பதிவு செய்த நாள்
18
ஏப்
2015
03:04
அத்தியின் புத்திரரை முத்தியின் வித்தகரை
தத்திதன் சோதரரை சித்திதன் நாதகரை
தித்திதன் அஞ்சலரை பத்தித்து வந்தவரை
புத்தித்துப் போற்றிடவே எத்தித்தும் ஏந்தலாமே !
யோகேந சித்தஸ்ய பதேன வாசாம்
மலம் சாகரஸ்யது வைத்ய கேன
யோகாப ரோத்தம் பிரவரம் முனீநாம்
பதஞ்சலசும் பிராஞ்ஐலி ராந தோஸ்மி
அன்புள்ள மாணவச்செல்வங்களே! யோகத்தின் மிக நுட்பமான பாடங்களுக்குச் செல்வதற்கு முன்பாக ஆன்மீகத்தின் ஆரம்பப் பாடத்திற்கு செல்÷ வாம். ஆரம்பப் பாடம் என்றால் இப்போதெல்லாம் கற்கின்ற ஒன்றாம் வகுப்புக்கு முன்னால் பிரிகேஜி-எல்கேஜி, எல்கேஜி, ஹூகேஜி, என்ற மூன்று நிலைகளை கடக்க வேண்டியிருக்கிறது. ஆனால் ஆன்மீக ஞானத்திற்கு அப்படி ஏதும் இல்லை. எடுத்த எடுப்பிலயே முதல் வகுப்பிற்குச்செல்வோம். ஏனென்றால் ஏற்கனவே பல பிறவிகளில் நீங்கள் கற்றுத் தேர்ந்திருக்கிறீர்கள். பல விஷயங்களைக் கேட்டிருக்கிறீர்கள்.
ஆகையால் நமக்கு 1-ம் பாடத்தையே முதல் பாடமாக எடுத்துக் கொள்ளலாம். மற்றவர்களைக் காட்டிலும் ஒரு குடும்பஸ்தனுக்கு ஆன்மீகம் எளிதாக வருகிறது. ஏனெனில் அவனுடைய குழந்தைகளுக்கும் சரி, மனைவிக்கும் சரி உறவினர்களுக்கும், சரி ஏதாவது தடைகள் வந்திருக்கும் போது அது அவனைத் துன்பப் படுத்தியிருக்கும். பொதுவாக அவர்களின் மனோபாவத்திற்கு ஏற்ப பலம் அல்லது பலவீனம் அடைகிறான். அவன் பல இன்பங்கள், பலப்பலத் துன்பங்களுக்கு ஆளாகும் போது பல பாடங்களைக் கற்றுக் கொள்கிறான். முதலில் பல விஷயத்தை பார்த்துப் பதறி÷ பாகிறான். பிறகு அது வழக்கமாகி, எது பலம், எது பலவீனம் என்று அனுவபத்தின் மூலம் அவன் அறிகிறான். பிறகு இவைகள் விதியின் காரணமாகவும், சூழ்நிலை காரணமாகவும், தன் முயற்சியின் காரணமாகவும் நடக்கிறது என்று அவன் புரிந்து இறுதியில் இறைவன் ஒருவன் இரு க்கிறான் என்று நம்புகிறான்.
ஆகவே குடும்பஸ்தனுக்கு வெகுவிரைவில் ஆன்மீகத்திற்கு வருவதற்கு வாய்ப்புகள் அதிகம். இது எதனால் வருகிறது என்று சொன்னால் பழக்கம். பழக்கம் என்று சொன்னால், அனுபவம். ஆகவே அனுபவம் தரும் பாடம் தான் ஒருவனை ஆன்மீகவாதியாக மாற்றுகிறது. இல்லையெனில் அவர்கள் மாறமாட்டார்கள். துன்பம் என்ற ஒன்று வருகின்ற போதுதான் ஆன்மீகம் வருகிறது. அதே சமயம் துன்பம் வந்தால் தான் ஆன்மீகம் வர÷ வண்டும் என்ற பொருளுமில்லை, கட்டாயமுமில்லை.
ஆன்மீகம், என்பது முன்ஜென்மத் தொடர்ச்சி, ஒவ்வொருவரும் அவர்கள் செய்த புண்ணியம், ஆக அதைப் பூர்வ புண்ணியம் என்றும் சொல்வார்கள். அதன் வழியாக வெகுவிரைவிலேயே ஆன்மீக ஞானம் வந்துவிடும். ஆகவே எவ்வாறு இருப்பினும் ஆன்மீக உணர்வு என்பது ஒரு ஒப்பற்ற உணர்வு. எடுத்தவுடனேயே அது வருவதில்லை. சிறிது காலம் அனுபவத்தின் பின்பு தான் வருகிறது. அப்படி வரும்போது தான் ஆன்மீகத்தை ஊன்றிப் பற்றித் திடமாக இருக்கமுடியும். ஆகவே மேலெழுந்த வாரியாக அதைக்கற்க முடியாது. ஆன்மீகத்திற்கு என்று எந்த ஒரு வகுப்புமில்லை. எந்த ஒரு பாடமும் இல்லை. பண்டையகால வேதங்களும், இதிகாசங்களும், மற்ற அனைவருடைய அனுபவப் பாடங்களும் மற்றும் சித்தர்களுடைய பாடங்களும், கோவில்களிலே சொல்லப்படும் மந்திரங்களும், பொரியோர்கள் சொல்லிக் கொடுத்த நன்னடத்தை வழிகளும் இவைகள்தான் அவனுக்கு ஆன்மீகமாக முதலில் வந்து இருக்கிறது. அதிலிருந்து சிறிது, சிறிதாக மேம்பட்டு, ஆன்மீகத்தில் உள்ளே நுழைந்தவுடன் அடுத்தது என்ன, அடுத்தது என்ன, ஆழமாக (சீரியஸாக) சிந்தித்துப் பார்க்கிறான். அப்படி பார்க்கின்ற போதுதான் அவனுக்கு அறியதக்கதாக ஏதோ ஒன்றிருக்கிறது என உணர்கிறான். (மாணவர்களைப் பார்த்து கூறுகிறார்) நாம் பதஞ்சலி யோகத்தை நன்றாக புரிந்து வைத்திருக்கிறோம். பதஞ்சலி ÷ யாகமும், மற்ற சாதாரணவற்றிக்கும் என்ன வித்தியாசம் என்றால், குறைந்தபட்சம் மனிதன் அவனைப் பற்றி தெரிந்து, புரிந்துக் கொள்வதற்கு பதஞ்சலி யோகம் பயன்படுகிறது. ஏனென்றால் அது நாட்டிற்காக, சமுதாயத்திற்காக, வேறு ஒரு விஷயத்திற்காகவும் சொல்லப்படவில்லை. ஏனென்றால், ஒவ்வொரு ஆன்மாவும், தன்னை உயர்த்திக் கொள்வதும், அதற்கு வழிவகுப்பதுதான் பதஞ்சலி யோகம். இது ஒரு சுயநலமில்லையா? என்று நீங்கள் கேட்கலாம்? எது சுயநலமில்லை?
மனிதர்கள் தனித்தனியாகவே பிறக்கிறார்கள், தனித்தனியாகவே இறக்கிறார்கள். இடையிலே யார், யாரோடெல்லாம், வாழ்கிறான் என்று பார்த்தால், நண்பனோடு, மனைவியோடு, குழந்தை, குட்டியோடு, எல்லா உறவினர்களோடு, அண்டை-அயலர்களோடு, சமுதாயத்தோடு, இந்த உலகத்தோடு, இவ்வாறு சேர்ந்து, கலந்து பழகுகிறார்கள். ஆனாலும் அவர்களை முன்னேற்றம் செய்துக் கொள்ள, அவர்களுக்குத் தெரியவில்லை. ஆக தன்னுடைய முன்னேற்றம் உண்மையில் எதுவென்று தெரியவில்லை.
அவர்கள் கண்ணை மூடிக் கொண்டு உலகத்தின் வழியிலே நடந்து கடைசியில் நமக்கு ஒன்றும் பலன் தராது என்று உணர்நத நிலையில், அப்போது தான் பதஞ்சலியின் யோக சூத்திரம் அவனைத் தட்டியெழுப்பி, இதுமட்டுமே பயன்தர வல்லது. நம்முடைய நோக்கம், மனிதர்களுடைய நோக்கம் பிறப்பில்லாமல் இருப்பதற்கு என்ன வழி என்று சொல்லிக் கொடுக்கிறார். மனித வாழ்க்கை பருவப் பயணங்களில் எத்தனை வயதுக்கு முன்பாக இந்த பதஞ்சலி யோகத்தை பார்க்கிறானோ, அந்தந்த வயதைக் கடக்கும்போதெல்லாம் பலன் கிடைக்கிறது. திருமணத்திற்கு முன்னால் படித்தால் மனதை எவ்வாறு வைத்துக்கொள்ள வேண்டுமென்று தெரிகிறது.
திருமணமான பிறகு படித்தால், குடும்பம் என்றால் என்ன, ஆசை என்றால் என்ன? விருப்பு என்றால் என்ன? வெறுப்பு என்றால் என்ன? நம்பிக்கை என்றால் என்ன? எவ்வளவுக்கு எவ்வளவு வயதுக்கு முன்னரே படிக்கிறானோ அவ்வளவுக்கு அவ்வளவு அவனுடைய வாழ்கைச் சிறப்பாக அமையும். ஆனாலும் எல்லோராலும் இயல்வதில்லை. ஏனென்றால் ஞானத்தேடலுக்கு, காரணம் வரும், அதற்கு ஒரு காலம் வரும், அதற்கு வயது வரவில்லை, என்றெல்லாம் பயமுறுத்தி வைத்திருந்தார்கள் நம்முடைய பெற்றோர்கள். எல்லா பெற்றோர்களையும் சொல்லவில்லை.
ஏனென்றால் ஒவ்வொரு பெற்றோர்களும், தன்னுடைய உண்மை நிலையை யோசிக்காமல், அது எவ்வாறோ போகட்டும், என்னுடைய குழந்தைகள் நன்றாக வாழ வேண்டும், நலமோடு வாழ வேண்டும், செல்வத்தோடு வாழ வேண்டும், நான் நினைத்ததையெல்லாம் நடத்துவதற்கு அவனுக்கு சக்தி வேண்டும் என்றெல்லாம் பொதுநலத்தின் அடிப்படையின்றி சுயநலத்தின் அடிப்படையிலே அவற்றை- யெல்லாம் அடைய அவனுக்குக் கொஞ்சம் கோவிலையும் அங்குள்ள இறையையும் அறிமுகப்படுத்துகிறார்கள். ஆசை வார்தைகளைச் சொல்லி அறிமுகப்படுத்துவார்கள். அதற்கு மாறாக இரு ப்பவர்களும் இருக்கிறார்கள்.
அவர்களைப் பற்றிப் பேசவேண்டாம். ஆகவே இவ்வாறு ஆன்மீக துவக்கம் சிறிது, சிறிதாக வந்து இறைவனைப் பற்றி உணர்கிற காலம் வரும் போது சொல்லிக் கொடுப்பவர்கள் இல்லாமல் போய்விடுவார்கள். ஆக அந்தமாதிரி குடும்பத்திலே சொல்லிக் கொடுத்துக் கொண்டே இருக்க ÷ வண்டுமானால், அது கூட்டுக் குடும்பமாக இருந்தால் சொல்லிக் கொடுப்பவர்கள் இருந்துக் கொண்டே இருப்பார்கள். ஆகவே அதுபோன்ற சூழ்நிலை இப்போதில்லை. வேறொருவர் உனக்கு சொல்லிக் கொடுத்தால், அது அவருடைய நன்மைக்காக இருக்கும். அது உன்னுடைய முன்னேற்றத்திற்காக இருக்காது. ஆக எப்படி இருந்தாலும் நம்முடைய நலம் பற்றியது நம்முடையது மட்டுமே. ஆன்மாவைப் பற்றியது. மற்றவை வெறும் கடமைகளே. கடனே என்று செய்யாமல், கடமையாகச் செய். கடமை உயிர்மூச்சு என்பார்கள். கடமை என்று சொன்னால், யாருக்கு கடமை செய்யக் கடமைப் பட்டிருக்கிறாமோ, அதைச் சரியாக செய்தாலே போதும்.
ஆனால் ஆழ்ந்த பற்று, ஆழ்ந்த மோகம், ஆழ்ந்த பாசம், இதையெல்லாம் வைத்துக் கொண்டிருந்தால், நீ விரும்பும் தனிப்பட்ட முன்னேற்றத்தை உன்னால் காண முடியாது. ஏனென்றால் உன்னுடைய பாவ புண்ணியத்திற் காக பிறந்திருக்கிறாய், உன்னுடைய பாவ, புண்ணியத்தைக் கழிப்பதற்காக பிறந்திருக்கிறாய், ஆகவே இந்த பாவ, புண்ணியத்தை இப்பிறவியிலே கழிக்காவிட்டால், எப்பிறவியிலே கழிப்பாய் என்று தெரியாது இதைப் பற்றி ஆன்மீகத்திலே வந்த பிறகு தெரிந்து கொள்ளும் விஷயம். இதில் தீவிரமாக உழைத்து செயலாற்ற வேண்டும், ஒவ்வொரு வினாடியும் பொன் ÷ பான்றது. ஆகவே அதை நினைத்து, நினைத்து எல்லோருக்கும் அவரவர் செய்கின்ற பணியிலே ஒவ்வொரு வினாடியையும் வீணாக்காமல், நற்சிந் தைகளிலேயே ஊறிப்போய் அவ்வழி வந்து விட, வந்து விட, பிறரோடு கலந்து பேசுவது என்பதே இல்லாமல் போய்விடும். அதாவது சௌஜன்னி யம் என்பார்கள். (ஞிணிண்ட்ணிணீணிடூடிtச்ண) இந்த மாதிரி பிறருடன் பழகுவது குறைந்து போய்த் தனியாக ஆகிவிடுகிறார்கள்.
மற்றவர்கள் நினைக்கலாம், அவருக்கு மூளை சரியில்லை என்று நினைத்தால் நினைத்துப் போகட்டும். மூளை சரியில்லை- யென்று சொல்கின்றவ÷ னா, பாசம் வைத்திருப்பவனோ நம்மை ஒருபோதும் முன்னேற்றம் அடையச் செய்ய முடியாது. கடைசி நேரத்தில் கூட இறைவனை சொல்லிக் கொண்டிருக்கும்போது மனைவி முன்னே வந்து சாவி எங்கே வைத்திருக்கிறாய், தாய், நான் வந்திருக்கிறேன் பார். உனக்கு அப்புறம் யார் என்னைப் பார்ப்பது. இப்படியே மீண்டும் இவனை இறுதி மூச்சுவரை பந்தப்படுத்திக் கொண்டே இருப்பார்கள். ஆகவே எவ்வாறு கடைத்தேறுவது. கடைத்÷ தறுவது என்றால் இதுவெல்லாம் சொல்வது தவறு என்று சொல்லவில்லை. அவர்களுக்கு அந்தளவே ஞானமிருக்கிறது.
பதஞ்சலி யேரித்தை நீ படிக்கப் படிக்க, அவர்களுக்குச்சொல்லிக் கொடு, இதுவெல்லாம், வேண்டாம், கிடைக்கிறது போதும், இதை வைத்துக் கொண்டு, அமைதியாக இருப்போம். நமக்கு என்ன குறை, உணவு கொடுத்திருக்கிறார், உடை கொடுத்திருக்கிறார், உறைவிடம் கொடுத்திருக்கிறார், வேறு என்ன தேவை? அதிகமாக ஆசைப்பட வேண்டாம் தாயே! என்ன வேண்டுமோ செய்ய கடமைப்பட்டிருக்கிறேன். அப்படி கடமைகளை நிறை வேற்றி அவன் தன்னுடைய கடமை எதுவோ, தன்னைத் தானே முன்னேற்றிக் கொள்ள வேண்டியது ஏதுவோ? அதை நிறைவேற்றிக் கொள்கிறான். அதுதான் சரியான சந்தர்ப்பம், அப்போதுதான் பதஞ்சலி யோகத்தை படிக்க வேண்டும், சொல்லி கொடுக்க வேண்டும், இந்த உணர்வு பதஞ்சலி யே õகத்தைப் பற்றிப் பரவலாக வர வேண்டும், அது வராததால் வெறும் ஆன்மீக நூல்களை, அல்லது ஆன்மீக சம்பந்தப்பட்ட நம்பிக்கைகளையும் படித்து இன்ன கோவிலுக்கு போனால், இன்னது நடக்கும், என்று அவன் ஒவ்வொரு கோவிலிலும் என்ன தேவையோ, அதனை அடைய அந்தக் கோவிலை நோக்கிச் செல்கிறான். அது மதங்களின் கட்டாயமா? அல்லது கடவுளோடு ஏதேனும் ஒப்பந்தம் செய்து கொள்ளும் கட்டாயமா?
மதம் எவ்வாறு இருந்தாலும், எவருடைய மத அடிப்படை எவ்வாறாக இருந்தாலும் சரி, ஆன்மீக உணர்வு என்பது பற்றி மிக அடிப்படையாக இரு க்கிறது. நம்முடைய மதத்திலயே ஆழமாகப் பார்த்தால், ஒவ்வொன்றும் ஆன்ம முன்னேற்றம் மற்றும் ஆன்ம விசேஷத்தை பற்றியதாகவேயிருக்கும். அதை யாரும் அந்த இடத்தை அறிந்து படிப்பதேயில்லை. எனக்குச் செல்வம் வருவது எப்படி, வீடு கட்டுவது எப்படி? வீட்டில் கல்யாணம் ஆகவில்லை என்றால் எந்தக் கோவிலுக்குச் செல்வது, குழந்தைப்பேறு எப்போது? மகிழ்ச்சியைத் தருவது வேறு எதாவதிருக்கிறதா, இதற்கு என்ன பரிகாரம் இருக்கிறது என்றுதான் நினைக்கிறார்களே தவிர, எது உண்மையான பக்தி, அந்த பக்தியை எவ்வாறு குரு மூலம் மற்றும் பிற துணைகள் மூலம் அடைவது என்பது பற்றி தெரியாதுதான் இதற்குக் காரணம். ஆகையால் அவர்கள் மீது தவறில்லை. தெரிந்தால் அப்படிச் செய்ய மாட்டார்கள். நம்முடைய மதத்தலைவர்கள் இறங்கி வந்து அவர்களுக்குப் புரியும்படி சொல்லி, உண்மையான பக்தி, கர்ம மற்றும் யோக விஷயத்தைக்கூறி அவர்களை முன்னேற்றம் அடையச் செய்தால், அவர்கள் கண்டிப்பாகப் பதஞ்சலி யோகத்தைக் கெட்டியாகப் பிடித்து முன்னேற்றம் அடைந் துவிடுவார்கள். வாழ்வில் அமைதி, திருப்தி, மகிழ்ச்சி அடைவார்கள்.
அதுவரைக்கும் பலர் அரைகுறையாக யோகத்தைக் கற்றுக்கொண்டும், சில பாடங்களை படித்துக்கொண்டும், அதில் அவர்கள் சரியாகப் படிக்கிறார்களா. அல்லது முன்னேற்றம் அடைந்துவிட்டார்களா, என்று கேட்டால் அதுவும் அவர்களுக்குத் தெரியவில்லை. ஆகவே வாழ்க்கை யில் ஒரு விஷயத்திலும் முழுமையில்லாமல், உன்னைப் பற்றி உனக்கே தெரியாமல், பிறர்க்கு நீ எப்படி உதவ முடியும். பிறரிடமிருந்து நீ பெற்றாலும் அது உண்மையிலே நன்மையைத் தந்ததா? இவ்வாறு ஒரு திருமணமானவன் நன்றாக யோசித்தால் நான் இத்தனைக் காலம் மகிழ்ச்சி யடைந்திருக்கிறேனா என்று சிந்தித்துப் பார்த்தால், தெரியும் எல்லாம் சில மணி நேரங்களே. அவனுக்கு எதுவும் நினைவுக்கு வராது. ஏனென்றால். ருசியான உணவு என்றால் குறிப்பட்ட வயதோடு சரி, இன்னும் அது மேல் ஆசை வந்தால், அந்த ருசியான உணவே இவனுக்கு வினையாக விடும். வேறு அனுபவ ங்கள் வேண்டுமென்றால், அவனுடைய உடல் ஒத்துழைக்காது. ஆகவே எல்லாவற்றிலும் இருந்து தனித்தனியாக பிரிக்கப்படுகிற போதுதான் நான் எந்த இன்பத்தையும் அடையவில்லை என்று நினைப்பான்.
இன்பம் என்பது என்ன? மன அமைதி. அதுதான் பேரமைதி. அதாவது எந்தக் கவலையும் இல்லாமல் இருப்பது. (ணீடிஞுஞிஞு ணிஞூ ட்டிணஞீ) அது யாருக்கு இருக்கிறதோ அவர்கள் தான் பாக்கியவான்கள். ஆகவே அந்த பாக்கியம் எவ்வாறு கிடைக்கிறது விதியின் மூலமும் கிடைக்கிறது. (ஏற்கன வே செய்த பூர்வ புண்ணியத்தின் படியும்) கிடைக்கும். நல்லோர் மத்தியிலும் கிடைக்கும். சத் சங்கங்களிலும் கிடைக்கும். ஆனால் அதை மேலும் வி ருத்தி செய்வது என்பதையும் எந்தக் கடையில் கிடைக்கும் என்று தேட வேண்டுமா? (சிரிப்பு)
அந்தப் பதஞ்சலி யோகத்தை எவன் ஓருவன் சிரத்தையோடு படிக்கிறானோ அவனுக்குத்தேடாமல் அமைதி கிடைக்கும்.
மனம் என்பது யாருக்கும் இல்லாததல்ல. மனிதனைத் தவிர எல்லா விலங்குகளுக்கும் எல்லா ஜீவராசிகளுக்கும் மனம் இருக்கிறது. ஆனால் அவைகளுக் கெல்லாம் வரையறுக்கப்பட்ட நிலையிலே மனம் இருக்கிறது. ஒரு உண்மையைச் சொல்ல வேண்டுமானால், நம்மை விட அவைகள் மிகச்சிறந்தவைகள். அவைகளுக்கு உணர்வில் என்ன ஊட்டப்ட்டிருக்கிறதோ, புத்தியில் என்ன பதியப் பட்டிருக்கிறதோ, (ணூஞுஞ்டிண்tஞுணூஞுஞீ) அதைத் தவிர வேறுறொன்றுக் கும் அதனுடைய மனம் செல்லாது. அவற்றினுள்ளும் ஆன்மா உறங்குகிறது. ஆனால் நமக்கு எந்த (ணூஞுஞ்டிண்tஞுணூஞுஞீ) பதிவும் செய்யப்படவில்லை. இவனுள் விழித்திருக்கும் ஆன்மா சுதந்திரமற்று இருக்கிறது. அதனால்தான் நம்முடைய மனம் பலவாறாகச் செல்கிறது. ஆகவே வரையறுக்கப்படாத ஒன்று நல்ல முறையில் இருக்கின்றது என்று சொன்னால், வரைமுறையோடு வரையற்ற நிலையிலே, எல்லாச் சுதந்திரமும் கொடுக்கப்பட்டிருக்கின்ற நிலையிலே, இவன் தான் உயர்ந்தவன் என்று சொல்கின்ற நிலையிலே, இறைவனுக்கு சமமானவன் என்ற நிலையிலே, ஆன்மா என்ற ஒன்று சாட்சியாய் நின்று சூட்சம வடிவில் இவனுக்கு இறைவனாக இருக்கிறது.
இவன் நினைத்தால் எல்லா நிலைகளிலும் எல்லாவற்றையும் உயர்த்த முடியும். இவனே ரிஷியாகிறான், இவனே தேவனாகிறான், இவனே கடவுளாகிறான். அந்தளவு உயர்ந்த நிலையிருக்கின்ற மனிதன் தன்னைப் பற்றி உணரவில்லையென்று சொன்னால், இவையெல்லாம் எவ்வாறு சாத்தியமாகும். ஆகவே மனம் என்ற ஒன்று தான் எல்லாவற்றிற்கும் அடிப்படை. அதனை மனிதன் தன் கட்டுப்பாட்டினுள் கொணராத வரை இவனுடைய விசேஷத்தன்மைகள் யாவும் பயனற்றவையே. வானில் விதைத்த விதைகளே. ஒருபோதும் அவை முளைக்காது.
அந்த மனம் என்ற ஒன்று திருப்தியடைய வேண்டுமானால், அவனுடைய மனத்தை இவனுடைய கட்டுப்பாட்டில் கொண்டு வர வேண்டும். மனதைக் கட்டுப்படுத்துவதற்கு என்னென்ன அணுகுமுறைகள் இருக்கின்றன, முதலில் உன்னுள் எப்போதும் நீ தனியாக இருக்க வேண்டும். தனிமை என்பது ஊரை விட்டு ஓடுவதோ, காஷாயம் உடுத்திக் கொள்வதோ, எல்லாவற்றையும் வெறுத்துக் கொள்வதோ, அல்ல. தனிமையென்று சொன்னால் உன்னை மற்ற விஷயங்களிலிருந்து பிரித்து விடுவது. அவை எல்லாம் நிலையானவையல்ல என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். எது நிலையான இன்பம் தருவது என்ற நினைவு வந்தவுடனேயே இவன் பிறவற்றில் இருந்து தனிமைப்படுத்தப்பட்டு விடுகிறான்.
ஆகையால் இவன் துணையில்லாமல் இருக்கிறான் என்று அர்த்தமில்லை. அப்போது தான் உண்மையான துணை வருகிறது. இறைவனோடு துணை கிடைக்கிறது. எப்போதெல்லாம் தனிமைப்படுத்தப்பட்டிருக்கிறாயோ, அப்போது தான் உனக்கு வேதனைகளும், துக்கங்களும் உன்னிலிருந்து விலகி விடும். எப்போது உண்மையிலே எல்லாவற்றிலிருந்தும், நீ உன்னை தனிமைப்படுத்திக் கொள்கிறாயோ, அப்போது தான் ஞானம் என்ற ஒன்று கிட்டுகிறது. அப்போது நிறைந்த வாழ்க்கை கிடைகிறது. அந்த வாழ்க்கையை அடைய அதற்கென்ற ஒரு தவிப்பு உன்னுள் வர வேண்டும். நீ பதஞ்சலி யோகத்தைக் கற்க வேண்டும்.
பதஞ்சலி யோகம் அப்படி என்ன சொல்கிறது என்றால், மனதைப்பற்றி அல்லாது வேறு எதுவும் சொல்லவில்லை. நீ மனத்தை ஆள வேண்டும். அப் படிச் செய்தால், நீ நிம்மதியாக இருப்பாய். மனதைத் தெரிந்துகொண்டு விட்டால், பிரபஞ்சத்திலுள்ள அத்தனை ரகசியங்களையும் தெரிந்து கொண்டால் உன் முழு வாழ்நாளும் உனக்குத் தெரியும், ஏற்கனவே கழித்த வாழ்க்கை தெரியும், இனி கழிக்க இருக்கின்ற வாழ்க்கை தெரியும். இனியும் மீதக் காலம் எவ்வாறு கழியும் என்பதும் தெரியும். ஆகவே மனதைச் செம்மைப்படுத்துவதுதான் பதஞ்சலியின் முக்கியமான வேலை. ஸ்ரீ பதஞ்சலி மகரிஷி அவர்கள் நம்முடைய மனதை நாம் ஆள்வதற்கு நம்மை மிக மெதுவாகக் கொண்டு செல்கிறார்.
முதலில் நீ தர்மத்தைக் கடைப்பிடிக்க வேண்டும். தர்மத்தின் படி ஒழுக வேண்டும், இயமம், நியமம், இந்த இரண்டும் வந்துவிட்டால், மற்றவையெ ல்லாம் படிப்படியாக வந்துவிடும். இந்த இரண்டிலும் சீர்பட்டு விட்டால், உலகாதய மான விஷயங்கள் சரியாகி விடும். அதிலே நேர்த்தியான வாழ்க்கை வாழ்ந்து விடுவாய். முதலில் மன நிம்மதி கிடைக்கும். யாருக்கு என்ன கொடுக்க வேண்டும். யார் நமக்கு என்ன தருவார்கள் என்ற எண்ணங்களெல்லாம், போய்விடும். அப்படியானால், நான் ஒட்டாண்டியாகி விடுவேனா அப்படில்லை, உன் தேவைக்கு ஏற்ப, உழைப்புக்கேற்ப ஊதியம் கிடைக்கும். அதிலிருந்து கிடைக்கின்ற வருமானம் போதுமானதாக இல்லாவிட்டாலும், அதைப் போதுமானதாக மாற்றிக் கொள்ள முடியும். அப்போது உண்மையான நிம்மதி கிடைக்கிறது.
நீங்கள் நினைக்கலாம், நான் சாமியாராக அத்தனையும் சொல்கிறீர்கள் என்று. சாமி யார் என்று தெரிந்துக் கொள்வதில் தான் இதில் முக்கியமாக இரு க்கிறது. சிறிது காலத்திற்கு பிறகு நீங்களே சாமியாராக மாறப் போகிறீர்கள். அதாவது சுவாமியாக மாறப் போகிறீர்கள். அதற்குத்தான் மனத்தைக் கட்டுப்படுத்த வேண்டும். மனம் கட்டுப்படுவது மூலம், இயமம், நியமம், ஆசனம், பிராணாயாமம், பிரத்தியாகாரம், தாரணை, தியானம், சமாதி என்ற எட்டு அங்கங்களின் வழியாக மிக அழகாக நம்மை சற்குரு ஸ்ரீபதஞ்சலி மஹரிஷி நகர்த்திச்செல்கிறார்.
கஷ்டப்படுத்தவில்லை, வேதனைப்படுத்தவில்லை, இதைக் கஷ்டம் என்று சொல்லவில்லை. ரொம்ப அழகாக சொல்லிக் கொண்டிருக்கிறார். ஆகவே இவன் நல்லபடியாக ஒழுகிக் கொண்டிருக்கிறான். நல்லவற்றைக் கடைப்பிடிக் கிறான் அடுத்தப்படியாக உடல்நலம் தேவை. உடல்நலம் இல்லாவிட்டால், ஞான நிலை எய்த முடியாது. ஞானம் எய்துவது என்று சொன்னால் இறைவனை நினைப்பதற்குக் கூட உடல் நன்றாக இருந் தால்தான் நினைக்க முடியும். தலைவலியோ, காய்ச்சலோ, உடல் உபாதைகளோ இருந்தால், ஒருவனால் தனக்கு நல்லது எதையும் சிந்திக்க முடியாது. தீயவைகளைப் பார்த்தால், வெறுப்பு வரும். வெறுப்படைந்த நிலையிலே, வியாதியோடுதான் இருக்க முடியும். அதுதான் உடல்கூறு சாஸ்திரம். ஆக வே உடலை சரிப்படுத்துவதற்கு ஆசனம் ஒன்றை சொல்லியிருக்கிறார். ஆசனத்தை சொல்லாத எந்த ரிஷிகளுமேயில்லை. ஆனால் என்ன ஆசனம், எத்தனை ஆசனம் என்றறெல்லாம் சொல்லவில்லை.
ஆசனம் என்று சொன்னால் இருக்கை என்று பெயர். இருக்கை என்று சொன்னால் அமைதியாக இருக்க எவ்வாறு உட்கார்ந்து இருக்க வேண்டுமோ அது இருக்கை. அதுதான் ஆசனம். ஆக ஆசனத்திலே எத்தனை வகையிருக்கிறது என்று பார்க்கிற போது யோகத்திற்கும் ஆசனத்திற்கும் சம்பந்தமி ருக்கிறது. அதாவது உடலில் எந்தப் பகுதியாவது வேலை செய்யாமல் இருந்தால், ஆசனத்தாலும், உணர்வினாலும், மனத்தாலும் அந்த பகுதியைச் சரிசெய்ய முடியும். உன்னுடைய பிராண சக்தி மேம்படும். பிராணசக்தி மேம்படுவதற்கு சாதாரண உடற்பயிற்சி செய்தால் போதுமே என்று நினைக்கலாம். ஆனால் உடற்பயிற்சி (உதுஞுணூஞிடிண்ஞு) என்பது நேரம் விரயம் தான் (ஙிச்ண்tஞு ணிஞூ tடிட்ஞு) அது புற அழகைத் தரும். அக உறுப்புகளுக்கு மேன்மையை தராது. அது ஆரோக்கிய மாக இருக்காது.
ஆசனம் செய்தல் என்றால் உன்னுடைய புற உறுப்புகளை வைத்து அக உறுப்புகளை மேம்படுத்துவது தான் பிரதான நோக்கம். அக உறுப்புகள் சரிய õகிவிட்டால், நீ ஒல்லியாகயிருந்தாலும் சரி, பருமனானலும் சரி, குட்டையாகயிருந்தாலும், உயரமாகயிருந்தாலும் சரி, அழகாகயிருந்தாலும் சரி, அழகில்லாமல் இருந்தாலும் சரி, நீ எந்த நிலையில் இருந்தாலும் சரி நீ ஆரோக்கியமாக இருப்பது மிக விசேஷமான காரியம். அது ஆசனத்தால் முத லில் செய்ய வேண்டியது. அது உன்னால் செய்ய முடியும். ஆகவே ஆசனங்களை ஒரளவு படித்தாக வேண்டும். ஆசனம் என்பது சாதாரணமாக தள்ளுபடியான விஷயமில்லை. அதனால் தான் யோகம் + ஆசனம் என்று ஆரம்பித்திலிருந்து சொல்லிக் கொண்டிருக்கிறோம். அதனால் தான் யே õகாசனம் என்பது அந்த ஆசனத்திற்கே யோகம் என்று எழுதிருக்கிறார். உடலிலுள்ள எந்தந்த எவ்வாறு அங்கங்கள் இருக்கின்றன அவற்றின் பலம், பலவீனம் என்ன என்று அறிந்து என்னென்ன வேலை செய்கிறது என்று பார்த்து அதற்கு ஏற்ப அந்த ஆசனத்தைச் செய்தால் போதும்.
ஆசனங்களைப்பற்றி சற்குரு சொல்லவில்லையே என்று கேட்காதீர்கள். அவர் யோகத்தின் அரசன். யோகம் செய்ய முதலில் உட்கார் என்று சொன்னார். அமர்தல் என்பது ஓர் ஆசனம். அது சுகமாயிருத்தல் வேண்டும். ஸ்திர சுகம் ஆசனம் என்றார் சற்குரு.
யோகவழியிலே சொல்லிக் கொண்டு வருகின்ற போது குறைந்தபட்சம் நாம் உடலில் கண் உறுப்பு எங்கேயிருக்கிறது என்று தெரிய வேண்டாமா. காது எங்கே என்றால்? அது எனக்குத் தெரியுமே? அது தெரிகிறது அது செய்யும் தவறுகள் தெரியவில்லை. உடலில் பாயு என்று ஒன்று இருக்கிறது. அது என்ன பண்ணுகிறது என்று உனக்கு தெரியாது. ஆகவே எந்தெந்த கருவிகளால் லாபமும், நஷ்டமும் ஏற்படுகிறது என்பதை ஆசனத்தின் மூலம் தெரிந்து கொண்டுவிட்டால், அந்த ஆசனத்தை பயன்படுத்தி நல்லவற்றை ஏற்று, தீயவைகளை அகற்றி, பலத்தைத் தருகிறது. ஆகவே இயமம், நிய மம், ஆசனம். அதற்குப் பிறகு ஜீவசக்தி (திடிtச்டூ ஞூணிணூஞிஞு) ஏற வேண்டும். அதாவது பிராண சக்தி. பிராண சக்தி என்றால் பிராணாயாமம். பிராணாயாமம் என்று சொல்வது மூச்சு விடுதல். மூச்சை ஒழுங்குப்படுத்துதல், எல்லோரும் மூச்சை விட்டுக் கொண்டுதானே இருக்கிறோம்.
ஆனால் ஒழுங்காக மூச்சு விடுகிறோமா என்று கண்காணிக்கத் தெரியுமா? நம்முடைய உணர்வுகளுக்கு தக்க மாதிரி மூச்சு மாறிக் கொண்டிரு க்கின்றன. ஒவ்வொருவிதமான மூச்சு வந்து கொண்டிருக்கிறது. நாமே உணர்கிறோம். எடுத்துக்காட்டாக அலெக்சாண்டருக்கு எப்போது பிட்ஸ் (வ லிப்பு) வரும் என்று தெரியும். அப்போது பாதுகாப்பான இடத்திற்கு சென்றுவிடுவான். அந்த உணர்வு பிட்ஸ் வருவதற்கு முன்பே உடலில் ஒரு விதமான மாற்றம் வரும். அதை வைத்துத் தெரிந்துகொண்டு விடலாம். ஆகவே உணர்விலிருக்கும் போதும், சிந்தனை செய்கின்ற போதும் அது உ ங்களுக்குத்தெரியும். பிராணாயாமத்தால், எல்லாவற்றிக்கும் ஆதாரமான உயிர்சக்தியினை அதிகப்படுத் தலாம். எந்த சக்தியும் வீணாகாது.
பிராணனை சரியான இடத்தில் வைத்துவிட்டால் கொஞ்சம் கொஞ்சமாக (எச்டிண) பலன் கிடைத்துவிடும். பலன் வந்துவிட்டால் இவனுக்கும் பலத்துக்கும் சம்பந்தமில்லை என்ற அளவிற்கு வந்துவிடும். நோய் என்பது எங்கேயிருக்கிறது என்று தெரியாமல் போய்விடும். நோய் என்பது இரண்டு வகையில் வருகிறது. ஒன்று சூழ்நிலையால், மற்றொன்று கர்மாவினால். சூழ்நிலையால் வருகின்றதைச் சரிப்படுத்திக் கொள்ளலாம். ஆனால் கர்மாவினால் வருவதை தீர்த்துக் கொள்ள முடியாது, ஆனால் தணித்துக் கொள்ள முடியும். பிராண வாயுவினால் நாளடைவில் பிராணாயாமத்தினால் குண இயல்புகள் மாறி விடுகின்றன. ஒருவன் ஒழுங்காகப் பிராணாயாமம் செய்தால், எல்லா குணங்களும் நேர்பட்டு விடும். முக்குணங்கள் என்று சொல்லக்கூடிய ராஜச, தாமச, சத்துவ ஆகிய குணங்களெல்லாம் பிராணாயாமத்தால், நேர் செய்யப் படுகிறது. எல்லாம் ஒருங்கிணைக்கப்படுகிறது. அடுத்து பிராணாயாமத்தில் பல உத்திகள், பல வழிகள் உன்னை தியானத்திற்குக் கொண்டு சொல்கிறது. பிராணாயாமம் என்பது (Oணஞு ணிஞூ ஞூச்ஞிtணிணூ).
அடுத்து பிரத்தியாஹாரம் என்பது தியானம் செய்வதற்கு அடிப்படையான விஷயம். பிரத்தியாஹாரத்தினுள் உன்னுடைய தியானப்பொருளை வைக்க வேண்டும். அது எதுவாக இருந்தாலும் வைத்துக் கொள்ளலாம் என்று பலமுறை உங்களுக்குச் சொல்லி விட்டேன். ஆகவே நீ தியானப்பொ ருளைத் தீர்மானித்து அதன்படி செய்து விட்டுப் பிறகு ஒழுங்குபடுத்தி நிறுத்துவது.
அடுத்து தாரணை, தியான சித்தி, சமாதி சித்தி, கைவல்ய சித்தி. மிக அழகாக நான்கு வார்த்தைகளிலே யோகத்தை முடித்து யோக முன்னேற்றத்தைச் சொல்லி விட்டேன். அவ்வளவு எளிதல்ல. கொஞ்சம் கொஞ்சமாக கொண்டு வர வேண்டும். அப்படி கிடைத்து விட்டால் பேரின்பத்தை அடைய முடியும். அது அவர்களால் மட்டுமே உணரப்பட்டதாயிருக்கும். பலனை உணர்ந்தவர்களாக இருப்பார்கள். நீங்கள் சூத்திரங்களைப் படித்தால் ÷ பாதாது அதை வாழ்க்கையிலே எவ்வாறு கடைபிடிப்பது, எவ்வாறு நடப்பது, எவ்வாறு கைக்கொள்வது (அணீணீடூதூ தூணிதணூ டூடிஞூஞு ) அறிந் தால் யோகத்திலே வெற்றி பெற்று விடலாம். அதுவே யோகத்திற்கு (ஓஞுதூ) சாவியாக அமையும். யோகச் சித்தியும் வந்துவிடும். ஏற்கனவே சொன்ன பாடத்தைத்தான் சொல்கிறேன் ஒரு மனிதன் மனிதனாகப் பிறப்பதே பெரும் பாக்கியம். அதில் ஔவை சொன்னது போல் கூன், குருடு, செவிடு, பேடு நீக்கி பிறப்பது அரிது. அந்த அளவு இறைவனால் நாம் புண்ணியத்தைப் பெற்றிருக்கிறோம். அதுமட்டுமல்ல அரிய மெய்ய ன்பர்களின் கூட்டு, ஒருவருக்கு ஒருவர் மிகுந்த பக்தியும், ஆழமான இறைநம்பிக்கையும், பத்துபேர் சேரும் போது ஒருவருக்கு ஒருவர் பகிர்ந்து கொள்ளப்படுவர். இதனை உணர்ந்து அந்த நேரத்தில் நல் உணர்வை நீங்கள் ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். இறையை சிந்தியுங்கள், குருவை வழிபடுங்கள். உங்களுக்கு எல்லாம் கிடைக்கும்.
மானிடப் பிறவியில் கானகத்திலோ, வெறும் பாலைவனத்திலோ, பனி சூழ்ந்த மலைப்பகுதிகளிலோ, நாம் பிறக்கவில்லை. அங்கே நாம் வாழவுமில்லை. நம்மை சமதட்பவெப்பச் சூழ்நிலையிலே பிறக்க வைத்திருக்கிறான் இறைவன். ஆகையால் நாம் பெரும் புண்ணியம் செய்திருக்க வேண்டும். அமைதியான சூழ்நிலை கொண்ட நம் தென்னாடு ஒரு ஞானபூமி. நீ நன்றாகச் சிந்தித்துப் பார்த்தால், ஞானத்திற்கு அத்தனை வழிகளும் இங்கிருந்தே கிடைக்கும். ஆனால் யாரும் அதைச் சிந்திக்கவில்லை. நாம் சிந்திக்காத வரை, நம் புகழை நாமே தெரிந்திருக்காத வரை, நம்முடைய உலகிற்கும், நம்முடைய பகுதிக்கும் என்ன மரியாதையிருக்கிறது. இங்கே என்ன சக்தியிருக்கிறது என்பதை நீ புரிந்துகொள்ளாத வரை, அதுவரைக்கும் உனக்கு அது கிடைக்காது.
உதாரணத்திற்கு மதுரை ஒரு கந்தக பூமி என்று. இவ்வாறு ஒவ்வொரு ஊரும் ஒரு தன்மையைப் பெற்றிருக்கிறது. இங்கு அடிப்படைத் தாதுக்கள் இ ருக்கிறது. பஞ்ச பூதங்களில் ஒன்றாக இருக்கிறது. ஆகவே கவலைப்படவேண்டாம். எங்கிருந்தாலும் உன் உடல் அந்தச் சூழ்நிலைக்கு ஏற்ப மாறிவிடும். எப்படி நாம் துன்பத்திலிருந்து கொண்டு சந்தோஷமாக நம்மை மாற்றிக் கொள்ளவில்லையா? அது போலத்தான். தானம் செய்தும், தனம் பெற்றும் இந்தப் புண்ணிய பூமியில் சற்குரு பதஞ்சலியின் வாக்கும், ஆசியும் பெற்று, மேலும் மேலும் இந்தப் பிறவியில் ஒரு புண்ணியத்தை அடைந்தோம். முக்குணங்களின் பரிமாணம், அல்லது பகிர்மானம் நியதியிலே, சத்வ குணங்கள் சேர்ந்து தேவ உடலை உண்டாக்கும் போது அதில் சத்வ குணம் மேலோங்கியிருக்கும். இது எந்த அளவுக்கு இருந்தால் தேவ சாகரம் கிடைக்குமோ அது கிடைக்கும். ஒரு நந்திகேஸ்வரர் சாதாரண மனிதராக இருந்து தேவ சாகரம் எடுத்தார் என்பதை இனி வருங்காலங்களில் கைவல்ய பாதத்தில் நாம் பார்க்க இருக்கிறோம்.
ஆகவே நற்செயல்களைச் செய்து பிராரப்த கர்மாவை இந்தப் பிறவியிலே கழித்து, இந்த நல்ல சந்தர்ப்பத்தை நழுவ விடாமல் பார்த்துக் கொள்ள ÷ வண்டும். நமக்கு ஒவ்வொரு குணங்கள் மேலெழும்புகின்ற போதும் நாம் பாவ, புண்ணியங்கள் செய்ய முற்படுகிறோம். இந்த உலகிலுள்ள எல்லா ஜீவர்களுக்கும் முக்குணங்களின் கலப்பு இல்லாமல் பிறப்பதில்லை என்று கீதையில் கண்ணன் கூறுகிறார்.
இறையுணர்வை மையப்படுத்தி. புலனுணர்வுகளைக் கட்டுப்படுத்துங்கள். அறிவினால் அறிவினை இயக்கி, நல்லறிவு எதுவென அறிந்து, புத்தியி னால் அதைத் தீர்மானித்து, சித்தத்தில் பதிவு பெற்ற எண்ணிலடங்கா தேவையற்ற விஷயங்களை ஒழிப்பதோடு, மேலும் அது போன்ற சித்த விரு த்திகளை வளரவொட்டாது, செய்யுங்கள். மேற்சொன்னவைகள் யாவும் இறைவனைச் சேரும் தவிப்பினாலும், வைராக்யம், (திடசிந்தை) பெற்றிரு த்தலால் மட்டுமே சாத்தியப்படும். இதற்கு உன்னை தகுதியாக்கிக் கொள்ள தொடர் பயிற்சியினால் மட்டுமே அதனை அடையச் செய்ய முடியும்.
சற்குரு மனதில் நீ இடம் பிடிக்க வேண்டுமாயின் உன் துடய்மையான மனத்தை அவரிடம் நிபந்தனை, எதிர்பார்ப்பு இன்றி சரணடையச்செய். அப்÷ பாது அவர் உன்னை அன்புடன் ஏற்றுக் கொண்டு, சாட்சியாக இருக்கும் உன் ஆன்மாவே நீ என்பதை நீயே அகவுணர்வால் அறிந்து விடும்படி, உன்னை இறைவனோடு சேர்த்து விடுவார். அப்போது தான் உன் பிறவி நோய் விலகி நீ வேறு இறைவன் வேறு என்றில்லாது இணைதல் என்ற யே õகம் கிட்டுகிறது.
இவற்றிற்கெல்லாம் சற்குரு ஸ்ரீ பதஞ்சலி மஹரிஷியின் யோக சூத்திரம் மட்டுமே உதவும்.
முயற்சி செய்வாய் - வெற்றி பெறுவாய்
பயிற்சி செய்வாய் பலனடைவாய்
சத்குரு பாதம் போற்றி போற்றி
- திருச்சிற்றம்பலம்
ஆசிரியர்:
குருஜி. டி. எஸ். கிருஷ்ணன்
ஸ்வார்த்தம் சத் சங்கம்,
மகரிஷி ஸ்ரீ பதஞ்சலி யோக கேந்திரம்,
பழங்காநத்தம், மதுரை.