள்தப் பிமதத்  தயராதே

தமர்சுற் றியழப் பறைகொட் டியிடச்
சமனெட் டுயிரைக்  கொடுபோகுஞ்
சரிரத் தினைநிற் குமெனக் கருதித்
தளர்வுற் றொழியக்  கடவேனோ

இமயத் துமயற் கொருபக் கமளித்
தளர்வுற் றொழியக்  கடவோனே
இரணத் தினிலெற் றுவரைக் கழுகுக்
கிரையிட் டிடுவிக்  ரமவேலா

சமயச் சிலுகிட் டவரைத் தவறித்
தவமுற் றவருட்  புகநாடும்
சடுபத் மமுகக் குகபுக் ககனத்
தணியிற் குமரப்  பெருமாளே.

252. குவளைக் கணைதொட்டவனுக் குமுடிக்
குடையிட் டகுறைப்  பிறையாலே
குறுகுற்ற அலர்த் தெரிவைக் குமொழிக்
குயிலுக் குமினித்  தளராதே

இவளைத் துவளக் கலவிக் குநயத்
திறுகத் தழுவிப்  புயமீதே
இணையற் றழகிற் புனையக் கருணைக்
கினிமைத் தொடையைத்  தரவேணும்

கவளக் கரடக் கரியெட் டலறக்
கனகக் கிரியைப்  பொரும்வேலா
கருதிச் செயலைப் புயனுக் குருகிக்
கலவிக் கணயத்  தெழுமார்பா

பவளத் தரளத் திரளக் குவைவெற்
பவையொப் புவயற்  புறமீதே
பணிலத் திரள்மொய்த் ததிருத் தணிகைப்
பதியிற் குமரப்  பெருமாளே.

253. பொரியப் பொரியப் பொலிமுத் துவடத்
துகளிற் புதையத்  தனமீதே
புரளப் புரளக் கறுவித் தறுகட்
பொருவிற் சுறவக்  கொடிவேள்தோள்

தெரிவைக் கரிவைப் பரவைக் குருகிச்
செயலற் றனள்கற்  பழியாதே
செறிவுற் றணையிற் றுயிலுற் றருமைத்
தெரிவைக் குணர்வைத்  தரவேணும்

சொரியற் பகநற் பதியைத் தொழுகைச்
சுரருக் குரிமைப்  புரிவோனே
சுடர்பொற் கயிலைக் கடவுட் கிசையச்
சுருதிப் பொருளைப்  பகர்வோனே

தரிகெட் டசுரப் படைகெட் டொழியத்
தனிநெட் டயிலைத்  தொடும்வீரா
தவளப் பணிலத் தரளப் பழனத்
தணிகைக் குமரப்  பெருமாளே.

254. அருக்கிமெத் தெனச்சிரித் துருக்கியிட் டுளக்கருத்
தழித்தறக் கறுத்தகட்  பயிலாலே
அழைத்தகப் படுத்தியொட் டறப்பொருட் பறிப்பவர்க்
கடுத்தபத் தமுற்றுவித்  தகர்போலத்

தரிக்கும்வித் தரிக்குமிக் கதத்துவப் ப்ரசித்தியெத்
தலத்துமற் றிலைப்பிறர்க்  கெனஞானம்
சமைத்துரைத் திமைப்பினிற் சடக்கெனப் படுத்தெழச்
சறுக்குமிப் பிறப்புபெற்  றிடலாமோ

பொருக்கெழக் கடற்பரப் பரக்கர்கொத் திறப்புறப்
பொருப்பினிற் பெருக்கவுற்  றிடுமாயம்
புடைத்திடித் தடற்கரத் துறப்பிடித் தகற்பகப்
புரிக்கிரக் கம்வைத்தபொற்  கதிர்வேலா

திருத்தமுத் தமிழ்க்கவிக் கொருத்தமைக் குறத்தியைத்
தினைப்புனக் கிரித்தலத்  திடைதோயுஞ்
சிவத்தகுக் குடக்கொடிச் செருக்கவுற் பலச்சுனைச்
சிறப்புடைத் திருத்தணிப்  பெருமாளே.

255. கடற்செகத் தடக்கிமற் றடுத்தவர்க் கிடுக்கணைக்
கடைக்கணிற் கொடுத்தழைத்  தியல்காமக்
கலைக்கதற் றுரைத்துபுட் குரற்கள்விட் டுளத்தினைக்
கரைத்துடுத் தபட்டவிழ்த்  தணைமீதே

சடக்கெனப் புகத்தனத் தணைத்திகழ்க் கொடுத்துமுத்
தமிட்டிருட் குழற்பிணித்  துகிரேகை
சளப்படப் புதைத்தடிப் திலைக்குணக் கடித்தடத்
தலத்தில்வைப் பவர்க்கிதப்  படுவேனோ

இடக்கடக் குமெய்ப்பொருட் டிருப்புகழ்க் குயிர்ப்பளித்
தெழிற்றினைச் சிரிப்புறத்  துறைவேலா
இகற்செருக் கரக்கரைத் தகர்த்தொலித் துரத்தபச்
சிறைச்சியைப் பசித்திரைக்  கிசைகூவும்

பெடைத்திரட் களித்தகுக் குடக்கொடிக் கரத்தபொய்ப்
பிதற்றறப் படுத்துசற்  குருவாய்முன்
பிறப்பிலிப் குணத்துசித் தவுற்றநெற் பெருக்குவைப்
பெருக்குமெய்த் திருத்தணிப்  பெருமாளே.

256. கனத்தறப் பணைத்தபொற் கழைப்புயத் தனக்கிரிக்
கனத்தையொத் துமொய்த்தமைக்  குழலார்தங்
கறுத்தமைக்க கயற்கணிற்கருத்துவைத் தொருத்தநிற்
கழற்பதத் தடுத்திடற்  கறியாதே

இனப்பிணிக் கணத்தினுக் கிருப்பெனத் துருத்தியொத்
திசைத்தசைத் தசுக்கிலத்  தசைதோலால்
எடுத்தபொய்க் கடத்தினைப் பொறுக்குமிப் பிறப்பறுத்
தெனக்குநித் தமுத்தியைத்  தரவேணும்

பனைக்கரச் சினத்திபத தனைத்துரத் தரக்கனைப்
பயத்தினிற் பயப்படப்  பொரும்வேலா
பருப்பதச் செருக்கறத் துகைக்குமுட் பதத்தினைப்
படைத்தகுக் குடக்கொடிக்  குமரேசா

தினைப்புனப் பருப்பதத் தினிற்குடிக் குறத்தியைச்
செருக்குறத் திருப்புயத்  தணைவோனே
திருப்புரப் புறத்தியற் றிருத்தகுத் துநித்திலத்
திருத்திசைத் திருத்தணிப்  பெருமாளே.

257. பருத்தபற் சிரத்தினைக் குருத்திறற் கரத்தினைப்
பரித்தவப் பதத்தினைப்  பரிவோடே
படைத்தபொய்க் குடத்தினைப் பழிப்பவத்திடத்தினைப்
பசிக்குடற் கடத்தினைப்  பயமேவும்

பெருத்தபித் துருத்தனைக் கருத்திமத் துருத்தியைப்
பிணித்தமுக் குறத்தொடைப்  புலனாலும்
பிணித்தவிப் பிணிப்பையைப் பொறுத்தமிழ்ப் பிறப்பறக்
குறிக்கருத் தெனக்களித்  தருள்வாயே

கருத்திலுற் றுரைத்தபத் தரைத்தொறுத் திருக்கரைக்
கழித்தமெய்ப் பதத்தில்வைத்  திடுவீரா
கதித்தநற் றினைப்புனக் கதித்தநற் குறத்தியைக்
கதித்தநற் றிருப்புயத்  தணைவோனே

செருத்தெறுத் தெதிர்த்தமுப் புரத்துரத் தரக்கரைச்
சிரித்தெரித் தநித்தர்பொற்  குமரேசா
சிறப்புறப் பிரித்தறத் திறத்தமிழ்க் குயர்த்திசைச்
சிறப்புடைத் திருத்தணிப்  பெருமாளே.

258. எனக்கென யாவும் படைத்திட நாளும்
இளைப்பொடு காலந்  தனிலோயா
எடுத்திடு காயந் தனைக்கொடு மாயும்
இலச்சையி லாதென்  பவமாற

உனைப்பல நாளுந் திருப்புக ழாலும்
உரைத்திடு வார்தங்  குளிமேவி
உணர்த்திய போதங் தனைப்பிரி யாதொண்
பொலச்சர  ணானுந்  தொழுவேனோ

வினைத்திற மோடன் றெதிர்த்திடும் வீரன்
விழக்கொடு வேள்கொன்  றவனீயே
விளப்பென மேலென் றிடக்கய னாரும்
விருப்புற வேதம்  புகல்வோனே

சினத்தொடு சூரன் தனைக்கொடு வேலின்
சிரத்தினை மாறும்  முருகோனே
தினைப்புன மேவுங் குறக்கொடி யோடுந்
திருத்தணி மேவும்  பெருமாளே.

259. பெருக்கவு பாயங் கருத்துடை யோர்தம்
ப்ரபுத்தன பாரங்  களிலேசம்
ப்ரமத்துட னாளும் ப்ரமித்திருள் கூரும்
ப்ரியக்கட லூடுந்  தணியாத

கருக்கட லூடுங் கதற்றும நேகங்
கலைக்கட லூடுஞ்  சுழலாதே
கடப்பவர் சேர்கிண் கிணிப்ரபை வீசுங்
கழற்புணை நீதந்  தருள்வாயே

தருக்கிய வேதன் சிறைப்பட நாளுஞ்
சதுர்த்தச லோகங்  களும்வாழச்
சமுத்திர மேழுங் குலக்கிரி யேழுஞ்
சளப்பட மாவுந்  தனிவீழத்

திருக்கையில் வேலொன் றெடுத்தம ராடுஞ்
செருக்கு மயூரந்  தனில்வாழ்வே
சிறப்பொடு ஞானந் தமிழ்த்ரய நீடுந்
திருத்தணி மேவும்  பெருமாளே.

260. மருக்குல மேவுங் குழற்கனி வாய்வெண்
மதிப்பிள வாகும்  நுதலார்தம்
மயக்கினி லேநண் புறப்படு வேனுன்
மலர்க்கழல் பாடுந்  திறநாடாத்

தருக்கனு தாரந் துணுக்கிலி லோபன்
சமத்தறி யாவன்  பிலிமூகன்
தலத்தினி லேவந் துறப்பணி யாதன்
தனக்கினி யார்தஞ்  சபைதாராய்

குருக்கல ராஜன் தனக்கொரு தூதன்
குறட்பெல மாயன்  நவநீதங்
குறித்தயில் நேயன் திருப்பயில் மார்பன்
குணத்ரய நாதன்  மருகோனே

திருக்குள நாளும் பலத்திசை மூசும்
சிறப்பது றாஎண்  டிசையோடும்
திரைக்கடல் சூழும் புவிக்குயி ராகும்
திருத்தணி மேவும்  பெருமாளே.

261. வினைக்கின மாகுந் தனத்தினர் வேளம்
பினுக்கெதி ராகும்  விழிமாதர்
மிகப்பல மானந் தனிற்புகு தாவெஞ்
சமத்திடை போய்வெந்  துயர்மூழ்கிக்

கனத்தவி சாரம் பிறப்படி தோயுங்
கருக்குழி தோறுங்  கவிழாதே
கலைப்புல வோர்பண் படைத்திட வோதுங்
கழற்புக ழோதுங்  கலைதாராய்

புனத்திடை போய்வெஞ் சிலைக்குற வோர்வஞ்
சியைப்புணர் வாகம்  புயவேளே
பொருப்பிரு கூறும் படக்கடல் தானும்
பொருக்கெழ வானும்  புகைமூளச்

சினத்தொடு சூரன் கனத்தணி மார்பந்
திறக்கம ராடுந்  திறல்வேலா
திருப்புக ழோதுங் கருத்தினர் சேருந்
திருத்தணி மேவும்  பெருமாளே.

262. இருமலு ரோக முயலகன் வாத
மெரிகுண நாசி  விடமேநீ
ரிழிவுவி டாத தலைவலி சோகை
யெழுகள மாலை  யிவையோடே

பெருவயி றீளை யெரிகுலை சூலை
பெருவலி வேறு  முளநோய்கள்
பிறவிக டோறு மெனைநலி யாத
படியுன தாள்க  ளருள்வாயே

வருமொரு கோடி யசுரர்ப தாதி
மடியஅ நேக  இசைபாடி
வருமொரு கால வயிரவ ராட
வடிசுடர் வேலை  விடுவோனே

தருநிழல் மீதி லுறைமுகி லூர்தி
தருதிரு மாதின்  மணவாளா
சலமிடை பூவி னடுவினில் வீறு
தணிமலை மேவு  பெருமாளே.

263. கலைமட வார்தஞ் சிலையத னாலுங்
கனவளை யாலுங்  கரைமேலே
கருகிய காளம் பெருகிய தோயங்
கருதலை யாலுஞ்  சிலையாலும்

கொலைதரு காமன் பலகணை யாலும்
கொடியிடை யாள்நின்  றழியாதே
குரவணி நீடும் புயமணி நீபங்
குளிர்தொடை நீதந்  தருள்வாயே

சிலைமகள் நாயன் கலைமகள் நாயன்
திருமகள் நாயன்  தொழும்வேலா
தினைவன மானுங் கனவன மானுஞ்
செறிவுடன் மேவுந்  திருமார்பா

தலமகள் மீதெண் புலவரு லாவுந்
தணிகையில் வாழ்செங்  கதிர்வேலா
தனியவர் கூருந் தனிகெட நாளுந்
தனிமயி லேறும்  பெருமாளே.

264. கரிக்குழல் விரித்தும் புறக்கயல் விழித்துங்
கரிக்குவ டிணைக்குந்  தனபாரக்
கரத்திடு வளைச்சங் கிலிச்சர மொலித்துங்
கலைத்துகில் மினுக்யும்  பணிவாரைத்

தரித்துள மழிக்குங் கவட்டர்க ளிணக்கந்
தவிர்த்துனது சித்தங்  களிகூரத்
தவக்கடல் குளித்திங் குனக்கடி மையுற்றுன்
தலத்தினி லிருக்கும் படிபாராய்

புரத்தையு மெரித்தங் கயத்தையு முரித்தொண்
பொடிப்பணி யெனப்பன்  குருநாதா
புயப்பணி கடப்பந் தொடைச்சி கரமுற்றின்
புகழ்ச்சிய  முதத்திண்  புலவோனே

திரட்பரி கரிக்கும் பொடிப்பட வுணர்க்குந்
தெறிப்புற விடுக்குங்  கதிர்வேலா
சிறப்பொடு குறப்பெண் களிக்கும்வி ஜயத்தென்
திருத்தணி யிருக்கும்  பெருமாளே.

265. சினத்தவர் முடிக்கும் பகைத்தவர் குடிக்குஞ்
செகுத்தவ ருயிர்க்குஞ்  சினமாகச்
சிரிப்பவர் தமக்கும் பழிப்பவர் தமக்கும்
திருப்புகழ் நெருப்பென்  றறிவோம்யாம்

நினைத்தது மளிக்கும் மனத்தையு முருக்கும்
நிசிக்கரு வறுக்கும்  பிறவாமல்
நெருப்பையு மெரிக்கும் பொருப்பையு மிடிக்கும்
நிறைப்புக ழுரைக்குஞ்  செயல்தாராய்

தனத்தன தனத்தந் திமித்திமி திமித்திந்
தகுத்தகு தகுத்தந்  தனபேரி
தடுட்டுடு டுடுட்டுண் டெனத்துடி முழக்குந்
தளத்துட னடக்குங்  கொடுசூரர்

சினத்தையு முடற்சங் கரித்தும லைமுற்றுஞ்
சிரித்தெரி கொளுத்துங்  கதிர்வேலா
தினைக்கிரி குறப்பெண் தனத்தினில் சுகித்தெண்
திருத்தணி யிருக்கும்  பெருமாளே.

266. தொக்கறாக் குடில சுத்தமேற் றசுக
துக்கமாற் கடமு  மலமாயை
துற்றகாற் பதலை சொற்படாக் குதலை
துப்பிலாப் பலச  மயநூலைக்

கைக்கொளாக் கதறு கைக்கொளாக் கையவ
லப்புலாற் றசைகு  ருதியாலே
கட்டுகூட் டருவ ருப்புவேட் டுழல
சட்டவாக் கழிவ  தொருநாளே

அக்கராப் பொடியின் மெய்க்கிடாக் குரவர்
அர்ச்சியாத் தொழுமு  னிவனாய
அப்பபோர்ப் பனிரு வெற்பபூத் தணியல்
வெற்பபார்ப் பதிந  திகுமாரா

இக்கணோக் குறில்நி ருத்தநோக் குறுத
வத்தினோர்க் குதவு  மிளையோனே
எத்திடார்க் கரிய முத்தபாத் தமிழ்கொ
டெத்தினார்க் கெளிய  பெருமாளே
 
267. வட்டவாட் டனம னைச்சிபாற் குதலை
மக்கள்தாய்க் கிழவி  பதிநாடு
வைத்ததோட் டமனை யத்தமீட் டுபொருள்
மற்றகூட் டமறி  வயலாக

முட்டவோட் டிமிக வெட்டுமோட் டெருமை
முட்டர்பூட் டியெனை  யழையாமுன்
முத்தி வீட்டணுக முத்தராக் கசுரு
திக்குராக் கொளிரு  கழல்தாராய்

பட்டநாற் பெரும ருப்பினாற் கரஇ
பத்தின்வாட் பிடியின்  மணவாளா
பச்சைவேய்ப் பணவை கொச்சைவேட் டுவர்ப
திச்சிதோட் புணர்த  ணியில்வேளே

எட்டுநாற் கரவொ ருத்தல்மாத் திகிரி
யெட்டுமாக் குலைய  எறிவேலா
எத்திடார்க் கரிய முத்தபாத் தமிழ்கொ
டெத்தினார்க் கெளிய  பெருமாளே.

268. சினத்தி லத்தினை சிறுமண லளவுடல்
செறித்த தெத்தனை சிலைகட லினிலுயிர்
செனித்த தெத்தனை திரள்கய லெனபல  வதுபோதா
செமித்த தெத்தனை மலைசுனை யுலகிடை
செழித்த தெத்தனை சிறுதன மயல்கொடு
செடத்தி லெத்தனை நமனுயிர் பறிகொள்வ  தளவேதோ

மனத்தி லெத்தனை நினைகவ டுகள்குடி
கெடுத்த தெத்தனை மிருகம தெனவுயிர்
வதைத்த தெத்தனை யளவிலை விதிகர மொழியாமல்
வகுத்த தெத்தனை மசகனை முருடனை
மடைக்கு லத்தனை மதியழி விரகனை
மலர்ப்ப தத்தினி லுருகவு மினியருள்  புரிவாயே

தனத்த னத்தன தனதன தனதன
திமித்தி மித்திமி திமிதிமி திமிதிமி
தகுத்த குத்தகு தகுதகு தகுதகு  தகுதீதோ
தரித்த ரித்தரி தரிரிரி ரிரிரிரி
தடுட்டு டுட்டுடு டடுடுடு டுடுடுடு
தமித்த மத்தள தமருக விருதொலி  கடல்போலச்

சினத்த மர்க்கள செருதிகழ் குருதிய
திமிழ்த்தி டக்கரி யசுரர்கள் பரிசிலை
தெறித்திடக்கழு நரிதின நிணமிசை  பொரும்வேலா
செழிக்கு முத்தம சிவசர ணர்கள்தவ
முனிக்க ணத்தவர் மதுமலர் கொடுபணி
திருத்த ணிப்பதி மருவிய குறமகள்  பெருமாளே.

269. தொடர்ந்து ளக்கிகள் அபகட நினைவிகள்
குருட்டு மட்டைகள் குமரிகள் கமரிகள்
சுதைச்சி றுக்கிகள் குசலிக ளிசலிகள்  முழுமோசந்
துறுத்த மட்டைகள் அசடிகள் கசடிகள்
முழுப்பு ரட்டிகள் நழுவிகள் மழுவிகள்
துமித்த மித்திரர் விலைமுலை யினவலை  புகுதாமல்

அடைத்த வர்க்கியல் சரசிகள் விரசிகள்
தரித்த வித்ரும நிறமென வரவுட
னழைத்து சக்கிர கிரிவளை படிகொடு  விளையாடி
அவத்தை தத்துவ மழிபட இருளறை
விலக்கு வித்தொரு சுடரொளி பரவந
லருட்பு கட்டியு னடியிணை யருளுவ  தொருநாளே

படைத்த னைத்தையும் வினையுற நடனொடு
துடைத்த பத்தினி மரகத சொருபியொர்
பரத்தி னுச்சயி னடநவி லுமையரு  ளிளையோனே
பகைத்த ரக்கர்கள் யமனுல குறஅமர்
தொடுத்த சக்கிர வளைகர மழகியர்
படிக்க டத்தையும் வயிறடை நெடியவர்  மருகோனே

திடுக்கி டக்கட லசுரர்கள் முறிபட
கொளுத்தி சைக்கிரி பொடிபட சுடரயில்
திருத்தி விட்டொரு நொடியினில் வலம்வரு  மயில்வீரா
தினைப்பு னத்திரு தனகிரி குமரிநல்
குறத்தி முத்தொடு சசிமக ளொடுபுகழ்
திருத்த ணிப்பதி மலைமிசை நிலைபெறு  பெருமாளே.

270. எலுப்பு நாடிக ளப்பொ டிரத்தமொ
டழுக்கு மூளைகள் மச்சொடு கொட்புழு
விருக்கும் வீடதி லெத்தனை தத்துவ  சதிகாரர்
இறப்பர் சூதக வர்ச்சுத ரப்பதி
யுழப்பர் பூமித ரிப்பர்பி றப்புட
னிருப்பர் வீடுகள் கட்டிய லட்டுறு  சமுசா

கெலிப்பர் மால்வலை பட்டுறு துட்டர்க
ளழிப்பர் மாதவ முற்று நினைக்கிலர்
கெடுப்பர் யாரையு மித்திர குத்திரர்  கொலைகாரர்
கிருத்தர் கோளகர் பெற்றுதி ரிக்கள
வரிப்பர் சூடக ரெத்தினை வெப்பிணி
கெலிக்கும் வீடதை நத்தியெ டுத்திவ  ணுழல்வேனோ

ஒலிப்பல் பேரிகை யுக்ரவ மர்க்கள
மெதிர்த்த சூரரை வெட்டியி ருட்கிரி
யுடைத்து வானவர் சித்தர்து தித்திட  விடும்வேலா
உலுத்த ராவண னைச்சிர மிற்றிட
வதைத்து மாபலி யைச்சிறை வைத்தவ
னுலக்கை ராவிந டுக்கடல் விட்டவன்  மருகோனே

வலிக்க வேதனை குட்டிந டித்தொரு
செகத்தை யீனவள் பச்சைநி றத்தியை
மணத்த தாதைப ரப்ரம ருக்கருள்  குருநாதா
வனத்தில் வாழும யிற்குல மொத்திடு
குறத்தி யாரைம யக்கிய ணைத்துள
மகிழ்ச்சி யோடுதி ருத்தணி பற்றிய  பெருமாளே.

271. திருட்டு நாரிகள் பப்பர மட்டைகள்
வறட்டு மோடியி னித்தந டிப்பவர்
சிறக்க மேனியு லுக்கிம டக்குகண்  வலையாலே
திகைத்து ளாவிக ரைத்தும னத்தினி
லிதத்தை யோடவி டுத்தும யக்கிடு
சிமிட்டு காமவி தத்திலு முட்பட  அலைவேனோ

தரித்து நீறுபி தற்றிடு பித்தனு
மிதத்து மாகுடி லைப்பொருள் சொற்றிடு
சமர்த்த பாலஎ னப்புகழ் பெற்றிடு  முருகோனே
சமப்ர வீணம தித்திடு புத்தியி
லிரக்க மாய்வரு தற்பர சிற்பர
சகத்ர யோகவி தக்ஷண தெக்ஷிண  குருநாதா

வெருட்டு சூரனை வெட்டிர ணப்பெலி
களத்தி லேகழு துக்கிரை யிட்டிடர்
விடுத்த கூளிகள் தித்திகு தித்தென  விளையாட
விதித்த வீரச மர்க்கள ரத்தமு
மிரற்றி யோடவெ குப்ரள யத்தினில்
விலக்கி வேல்செரு கிட்டுயிர் மொக்கிய  மறவோனே

பெருக்க மோடுச ரித்திடு மச்சமு
முளத்தின் மாமகிழ் பெற்றிட வுற்றிடு
பிளப்பு வாயிடை முப்பொழு தத்துமொர்  கழுநீரின்
பிணித்த போதுவெ டித்துர சத்துளி
கொடுக்கு மோடையி குத்ததி ருத்தணி
பிறக்க மேவுற அத்தல முற்றுறை  பெருமாளே.

272. அரகர சிவனரி அயனிவர் பரவிமு
னறுமுக சரவண  பவனேயென்
றநுதின மொழிதர அசுரர்கள் கெடஅயி
லனலென எழவிடு  மதிவீரா

பரிபுர கமலம தடியிணை யடியவ
ருளமதி லுறவருள்  முருகேசா
பகவதி வரைமக ளுமைதர வருகுக
பரமன திருசெவி  களிகூர

உரைசெயு மொருமொழி பிரணவ முடிவதை
உரைதரு குருபர  வுயர்வாய
உலகம னலகில் வுயிர்களு மிமையவ
ரவர்களு முறுவர  முநிவோரும்

பரவிமு னநுதின மனமகிழ் வுறவணி
பணிதிகழ் தணிகையி  லுறைவோனே
பகர்தரு குறமகள் தருவமை வநிதையு
மிருபுடை யுறவரு  பெருமாளே.

273. இருப்பவல் திருப்புகழ் விருப்பொடு படிப்பவ
ரிடுக்கினை யறுத்திடு  மெனவோதும்
இசைத்தமிழ் நடத்துமி ழெனத்துறை விருப்புட
னிலக்கண இலக்கிய  கவிநாலுந்

தரிப்பவ ருரைப்பவர் நினைப்பவர் மிகச்சக
தலத்தினில் நவிற்றுத  லறியாதே
தனத்தினில் முகத்தினில் மனத்தினி லுருக்கிடு
சமர்த்திகள் மயக்கினில்  விழலாமோ

கருப்புவில் வளைத்தணி மலர்க்கணை தொடுத்தியல்
களிப்புட னொளித்தெய்த  மதவேளைக்
கருத்தினில் நினைத்தவ னெருப்பெழ நுதற்படு
கனற்கணி லெரித்தவர்  கயிலாயப்

பொருப்பினி லிருப்பவர் பருப்பத வுமைக்கொரு
புறத்தினை யளித்தவர்  தருசேயே
புயற்பொழில் வயற்பதி நயப்படு திருத்தணி
பொருப்பினில் விருப்புறு  பெருமாளே.

274. உடலி னூடு போய்மீளு முயிரி னூடு மாயாத
உணர்வி னூடு வானூடு  முதுதீயூ
டுலவை யூடு நீரூடு புவியி னூடு வாதாடு
மொருவ ரோடு மேவாத  தனிஞானச்

சுடரி னூடு நால்வேத முடியி னூடு மூடாடு
துரிய வாகு லாதீத  சிவரூபம்
தொலைவி லாத பேராசை துரிச றாத வோர்பேதை
தொடுமு பாய மேதோசொ  லருள்வாயே

மடல றாத வாரீச அடவி சாடி மாறான
வரிவ ரால்கு வால்சாய  அமராடி
மதகு தாவி மீதோடி யுழவ ரால டாதோடி
மடையை மோதி யாறூடு  தடமாகக்

கடல்பு காம காமீனை முடுகி வாளை தான்மேவு
கமல வாவி மேல்வீழு  மலர்வாவிக்
கடவுள் நீல மாறாத தணிகை காவ லாவீர
கருணை மேரு வேதேவர்  பெருமாளே.

275. உடையவர்க ளேவ ரெவர்களென நாடி
யுளமகிழ ஆசு  கவிபாடி
உமதுபுகழ் மேரு கிரியளவு மான
தெனவுரமு மான  மொழிபேசி

நடைபழகி மீள வறியவர்கள் நாளை
நடவுமென வாடி  முகம்வேறாய்
நலியுமுன மேயு னருணவொளி வீசு
நளினஇரு பாத  மருள்வாயே

விடைகொளுவு பாகர் விமலர்திரி சூலர்
விகிர்தர்பர யோகர்  நிலவோடே
விளவுசிறு பூளை நகுதலையொ டாறு
விடவரவு சூடு  மதிபாரச்

சடையிறைவர் காண உமைமகிழ ஞான
தளர் நடையி டாமுன்  வருவோனே
தவமலரு நீல மலர்சுனைய நாதி
தணிமலையு லாவு  பெருமாளே.

276. உய்யஞா னத்துநெறி கைவிடா தெப்பொழுது
முள்ளவே தத்துறைகொ  டுணர்வோதி
உள்ளமோ கத்திருளை விள்ளமோ கப்பொருளை
யுள்ளமோ கத்தருளி  யுறவாகி

வையமே ழுக்குநிலை செய்யுநீ திப்பழைய
வல்லமீ துற்பலச  யிலமேவும்
வள்ளியா நிற்புதிய வெள்ளில்தோய் முத்தமுறி
கிள்ளிவீ சுற்றுமலர்  பணிவேனோ

பையரா வைப்புனையு மையர்பா கத்தலைவி
துய்யவே ணிப்பகிர  திகுமாரா
பையமால் பற்றிவளர் சையகுமேல் வைக்குமுது
நெய்யனே சுற்றியகு  றவர்கோவே

செய்யுமால் வெற்புருவ வெய்யவேல் சுற்றிவிடு
கையமால் வைத்ததிரு  மருகோனே
தெய்வயா னைக்கிளைய வெள்ளையா னைத்தலைவ
தெய்வயா னைக்கினிய  பெருமாளே.

277. எத்தனைக லாதி சித்தங் கெத்தனைவி யாதி பித்தங்
கெத்தனைச ராச ரத்தின்  செடமான
எத்தனைவிடாவெருட்டங்கெத்தனைவலாண்மைபற்றங்
கெத்தனைகொ லூனை நித்தம்  பசியாறல்

பித்தனைய னான கட்டுண் டிப்படிகெ டாமல் முத்தம்
பெற்றிடநி னாச னத்தின்  செயலான
பெற்றியுமொ ராது நிற்குந் தத்தகுரு தார நிற்கும்
பெத்தமுமொ ராது நிற்குங்  கழல்தாராய்

தத்தனத னாத னத்தந் தத்தனத னாத னத்தந்
தத்தனத னாத னத்தந்  தகுதீதோ
தக்குகுகு டூடு டுட்டுண் டிக்குகுகு டீகு தத்தந்
தத்தனத னான னுர்த்துஞ்  சதபேரி

சித்தர்கள்நி டாதர் வெற்பின் கொற்றவர்சு வாமி பத்தர்
திக்குகளொர் நாலி ரட்டின்  கிரிசூழச்
செக்கணரி மாகனைக்குஞ் சித்தணிகை வாழ்சி வப்பின்
செக்கர்நிற மாயி ருக்கும்  பெருமாளே.

278. எனைய டைந்த குட்டம் வினைமி குந்த பித்த
மெரிவ ழங்கு வெப்பு  வலிபேசா
இகலி நின்ற லைக்கு முயல கன்கு லைப்பொ
டிரும லென்று ரைக்கு  மிவையோடே

மனைகள் பெண்டிர் மக்கள் தமைநி னைந்து சுத்த
மதிம யங்கி விட்டு  மடியாதே
மருவி யின்றெ னக்கு மரக தஞ்சி றக்கு
மயிலில் வந்து முத்தி  தரவேணும்

நினைவ ணங்கு பத்த ரனைவ ருந்த ழைக்க
நெறியில் நின்ற வெற்றி  முனைவேலா
நிலைபெ றுந்தி ருத்த ணியில்வி ளங்கு சித்ர
நெடிய குன்றில் நிற்கு  முருகோனே

தினைவி ளங்க லுற்ற புனஇ ளங்கு றத்தி
செயல றிந்த ணைக்கு  மணிமார்பா
திசைமு கன்தி கைக்க அசுர ரன்ற டைத்த
சிறைதி றந்து விட்ட  பெருமாளே.

279. ஏது புத்திஐ யாஎ னக்கினி
யாரை நத்திடுவேன வத்தினி
லேயி றத்தல்கொ லோஎ னக்குநி  தந்தைதாயென்
றேயி ருக்கவு நானு மிப்படி
யேத வித்திட வோச கத்தவ
ரேச லிற்பட வோந கைத்தவர்  கண்கள்காணப்

பாதம் வைத்திடை யாத ரித்தெனை
தாளில் வைக்கநி யேம றுத்திடில்
பார்ந கைக்குமை யாத கப்பன்முன்  மைந்தனோடிப்
பால்மொ ழிக்குர லோல மிட்டிடில்
யாரெ டுப்பதெ னாவெ றுத்தழ
பார்வி டுப்பர்க ளோஎ னக்கிது  சிந்தியாதோ

ஓத முற்றெழு பால்கொ தித்தது
போல எட்டிகை நீச முட்டரை
யோட வெட்டிய பாநு சத்திகை  எங்கள்கோவே
ஓத மொய்ச்சடை யாட வுற்றமர்
மான்ம ழுக்கர மாட பொற்கழ
லோசை பெற்றிட வேந டித்தவர்  தந்தவாழ்வே

மாதி னைப்புன மீதி ருக்குமை
வாள்வி ழிக்குற மாதி னைத்திரு
மார்ப ணைத்தம யூர அற்புத  கந்தவேளே
மாரன் வெற்றிகொள் பூமு டிக்குழ
லார்வி யப்புற நீடு மெய்த்தவர்
வாழ்தி ருத்தணி மாம லைப்பதி  தம்பிரானே.

280. ஓலை யிட்டகு ழைச்சிகள் சித்திர
ரூப மொத்தநி றத்திகள் விற்கணை
யோடி ணைத்தவி ழிச்சிகள் சர்க்கரை  யமுதோடே
ஊறி யொத்தமொ ழிச்சிகள் புட்குர
லோடு வைத்துமி ழற்று மிடற்றிகள்
ஓசை பெற்ற துடிக்கொ ளிடைச்சிகள்  மணம்வீசும்

மாலை யிட்டக ழுத்திகள் முத்தணி
வார ழுத்துத னத்திகள் குத்திர
மால்வி ளைத்தும னத்தை யழித்திடு  மடமாதர்
மார்ப சைத்தும ருட்டியி ருட்டறை
வாவெ னப்பொருள் பற்றிமு யக்கிடு
மாத ருக்குவ ருத்தமி ருப்பது  தணியாதோ

வேலை வற்றிட நற்கணை தொட்டலை
மீத டைத்துத னிப்படை விட்டுற
வீற ரக்கன்மு டித்தலை பத்தையு  மலைபோலே
மீத றுத்துநி லத்தில டித்துமெய்
வேத லக்ஷúமி யைச்சிறை விட்டருள்
வீர அச்சுத னுக்குந லற்புத  மருகோனே

நீலி நிஷ்களி நிர்க்குணி நித்தில
வாரி முத்துந கைக்கொடி சித்திர
நீலி ரத்தின மிட்டஅ றக்கிளி  புதல்வோனே
நீற திட்டுநி னைப்பவர் புத்தியில்
நேச மெத்தஅ ளித்தருள் சற்குரு
நீல முற்றதி ருத்தணி வெற்புறை  பெருமாளே.

281. கச்சணி யிளமுலை முத்தணி பலவகை
கைச்சரி சொலிவர  மயல்கூறிக்
கைப்பொருள் கவர்தரு மைப்பயில் விழியினர்
கட்செவி நிகரல்குல்  மடமாதர்

இச்சையி னுருகிய கச்சைய னறிவிலி
யெச்சமி லொருபொரு  ளறியேனுக்
கிப்புவி மிசைகமழ் பொற்பத மலரிணை
யிப்பொழு தணுகவு  னருள்தாராய்

கொச்சையர் மனையிலி டைச்சியர் தயிர்தனை
நச்சியெ திருடிய  குறையால்வீழ்
குற்கிர வினியொடு நற்றிற வகையறி
கொற்றவு வணமிசை  வருகேசன்

அச்சுதை நிறைகடல் நச்சர வணைதுயி
லச்சுதன் மகிழ்திரு  மருகோனே
அப்பணி சடையரன் மெச்சிய தணிமலை
யப்பனெ யழகிய  பெருமாளே.

282. கவடுற்ற சித்தர்சட் சமயப்ர மத்தர்நற்
கடவுட்ப்ர திஷ்டைபற்  பலவாகக்
கருதிப்பெ யர்க்குறித் துருவர்க்க மிட்டிடர்க்
கருவிற்பு கப்பகுத்  துழல்வானேன்

சவடிக்கி லச்சினைக் கிருகைச்ச ரிக்குமிக்
கசரப்ப ளிக்கெனப்  பொருள்தேடிச்
சகலத்து மொற்றைபட் டயல்பட்டு நிற்குநிற்
சரணப்ர சித்திசற்  றுணராரோ

குவடெட்டு மட்டுநெட் டுவரிக்க ணத்தினைக்
குமுறக்க லக்கிவிக்  ரமசூரன்
குடலைப்பு யத்திலிட் டுடலைத்த றித்துருத்
துதிரத்தி னிற்குளித்  தெழும்வேலா

சுவடுற்ற அற்புதக் கவலைப்பு னத்தினிற்
றுவலைச்சி மிழ்த்துநிற்  பவள்நாணத்
தொழுதெத்து முத்தபொற் புரிசைக்செ ருத்தணிச்
சுருதித் தமிழ்க்கவிப்  பெருமாளே.

283. கனைத்த திர்க்குமிப் பொங்கு கார்க்கட  லொன்றினாலே
கறுத்த றச்சிவத் தங்கி வாய்த்தெழு  திங்களாலே
தனிக்க ருப்புவிற் கொண்டு வீழ்த்தச  ரங்களாலே
தகைத்தொ ருத்தியெய்த் திங்கு யாக்கைச  ழங்கலாமோ
தினைப்பு னத்தினைப் பண்டு காத்தம  டந்தைகேள்வா
திருத்த ணிப்பதிக் குன்றின் மேற்றிகழ்  கந்தவேளே
பனைக்க ரக்கயத் தண்டர் போற்றிய  மங்கைபாகா
படைத்த ளித்தழிக் குந்த்ரி மூர்த்திகள்  தம்பிரானே.

284. கிரியு லாவிய முலைமிசை துகிலிடு
கபட நாடக விரகிக ளசடிகள்
கெடுவி யாதிக ளடைவுடை யுடலினர்  விரகாலே
க்ருபையி னாரொடு மணமிசை நழுவிகள்
முழுது நாறிக ளிதமொழி வசனிகள்
கிடையின் மேல்மனமுருகிடதழுவிகள்  பொருளாலே

பரிவி லாமயல் கொடுசமர் புரிபவர்
அதிக மாவொரு பொருள்தரு பவரொடு
பழைய பேரென இதமுற அணைபவர்  விழியாலே
பகழி போல்விடு வினைகவர் திருடிகள்
தமையெ ணாவகை யுறுகதி பெறும்வகை
பகர மாமயில் மிசைவர நினைவது  மொருநாளே

அரிய ராதிபர் மலரய னிமையவர்
நிலைபெ றாதிடர் படவுடன் முடுகியெ
அசுரர் தூள்பட அயில்தொடு மறுமுக  இளையோனே
அரிய கானக முறைகுற மகளிட
கணவ னாகிய அறிவுள விதரண
அமரர் நாயக சரவண பவதிற  லுடையோனே

தரும நீதியர் மறையுளர் பொறையுளர்
சரிவு றாநிலை பெறுதவ முடையவர்
தளர்வி லாமன முடையவ ரறிவினர்  பரராஜர்
சகல லோகமு முடையவர் நினைபவர்
பரவு தாமரை மலரடி யினிதுற
தணிகை மாமலை மணிமுடி யழகியல்  பெருமாளே.

285.கிறிமொழிக் கிருதரைக் பொறிவழிச் செறிஞரைக்
கெடுபிறப் பறவிழிக்  கிறபார்வைக்
கெடுமடக் குருடரைத் திருடரைச் சமயதர்க்
கிகள்தமைச் செறிதலுற  றறிவேதும்

அறிதலற் றயர்தலுற் றவிழ்தலற் றருகலுற்
றறவுநெக் கழிகருக்  கடலூடே
அமிழ்தலற் றெழுதலுற் றுணர்நலத் துயர்தலுற்
றடியிணைக் கணுகிடப்  பெறுவேனோ

பொறியுடைச் செழியன்வெப் பொழிதரப் பறிதலைப்
பொறியிலச் சமணரத்  தனைபேரும்
பொடிபடச் சிவமணப் பொடிபரப் பியதிருப் 
புகலியற் கவுணியப்  புலவோனே

தறிவளைத் துறநகைப் பொறியெழப் புரமெரித்
தவர்திருப் புதல்வநற்  சுனைமேவுந்
தனிமணக் குவளைநித் தமுமலர்த் தருசெருத்
தணியினிற் சரவணப்  பெருமாளே.

286. குயிலொன் றுமொழிக் குயினின் றலையக்
கொலையின் பமலர்க்  கணையாலே
குளிருந் தவளக் குலசந்த் ரவொளிக்
கொடிகொங் கையின்முத்  தனலாலே

புயலவந தெரியக் கடனின் றலறப்
பொருமங் கையருக்  கலராலே
புயமொன் றமிகத் தளர்கின் றதனிப்
புயம்வந் தணையக்  கிடையாதோ

சயிலங் குலையத் தடமுந் தகரச்
சமனின் றலையப்  பொரும்வீரா
தருமங் கைவனக் குறமங் கையர்மெய்த்
தனமொன் றுமணித்  திருமார்பா

பயிலுங் ககனப் பிறைதண் பொழிலிற்
பணியுந் தணிகைப்  பதிவாழ்வே
பரமன் பணியப் பொருளன் றருளிற்
பகர்செங் கழநிப்  பெருமாளே.

287. குருவி யெனப்பல கழுகு நரித்திரள்
அரிய வனத்திடை மிருக மெனப்புழு
குறவை யெனக்கரி மரமு மெனத்திரி  யுறவாகா
குமரி கலித்துறை முழுகி மனத்துயர்
கொடுமை யெனப்பிணி கலக மிடத்திரி
குலைய னெனப்புலை கலிய னெனப்பலர்  நகையாமல்

மருவு புயத்திடை பணிக ளணப்பல
கரிபரி சுற்றிட கலைகள் தரித்தொரு
மதன சரக்கென கனக பலக்குட  னதுதேடேன்
வரிய பதத்தினி னருவி யிருப்பிடம்
அமையு மெனக்கிட முனது பதச்சரண்
மருவு திருப்புக ழருள எனக்கினி  யருள்வாயே

விருது தனத்தன தனன தனத்தன
விதமி திமித்திமி திமித திமித்திமி
விகிர்த டடுட்டுடு ரிரிரி யெனக்குகு  வெகுதாளம்
வெருவ முகிழ்த்திசை யுரகன் முடித்தலை
நெறுநெ றெனத்திசை யதிர அடைத்திட
மிகுதி கெடப்பொரு அசுரர் தெறித்திட  விடும்வேலா

அரிய திரிப்புர மெரிய விழித்தவன்
அயனை முடித்தலை யரியு மழுக்கையன்
அகில மனைத்தையு முயிரு மளித்தவ  னருள்சேயே
அமண ருடற்கெட வசியி லழுத்திவி
ணமரர் கொடுத்திடு மரிவை குறத்தியொ
டழகு திருத்தணி மலையில் நடித்தருள்  பெருமாளே.

288. குலைத்துமயிர்க் கலைத்துவளைக்
கழுத்துமணித் தனப்புரளக்
குவித்தவிழிக் கயற்சுழலப்  பிறைபோலக்
குனித்தநுதற் புரட்டிநகைத்
துருக்கிமயற் கொளுத்தியிணைக்
குழைச்செவியிற் றழைப்பபொறித்  தனபாரப்

பொலித்துமதத் தரித்தகரிக்
குவட்டுமுலைப் பளப்பளெனப்
புனைத்ததுகிற் பிடித்தஇடைப்  பொதுமாதர்
புயத்தில்வளைப் பிலுக்கில்நடைக்
குலுக்கிலறப் பசப்பிமயற்
புகட்டிதவத் தழிப்பவருக்  குறவாமோ

தலத்தநுவைக் குனித்தொருமுப்
புரத்தைவிழக் கொளுத்திமழுத்
தரித்துபுலிக் கரித்துகிலைப்  பரமாகத்
தரித்துதவச் சுரர்க்கண்முதற்
பிழைக்கமிடற் றடக்குவிடச்
சடைக்கடவுட் சிறக்கபொருட்  பகர்வோனே

சிலுத்தசுரர்க் கெலித்துமிகக்
கொளுத்திமறைத் துதிக்கஅதிற்
செழிக்கஅருட் கொடுத்தமணிக்  கதிர்வேலா
தினைப்புனமிற் குறத்திமகட்
டனத்தின்மயற் குளித்து மகிழ்த்
திருத்தணியிற் றரித்தபுகழ்ப்  பெருமாளே.

289. கூந்தல விழ்த்துமு டித்துமி னுக்கிகள்
பாய்ந்தவி ழிக்குமை யிட்டுமி ரட்டிகள்
கோம்புப டைத்தமொ ழிச்சொல்பரத்தையர்  புயமீதே
கோங்குப டைத்தத னத்தைய ழுத்திகள்
வாஞ்சையு றத்தழு விச்சிலு கிட்டவர்
கூன்பிறை யொத்தந கக்குறி வைப்பவர்  பலநாளும்

ஈந்தபொ ருட்பெற இச்சையு ரைப்பவ
ராந்துணை யற்றழு கைக்குர லிட்டவ
ரீங்கிசையுற்றவ லக்குண மட்டைகள்  பொருள்தீரில்
ஏங்கியி டக்கடை யிற்றளி வைப்பவர்
பாங்கக லக்கரு ணைக்கழல் பெற்றிட
ஈந்திலை யெப்படி நற்கதி புக்கிட  லருள்வாயே

காந்தள்ம லர்த்தொடை யிட்டெதிர் விட்டொரு
வேந்துகு ரக்கர ணத்தொடு மட்டிடு
காண்டிப அச்சுத னுத்தம சற்குணன்  மருகோனே
காங்கிசை மிக்கம றக்கொடி வெற்றியில்
வாங்கிய முக்கனி சர்க்கரை மொக்கிய
கான்கனி முற்கியல் கற்பக மைக்கரி  யிளையோனே

தேந்தினை வித்தின ருற்றிட வெற்றிலை
வேங்கைம ரத்தெழி லைக்கொடு நிற்பவ
தேன்சொலி யைப்புண ரப்புன முற்றுறை  குவைவானந்
தீண்டுக ழைத்திர ளுற்றது துற்றிடு
வேங்கைத னிற்குவ ளைச்சுனை சுற்றலர்
சேர்ந்ததி ருத்தணி கைப்பதி வெற்புறை  பெருமாளே.

290. கூர்வேல் பழித்தவிழி யாலே மருட்டிமுலை
கோடா லழைத்துமல  ரணைமீதே
கோபா விதழ்ப்பருக மார்போ டணைத்துகணை
கோல்போல் சுழற்றியிடை  யுடைநாணக்

கார்போல் குழற்சரிய வேவா யதட்டியிரு
காதோலை யிற்றுவிழ  விளையாடும்
காமா மயக்கியர்க ளுடே களித்துநம
கானூ ருறைக்கலக  மொழியாதோ

வீராணம் வெற்றிமுர சோடே தவிற்றிமிலை
வேதா கமத்தொலிகள்  கடல்போல
வீறாய் முழக்கவரு சூரா ரிறக்க விடும்
வேலா திருத்தணியி  லுறைவோனே

மாரோ னிறக்கநகை தாதா திருச்செவியில்
மாபோ தகத்தையருள்  குருநாதா
மாலோ னளித்தவளி யார்மால் களிப்பவெகு
மாலோ டணைத்துமகிழ்  பெருமாளே.

291. கொந்து வார்குர வடியினு மடியவர்
சிந்தை வாரிஜ நடுவினு நெறிபல
கொண்ட வேதநன் முடியினு மருகிய  குருநாதா
கொங்கி லேர்தரு பழநியி லறுமுக
செந்தில் காவல தணிகையி லிணையிலி
கொந்து காவென மொழிதர வருசம  யவிரோத

தந்த்ர வாதிகள் பெறவரி யதுபிறர்
சந்தி யாதது தனதென வருமொரு
சம்ப்ர தாயமு மிதுவென வுரைசெய்து  விரைநீபச்
சஞ்ச ரீகரி கரமுரல் தமனிய
கிண்கி ணீமுக விதபத யுகமலர்
தந்த பேரருள் கனவிலு நனவிலு  மறவேனே

சிந்து வாரமு மிதழியு மிளநவ
சந்த்ர ரேகையு மரவமு மணிதரு
செஞ்ச டாதரர் திருமக வெனவரு  முருகோனே
செண்ப காடவி யினுமித ணினுமுயர்
சந்த னாடவி யினுமுறை குறமகள்
செம்பொ னூபுர கமலமும் வளையணி  புதுவேயும்

இந்து வாண்முக வனசமு ம்ருகமத
குங்கு மாசல யுகளமு மதுரித
இந்த ளாம்ருத வசனமு முறுவலு  மபிராம
இந்த்ர கோபமு மரகத வடிவமு
மிந்த்ர சாபமு மிருகுழை யொடுபொரு
மிந்த்ர நீலமு மடலிடை யெழுதிய  பெருமாளே.

292. சொரியு முகிலைப் பதும நிதியைச்
சுரபி தருவைச்  சமமாகச்
சொலியு மனமெட் டனையு நெகிழ்விற்
சுமட ரருகுற்  றியல்வாணர்

தெரியு மருமைப் பழைய மொழியைத்
திருடி நெருடிக்  கவிபாடித்
திரியு மருள்விட் டுனது குவளைச்
சிகரி பகரப்  பெறுவேனோ

கரிய புருவச் சிலையும் வளையக்
கடையில் விடமெத்  தியநீலக்
கடிய கணைபட் டுருவ வெருவிக்
கலைகள் பலபட்  டனகானிற்

குரிய குமரிக் கபய மெனநெக்
குபய சரணத்  தினில்வீழா
உழையின் மகளைத் தழுவ மயலுற்
றுருகு முருகப்  பெருமாளே.

293. தாக்கம ருக்கொரு சாரையை வேறொரு
சாக்ஷிய றப்பசி யாறியை நீறிடு
சாஸ்த்ர வழிக்கதி தூரணை வேர்விழு  தவமூழ்குந்
தாற்பர்ய மற்றுழல் பாவியை நாவலர்
போற்பரி வுற்றுனை யேகரு தாதிகல்
சாற்றுத மிழ்க்குரை ஞாளியைநாள்வரை  தடுமாறிப்

போக்கிட மற்றவ்ரு தாவனை ஞானிகள்
போற்றுத லற்றது ரோகியை மாமருள்
பூத்தம லத்ரய பூரியைநேரிய  புலையேனைப்
போக்கிவி டக்கட னோஅடி யாரொடு
போய்ப்பெறு கைக்கிலை யோகதி யானது
போர்ச்சுடர் வஜ்ரவை வேல்மயி லாவருள்  புரிவாயே

மூக்கறை மட்டைம காபல காரணி
சூர்ப்பந கைப்படு மூளியு தாசனி
மூர்க்க குலத்திவி பீஷணர் சோதரி  முழுமோடி
மூத்தவ ரக்கனி ராவண னோடியல்
பேற்றிவி டக்கம லாலய சீதையை
மோட்டன் வளைத்தொரு தேர்மிசை யேகொடு  முகிலேபோய்

மாக்கன சித்திர கோபுர நீள்படை
வீட்டிலி ருத்திய நாளவன் வேரற
மார்க்கமு டித்தவி லாளிகள் நாயகன்  மருகோனே
வாச்சிய மத்தள பேரிகை போல்மறை
வாழ்த்தம லர்க்கழு நீர்தரு நீள்சுனை
வாய்த்ததி ருத்தணி மாமலை மேவிய  பெருமாளே.

294. துப்பா ரப்பா டற்றீ மொய்க்கால்
சொற்பா வெளிமுக்  குணமோகம்
துற்றா யப்பீ றற்றோ லிட்டே
சுற்றா மதனப்  பிணிதோயும்

இப்பா வக்கா யத்தா சைப்பா
டெற்றே யுலகிற்  பிறவாதே
எத்தார் வித்தா ரத்தே கிட்டா
எட்டா அருளைத்  தரவேணும்

தப்பா மற்பா டிச்சே விப்பார்
தத்தாம் வினையைக்  களைவோனே
தற்கா ழிச்சூர் செற்றாய் மெய்ப்போ
தத்தாய் தணிகைத்  தனிவேலா

அப்பா கைப்பா லைப்போல் சொற்கா
வற்பா வைதனத்  தணைவோனே
அத்தா நித்தா முத்தா சித்தா
அப்பா குமரப்  பெருமாளே.

295. நிலையாத சமுத்திர மான
சமுசார துறைக்கணின் மூழ்கி
நிசமான தெனப்பல பேசி  யதனூடே
நெடுநாளு முழைப்புள தாகி
பெரியோர்க ளிடைக்கர வாகி
நினைவால்நி னடித்தொழில் பேணி  துதியாமல்

தலையான வுடற்பிணி யூறி
பவநோயி னலைப்பல வேகி
சலமான பயித்திய மாகி  தடுமாறித்
தவியாமல் பிறப்பையு நாடி
யதுவேரை யறுத்துனை யோதி
தலமீதில் பிழைத்திட வேநி  னருள்தாராய்

கலியாண சுபுத்திர னாக
குறமாது தனக்குவி நோத
கவினாரு புயத்திலு லாவி  விளையாடிக்
களிகூரு முனைத்துணை தேடு
மடியேனை சுகப்பட வேவை
கடனாகு மிதுக்கன மாகு  முருகோனே

பலகாலு முனைத்தொழு வோர்கள்
மறவாமல் திருப்புகழ் கூறி
படிமீது துதித்துடன் வாழ  அருள்வேளே
பதியான திருத்தணி மேவு
சிவலோக மெனப்பரி வேறு
பவரோக வயித்திய நாத  பெருமாளே.

296. நினைத்த தெத்தனையிற்  றவறாமல்
நிலைத்த புத்திதனைப்  பிரியாமற்
கனத்த தத்துவமுற்  றழியாமற்
கதித்த நித்தியசித்  தருள்வாயே
மனித்தர் பத்தர்தமக்  கெளியோனே
மதித்த முத்தமிழிற்  பெரியோனே
செனித்த புத்திரரிற்  சிறியோனே
திருத்த ணிப்பதியிற்  பெருமாளே.

297. பகலி ராவினுங் கருவி யாலனம்
பருகி யாவிகொண்  டுடல்பேணிப்
பழைய வேதமும் புதிய நூல்களும்
பலபு ராணமுஞ்  சிலவோதி

அகல நீளமென் றளவு கூறரும்
பொருளி லேயமைந்  தடைவோரை
அசடர் மூகரென் றவல மேமொழிந்
தறிவி லேனழிந்  திடலாமோ

சகல லோகமும் புகல நாடொறுஞ்
சறுகி லாதசெங்  கழுநீருந்
தளவு நீபமும் புனையு மார்பதென்
தணிகை மேவுசெங்  கதிர்வேலா

சிகர பூதரந் தகர நான்முகன்
சிறுகு வாசவன்  சிறைமீளத்
திமிர சாகரங் கதற மாமரஞ்
சிதற வேல்விடும்  பெருமாளே.

298. பழமை செப்பிய ழைத்தித மித்துடன்
முறைம சக்கிய ணைத்துந கக்குறி
படஅ ழுத்திமு கத்தைமு கத்துற  வுறவாடிப்
பதறி யெச்சிலை யிட்டும ருத்திடு
விரவு குத்திர வித்தைவி ளைப்பவர்
பலவி தத்திலு மற்பரெ னச்சொலு  மடமாதர்

அழிதொ ழிற்குவி ருப்பொடு நத்திய
அசட னைப்பழி யுற்றஅ வத்தனை
அடைவு கெட்டபு ரட்டனை முட்டனை  அடியேனை
அகில சத்தியு மெட்டுறு சித்தியு
மெளிதெ னப்பெரு வெட்டவெ ளிப்படு
மருண பொற்பத முற்றிட வைப்பது  மொருநாளே

குழிவி ழிப்பெரு நெட்டல கைத்திரள்
கரண மிட்டுந டித்தமி தப்படு
குலிலி யிட்டக ளத்திலெ திர்த்திடு  மொருசூரன்
குருதி கக்கிய திர்த்துவி ழப்பொரு
நிசிச ரப்படை பொட்டெழ விக்ரம
குலிச சத்தியை விட்டருள் கெர்ச்சித  மயில்வீரா

தழையு டுத்தகு றத்திப தத்துணை
வருடி வட்டமு கத்தில தக்குறி
தடவி வெற்றிக தித்தமு லைக்குவ  டதன்மீதே
தரள பொற்பணி கச்சுவி சித்திரு
குழைதி ருத்திய ருத்திமி குத்திடு
தணிம லைச்சிக ரத்திடை யுற்றருள்  பெருமாளே.

299. புருவ நெறித்துக் குறுவெயர் வுற்றுப்
புளகித வட்டத்  தனமானார்
பொருவிழி யிற்பட் டவரொடு கட்டிப்
புரளு மசட்டுப்  புலையேனைக்

கருவழி யுற்றுக் குருமொழி யற்றுக்
கதிதனை விட்டிட்  டிடுதீயக்
கயவனை வெற்றிப் புகழ்திகழ் பத்மக்
கழல்கள் துதிக்கக்   கருதாதோ

செருவசு ரப்பொய்க் குலமது கெட்டுத்
திரைகட லுட்கப்  பொரும்வேலா
தினைவன முற்றுக் குறவர் மடப்பைக்
கொடிதன வெற்பைப்  புணர்மார்பா

பெருகிய நித்தச் சிறுபறை கொட்டிப்
பெரிகை முழக்கப்  புவிமீதே
ப்ரபலமுள் சுத்தத் தணிமலை யுற்றுப்
ப்ரியமிகு சொக்கப்  பெருமாளே.

300. பூசலிட் டுச்ச ரத்தை நேர்கழித் துப்பெ ருத்த
போர்விடத் தைக்கெ டுத்து  வடிகூர்வாள்
போலமுட்டிக்கு ழைக்கு ளோடிவெட் டித்தொளைத்து
போகமிக் கப்ப ரிக்கும்  விழியார்மேல்

ஆசைவைத் துக்க லக்க மோகமுற் றுத்து யர்க்கு
ளாகிமெத் தக்க ளைத்து  ளழியாமே
ஆரணத் துக்க ணத்து னாண்மலர்ப் பொற்ப தத்தை
யான்வழுத் திச்சு கிக்க  அருள்வாயே

வாசமுற் றுத்த ழைத்த தாளிணைப் பத்த ரத்த
மாதர்கட் கட்சி றைக்கு  ளழியாமே
வாழ்வுறப் புக்கி ரத்ன ரேகையொக் கச்சி றக்கு
மாமயிற் பொற்க ழுத்தில்  வரும்வீரா

வீசுமுத் துத்தெ றிக்க வோலைபுக் குற்றி ருக்கும்
வீறுடைப் பொற்கு றத்தி  கணவோனே
வேலெடுத் துக்க ரத்தி னீலவெற் பிற்ற ழைத்த
வேளெனச் சொற்க ருத்தர்  பெருமாளே.

301. பொருவிக் கந்தொடடர்ச் செருவிக் கன்றொடுமிப்
புதுமைப் புண்டரிகக்  கணையாலே
புளகக் கொங்கையிடத் திளகக் கொங்கையனற்
பொழியத் தென்றல்துரக்  குதலாலே

தெருவிற் பெண்கள்மிகக் கறுவிச் சண்டையிடத்
திரியத் திங்களுதிப்  பதனாலே
செயலற் றிங்கணையிற் றுயிலற் றஞ்சியயர்த
தெரிவைக் குன்குரவைத்  தரவேணும்

அருவிக் குன்றடையப் பரவிச் செந்தினைவித்
தருமைக் குன்றவருக்  கெளியோனே
அசுரர்க் கங்கயல்பட் டமரர்க் கண்டமளித்
தயில்கைக் கொண்டதிறல்  குமரேசா

தருவைக் கும்பதியிற் றிருவைச் சென்றணுகித்
தழுவிக் கொண்டபுயத்  திருமார்பா
தரளச் சங்குவயற் றிரளிற் றங்குதிருத்
தணிகைச் செங்கழநிப்  பெருமாளே.

302. பொற்குட மொத்தகு யத்தைய சைப்பவர்
கைப்பொருள் புக்கிட  வேதான்
புட்குரல் விச்சையி தற்றுமொ ழிச்சியர்
பொட்டணி நெற்றிய  ரானோர்

அற்பவி டைக்கலை சுற்றிநெ கிழ்ப்பவர்
அற்பர மட்டைகள்  பால்சென்
றக்கண்வ லைக்குள கப்படு புத்தியை
அற்றிட வைத்தருள்  வாயே

கொக்கரை சச்சரி மத்தளி யொத்துவி
டக்கைமு ழக்கொலி  யாலக்
கொக்கிற கக்கர மத்தம ணிக்கருள்
குத்த தணிக்கும  ரேசா

சர்க்கரை முப்பழ மொத்தமொ ழிச்சிகு
றத்தித னக்கிரி  மேலே
தைக்கும னத்தச மர்த்தஅ ரக்கர்த
லைக்குலை கொத்திய   வேளே.

303. பொற்ப தத்தி னைத்து தித்து நற்ப தத்தி லுற்ற பத்தர்
பொற்பு ரைத்து நெக்கு ருக்க  அறியாதே
புத்த கப்பி தற்றை விட்டு வித்த கத்து னைத்து திக்க
புத்தி யிற்க லக்க மற்று  நினையாதே

முற்ப டத்த லத்து தித்து பிற்ப டைத்த கிர்த்ய முற்றி
முற்க டைத்த வித்து நித்த  முழல்வேனை
முட்டவிக்க டைப்பி றப்பி னுட்கி டப்பதைத்த விர்த்து
முத்தி சற்றெ னக்க ளிப்ப  தொருநாளே

வெற்பளித்த தற்ப ரைக்கி டப்பு றத்தை யுற்ற ளித்த
வித்த கத்தர் பெற்ற கொற்ற  மயில்வீரா
வித்தை தத்வ முத்த மிழ்ச்சொலத்த சத்தம் வித்த ரிக்கு
மெய்த்தி ருத்த ணிப்பொ ருப்பி  லுறைவோனே

கற்பகப்பு னக்கு றத்தி கச்ச டர்த்த சித்ர முற்ற
கற்பு ரத்தி ருத்த னத்தி  லணைவோனே
கைத்தரக்கர் கொத்துகச்சி னத்துவஜ்ர னுக்க மைத்த
கைத்தொ ழுத்த றித்து விட்ட  பெருமாளே.

304. மலைமு லைச்சியர் கயல்வி ழிச்சியர்
மதிமு கத்திய  ரழகான
மயில்ந டைச்சியர் குயில்மொ ழிச்சியர்
மனது ருக்கிக  ளணைமீதே

கலைநெ கிழ்த்தியெ உறவ ணைத்திடு
கலவி யிற்றுவள்  பிணிதீராக்
கசட னைக்குண அசட னைப்புகல்
கதியில் வைப்பது  மொருநாளே

குலகி ரிக்குல முருவ விட்டமர்
குலவு சித்திர  முனைவேலா
குறவர் பெற்றிடு சிறுமி யைப்புணர்
குமர சற்குண  மயில்வீரா

தலம திற்புக லமர ருற்றிடர்
தனைய கற்றிய  அருளாளா
தருநி ரைத்தெழு பொழில்மி குத்திடு
தணிம லைக்குயர்  பெருமாளே.

305. முகத்தைமி னுக்கிக ளசடிகள் கபடிகள்
விழித்தும ருட்டிகள் கெருவிகள் திருடிகள்
மொழிக்குள் மயக்கிகள் வகைதனில் நகைதனில்  விதமாக
முழித்தும யற்கொளு மறிவிலி நெறியிலி
புழுக்குட லைப்பொரு ளெனமிக எணியவர்
முயக்கம டுத்துழி தருமடி யவனிடர்  ஒழிவாக

மிகுத்தழ கைப்பெறு மறுமுக சரவண
புயத்திள கிக்கமழ் நறைமலர் தொடைமிக
விசைக்கொடு மைப்பெறு மரகத கலபியும்  வடிவேலும்
வெளிப்படெ னக்கினி யிரவொடு பகலற
திருப்பதி யப்புக ழமுதியல் கவிசொலி
விதித்தனெ ழுத்தினை தரவரு மொருபொரு  ளருளாயோ

புகைத்தழ லைக்கொடு திரிபுர மெரிபட
நகைத்தவ  ருக்கிட முறைபவள் வலைமகள்
பொருப்பிலி மக்கிரி பதிபெறு மிமையவ  ளபிராமி
பொதுற்றுதி மித்தமி நடமிடு பகிரதி
எழுத்தறி ருத்திரி பகவதி கவுரிகை
பொருட்பயனுக்குரை யடுகிய சமைபவள்  அமுதாகச்

செகத்தைய கத்திடு நெடியவர் கடையவள்
அறத்தைவ ளர்த்திடு பரசிவை குலவதி
திறத்தமி ழைத்தரு பழையவ ளருளிய  சிறியோனே
செருக்கும ரக்கர்கள் பொடிபட வடிவுள
கரத்தில யிற்கொடு பொருதிமை யவர்பணி
திருத்தணி பொற்பதி தனில்மயில் நடவிய  பெருமாளே.

 
மேலும் திருப்புகழ் »
temple news
அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் முதலாம் பகுதி விநாயகர் துதி 1. கைத்தல நிறைகனி யப்பமொ டவல்பொரிகப்பிய ... மேலும்
 
temple news
66. மூளும்வினை சேர மேல்கொண்டி டாஐந்துபூதவெகு வாய மாயங்கள் தானெஞ்சில்மூடிநெறி நீதி யே துஞ்செ யாவஞ்சி  ... மேலும்
 
temple news
177. மந்தரம தெனவேசி றந்தகும்பமுலை தனிலேபு னைந்தமஞ்சள்மண மதுவேது லங்க  வகைபேசிமன்றுகமழ் தெருவீதி ... மேலும்
 
temple news
124. தகர நறுமலர் பொதுளிய குழலியர்கலக கெருவித விழிவலை படவிதிதலையி லெழுதியு மனைவயி னுறவிடு  வதனாலேதனையர் ... மேலும்
 
temple news
306. முகிலு மிரவியு முழுகதிர் தரளமுமுடுகு சிலைகொடு கணைவிடு மதனனுமுடிய வொருபொரு ளுதவிய புதல்வனு  ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar